✨திருடியே! மேரி மீ மேரி மீ-9✨

13 1 0
                                    

அத்தியாயம் 9

மறுநாள் காலை இனிமையாக விடிய, திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடந்து கொண்டிருந்தது.

முகூர்த்தம் நேரம் ஒன்பதரைலிருந்து பத்தரை வரை குறிக்கப்பட்டு இருக்க, மணவறை அலங்காரத்தில் இருந்து சமையல் வேலை வரை எல்லாமே தாமதம்...

காரணம் விடியலிலேயே ஆரம்பிக்க வேண்டிய வேலை விடிந்த பின்னே ஆரம்பித்தது தான்... அப்படியே மொத்த மண்டபமும் தூங்கிவிட்டது போல யாரும் யாரையும் குறை சொல்ல முடியவில்லை. வேலை வாங்குபவனே தூங்கி இருக்க, அவனுக்கு கீழே வேலை செய்பவனை என்ன சொல்வான்?

ஒட்டுமொத்தமாக அனைவருமே எப்படி தூங்கி இருக்க முடியும்? என்று சந்தேகம் வராமல் இல்லை.

இரவு உண்ட உணவில் தான் ஏதோ பிரச்சனை.. என்று மண்டபத்தில் வேலை செய்பவர்கள் மூலம் கசிய ஆரம்பித்தது.பின்னால் மண்டபத்தில் பேய் உலாவருவதால் இப்படி ஆயிற்று என்றும் பரப்பப்பட்டது.

திருமணத்தை நடத்தும்
ஏஜென்சி புகழ்பெற்றது என்பதால் வெளியில் இதெல்லாம் வெளியே வெளியேதெரிந்தால் தங்களுக்கு நல்லதல்ல என்று முடிவு செய்தவர்கள் இன்னும் நிறைய ஆட்களை வரவழைத்து வேக வேகமாக மற்ற வேலைகளை முடித்தனர்.

மண்டபம் முழுவதும் விருந்தினர்களின் ஆர்ப்பாட்டமும் சொந்த பந்தங்களின் சுகபோக பேச்சும் நிரம்பி இருக்க மணமேடையில் அமைதியின் உருவமாக அமர்ந்திருந்தான் யாதவ் ஜிதேந்திரன். அவனின் முன்னால் ஹோமகுண்டத்தில் அக்னி தீப்பிழம்பாக சுடர் விட்டு எறிய ஐயர் கூற சொல்லும் மந்திரத்தை கூறியபடி அமர்ந்திருந்தான்.

அது மண்டபத்தில் இருந்த மிகப் பெரிய எல் இ டி ஸ்க்ரீனின் டிஸ்ப்ளேயில் லைவ்வாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

கோபாலகிருஷ்ணன் யமுனா இருவரும் தங்களின் மகனின் கம்பீரத்தை எண்ணி மகிழ்ச்சியுடன் அவனை பார்த்திருக்க, தாயம்மாள் தன் கணவரை போன்ற சாயலில் மண மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்த பேரனை கண்கலங்க பார்த்திருந்தார்.

திருடியே! மேரி மீ! மேரி மீ!Where stories live. Discover now