✨திருடியே! மேரி மீ மேரி மீ-5✨

17 0 0
                                    

அத்தியாயம் 5:

"சீத்து எனக்கு நெஞ்சுக்குள்ள திக்கு திக்குன்னு இருக்கு டி கண்டிப்பா நம்ம இவ்வளவு இறங்கி போய் ரிஸ்க் எடுக்கணுமா ?"என்று பாவமாக கேட்ட பூபதியை பார்த்த முறைத்தாள் சீதா.

"டேய் கருவாயா உன்னோட தொங்கச்சி கல்யாணம் நடக்கணுமா? வேண்டாமா? "

"நடக்கணும் தான் ஆனாலும் எனக்கு பயமா இருக்கே சீத்து"

"டேய் டர்ரு பீசு ... பயமா இருந்தா போய் நடு ரோட்ல நில்லு லாரி ஏத்தினு போகும்...உனக்கு போய் எவன்டா கருப்பு பாகுபலின்னு பேரு வச்சா? அந்த கருமம் புடிச்சவன் மட்டும் என் கைல கிடைச்சா கைமா தான்"

"ஏன் சீத்து நீயும் கோபப்படுற? உன்ட்ட கேக்காம நான் யாராண்ட போய் கேப்பேன்"

"இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. இந்த செண்டிமெண்ட்டு மட்டும் கொடம் கொடமா கொட்டும்..வேற ஒன்னும் நொட்டாது.. சரியான தொட நடுங்கி பய"

"சீத்து... ஆனாலும்... எனக்கு என்னமோ.. ஒரு மாதிரி"என்று விடாமல் அவன் ஏதோ சொல்ல வர,

"எப்பாடா டேய் ...ஏண்டா இந்தா வரத்துக்கு வார ..சும்மா நொய்யி நொய்யின்னு வராத. கோவம் வந்தா ஓங்கி செவில்ல விட்டுருவேன்.. அப்றம் காது கொய்யின்னு தா கேட்கும்"

"எப்பா ரெண்டு பேரும் தயவு பண்ணி சண்டையை விட்டு தொலைங்க.. நமக்கு இப்போ தொழில் தான் முக்கியம்" என்று இருவரையும் எச்சரித்தான் அவர்களின் சண்டையை அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குட்டி யானை ரவி.

"ஆமாக்கா சீக்கிரம் பிளான் என்னது ன்னு சொல்லு?'இன்று குட்டிப் புலியும் கேட்க,

"சரி சரி பொங்காதீங்க பிளான் என்னன்னு டீடைலா சொல்றேன்"என்ற சீதா"அதுக்கு முன்ன.. டேய் பூவு நான் பேசும்போது வாய பொத்தினு இருக்கணும் புரிஞ்சுதா? இல்லாட்டி மொகறையை பேத்துடுவேன்" என்று எச்சரித்து விட்டு சொல்ல ஆரம்பித்தான்.

"இப்ப நம்மளாண்ட ஃபிளான் என்னன்னா நான் மண்டபத்துக்குள்ள பியூட்டி பார்லர் பொண்ணுங்க கூட உள்ளக்க போய்டுவேன்...
கிரிஜா நீ மண்டபத்துல டீ காபி கூல் ட்ரிங்ஸ் குடுக்குற ஆட்களோட ஜாயின் அடிக்க போற...
அப்புறம் பூவு நீ மீசை மருவு எல்லாம் வச்சு மாறுவேஷத்துல  பாடி கார்ட் கெட்டப்ல அவங்களோட மிங்கிளாகிடுற... குட்டி புலி நான் சொல்ற டைமிங்ல நீ மண்டபத்துல உள்ள சிசிடிவி கண்ட்ரோல் ரூம் குள்ள போய் ஆகணும்... நீ எந்த கெட்டப்புல போவியோ அது உன்னோட இஷ்டம் ...
அப்பறம் ரவி அண்ணே நீங்க அங்க சமையலுக்கு தேவையான பொருள மண்டபத்துக்கு கொண்டார்ற குட்டி யானை டிரைவரு... நான் கிரிஜா பூவு குட்டி புலி நாலு பேரும் மட்டும் தான் மண்டபத்துக்குள்ள இருப்போம்.. நீங்க நாங்க வந்ததும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மண்டபத்தை விட்டு வெளியே போகணும்."

திருடியே! மேரி மீ! மேரி மீ!Where stories live. Discover now