✨திருடியே! மேரி மீ மேரி மீ-11✨

46 1 1
                                    

அத்தியாயம் 11:

யாதவ் வெகு நாள் கழித்து அன்று நல்ல உறக்கத்தில் இருந்தான். பொதுவாக அவன் ஒரு நாளில் மிஞ்சி போனால்‌ மூன்று மணி நேரங்கள் தூங்குவதே அரிது தான்.. அவனுக்கு க்ரோனிக் இன்சோம்னியா(chronic insomnia) என்ற மன அழுத்தம் காரணமாக உண்டாகும் தூக்கமின்மை பிரச்சனை இருந்தது.

அதனால் அவனால் இரவில் சரியாக உறங்க முடியாது. அப்படியே தூங்கினாலும் மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக தூங்க முடியாது. அதற்காக ட்ரீட்மென்ட் எடுத்து மாத்திரை மருந்துகளை உட்கொண்டாலும் அது ஓரிரு வாரங்களுக்கு மட்டுமே அதன் பலனைத் தந்தது. அதனால்அந்த முயற்சியை கைவிட்டவன், நாள் போக்கில் தனது தூக்கமின்மை சார்ந்த பிரச்சனையை தனது வேலையில் கவனத்தை செலுத்தி ஒதுக்கி விட்டான்.

ஆனால் நேற்று ஏனோ அதிசயமாக அவனுக்கு நல்ல தூக்கம் வர, இரவு ஒரு மணிக்கு போல் தூங்க ஆரம்பித்தவன், இதோ ஆறு மணி வரையும் தூங்கி கொண்டிருக்கிறான். அவனுக்கு பெரும்பாலும் கனவுகள் என்பது வராது. அவன் தூங்குவதே மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரங்களோ மூன்று மணி நேரங்களோ.. இதில் எங்கிருந்து கனவுகள் வர... ஆனால் இன்று அவனுக்கு ஒரு வித்தியாசமான கனவு வர அதில் ஊஞ்சலில் ஆடியவாறு ஒரு இளம் பெண் இருக்க,
அந்த ஊஞ்சல் கயிறு கட்டி இருந்த மரத்தின் கிளைகளின் மேலேயே வேடன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் கிளைகளுக்கு நடுவே முகத்தை மறைத்துக் கொண்டு கீழே ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த அந்த பெண்ணை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது கண்களில் அவ்வளவு ரசனை! எதுவரை என்றால்..அந்த பெண் காதில் போட்டு இருந்த பெரிய ஜிமிக்கி, அவள் உதட்டிற்கு நுனியில் இருந்த மச்சம் .. ஊஞ்சலை உந்தி விளையாடும் பொழுது அவள் காலோடு கதை பேசிய கொலுசு,கையில் சிணுங்கிய வளையல்கள் தலையில் சூடி இருந்த கனகாம்பரம் பூ, அவள் நெற்றியில் அரை வட்ட நிலவாக ஜொலித்த பொட்டு முதற்கொண்டு அவன் ரசிக்க, ஏனோ கனவில் பார்த்த பெண்ணின் முகம் மட்டும் யாதவ் கண்களுக்கு ரொம்பவே மங்கலாக தான் தெரிந்தது...

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 05, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

திருடியே! மேரி மீ! மேரி மீ!Where stories live. Discover now