22 உரிமை

Start from the beginning
                                    

"வீட்டை விட்டு துரத்தினாங்களா?" என்றான் குழப்பத்துடன் முகத்தை சுருக்கி படி.

"ஆமாம். இவங்க தான், என்னையும் எங்க அம்மாவையும் வீட்டைவிட்டு அனுப்பினாங்க"

"யாரு உங்க அம்மா? அவங்க பெயர் என்ன?" என்றார் சாவித்திரி.

"கோப்பெருந்தேவி..."

"என்னது..? கோப்பெருந்தேவியா? உங்க அப்பா பேர் என்ன?"

"சிவராமன்"

"அப்படின்னா, நீ பொம்மியா?" என்றான் விக்ரம்.

"என்னோட அப்பா என்னை அப்படி தான் கூப்பிடுவாரு"

"பொம்மி..." என்று சந்தோஷமாய் அவளை அணைத்துக் கொண்டார் சாவித்திரி.

தனது கையிலிருந்து அனைத்தும் நழுவி விட்டதை தெள்ளத் தெளிவாய் உணர்ந்தார் நந்தினி. காமினி கோபத்தில் நறநறவென பல்லைக் கடித்தார். அவரது பேத்தி ரோஷினியோ 'என்ன நடக்கிறது இங்கு?' என்பது போல் நின்றிருந்தாள். 

சரியாக அதே நேரம் வீட்டினுள் நுழைந்தார் விமலாதித்தன். விக்ரம் திருமணம் செய்து கொண்ட அதே பெண் அங்கு நிற்பதைப் பார்த்து அவர் பிரமித்தார்.

"சாவித்திரி... இந்த பொண்ணு...? காமினி ஆன்ட்டி அழைச்சிகிட்டு வந்தாங்களா?" என்றார் ஆவலாக.

"இல்ல. நம்ம சின்னா தான் கண்டுபிடிச்சான்"

"நெஜமாவா? அப்படின்னா ஜோசியர் சொன்னது உண்மையா ஆயிடுச்சு" என்றார் குதூகலமாக.

"ஆமாம். ஆனா அது இவ்வளவு சிக்கரம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கல"

"இவ வேற யாரும் இல்ல. நம்ம சிவராமன் அங்கிளோட பொண்ணு பொம்மி தான், டாட்" என்றான் விக்ரம்.

"என்னது...? நிஜமாவா? நீ சிவராமனோட மகளா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் வைஷாலி.

"எனக்கு தெரியும். எங்க அம்மா ஏதாவது செஞ்சா, அது எப்பவுமே நல்லதா தான் முடியும்" என்றார் பெருமையுடன்.

"ஆனா, எதுக்காக அவங்க எங்களை வீட்டை விட்டு அனுப்பினாங்க, எதுக்காக எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்கன்னு எனக்கு புரியலையே..." என்றாள் வைஷாலி பாவமாக.

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Where stories live. Discover now