14

2 1 2
                                    

"என் கடைசி வரம் என்னனா என் அத்தை பழையபடி மாறனும்னா அவங்கள சரியாக்க வேண்டாம்...என் சுபாவ பழையபடி மாற்றினாலே போதும். என் அத்தை சரி ஆகிடுவாங்க...அவங்களுக்கு சுபாவ பழைய படி பார்த்தால் எல்லா நோயும் போகும்...இதுதான் என் வரம்...."என்று நினைக்க உலகமே அதிரும்படி சத்தம் கேட்டது..
ஒரு மின்னல் ஒளி வந்தது.
அந்த மோந்திரம் அவள் விரலில் இருந்து மறைந்தது...
காகிதத்தில் "எல்லோருக்கும் அவங்க குழந்தைங்க எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்கணும் தான் ஆசை.......எல்லா குழந்தைகளும் பெஸ்ட் குழந்தைகள் தான் .....ஆனால் எல்லாத்துலயும் எல்லாராலும் பெஸ்ட் ஆக இருக்க முடியாது,........உன்னாலயும் முடியாது....என்னாலயும் முடியாது.......அதனால தான் குழந்தைகளுடைய  பெஸ்ட்ட கண்டுபிடித்து அவங்கள பெஸ்ட் ஆக்குறவங்க பெரன்ட்ஸ்ஸ  தி தி பெஸ்ட் பேரன்ட்ஸ்.....நீயும் தி தி பெஸ்ட் அம்மாவா மாறுவனு  நினைக்கிறேன்......"என்று காகிதத்தில் வர
" கண்டிப்பா ...."

"நான் உன்னை மதிக்கனும் நினைக்கல....உன் கூடவே இருக்கணும் ஆசைப்படல.....நீ நல்லவன்னு நினைக்கல....ஆனா அதெல்லாம் நடந்து விடுமோ என்று பயமாய் இருக்கு ......"என்று எழுத்துக்கள் வந்தன(இப்போ மாதவன்  பேன் ஆகிடுச்சு காகிதம்🤗)

"ஒரே சினிமாதான் போல....மாதவன் டயலாக்கை மாற்றி சொல்ற....."என்று சிரித்தாள் ஷாலினி .
"ஆமா ஏன் இப்ப இந்த டயலாக்? "
"நான் இப்ப இங்க இருந்து போக போறேன்? "
"எங்க? "
"என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுதான்.....!"
"அப்ப என்ன? "என்று அவள் புருவத்தை உயர்த்த
"இருந்தாலும், என்னால் உன்கிட்ட சொல்ல முடியாது! "
"எங்க போறனு நீ சொல்ல மாட்டியா? சரி நீ எங்க இருந்து வந்தனு சொல்லு...."
என்று அவள் கேட்க" நீ புத்திசாலி தான்! என்னையே மடக்குற ..ஆனால் அதெல்லாம் ரகசியம்.... நான் வரேன்😣😖😫🥺😭" என்று கண்ணீர் விடும் எமோஜி கலை காண்பித்து மறைந்தது. . .(ஏ!!!காகிதம் உன்னால தான் என் ஸ்டோரி ரீடர்ஸ் சந்தோஷமாக படிக்கிறாங்க....நீயும் என்ன விட்டுட்டு போகிட்டியே😥.

🎶🎶கண்டா வரச்சொல்லுங்க 🎶🎶🎶

🎶🎶🎶என் காகிதத்தை கையோட கூட்டி வாருங்க 🎶🎶🎶)

🎶🎶 உசுறே விட்டு போகிட🎶🎶
🎶
🎶🎶 மணச வெட்டி வீசிட்ட 🎶🎶
🎶யார் தந்த காயமோ🎶🎶🎶

என்ற பாடல் அவர் மனதில் ஒலித்தது ....
"என் வாழ்க்கையை நீ மாற்றிவிட்டாய் ...."என்று ஷாலினி கண்ணீரைத் துடைத்தாள் ....

சுபாவிடம் சென்ற ஷாலினி சுபாவை பார்த்து" தூங்கு மா..." என்றால்
"அம்மா நானும் பாட்டியை பார்க்க வர...." என்று அவள் கேட்க ஷாலினி பக்கத்து வீட்டு குயிலிடம் "கிருஷ பாத்துக்கோங்க நான் இவளை கூட்டிட்டு போறேன் ..."என்று சொல்லிவிட்டு சுபாவை அழைத்துக்கொண்டு சென்றார் 
ஆஸ்பிட்டலில் டாக்டர் இளவரசனிடம்" உங்க அம்மாவுக்கு இப்ப கொஞ்சம் சிரியஸ்ஸாதான் இருக்கு...." என்றார்
"நாங்கள் பார்க்கலாமா?" என்று அங்கு வந்த ஷாலினி கேட்க டாக்டர்
"டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க ...."என்று சொல்லி சென்றார்..
ஐ சி யு வாட் உள்ள மூவரும் நுழைந்தனர்.
" ஐ அம் சாரி..." என்று அழுதாள் சுபா 
"நான் தெரியாம பண்ணிட்டேன் பாட்டி... இனி நான் இப்படி பண்ண பண்ண..." என்று திக்கி "மாட்டேன் பாட்டி ..என்னை மன்னிச்சிடுங்க..." என்று அழுதாள் .அவள் தோள் மீது கை வைக்க "அம்மா ...".என்று அவளை கட்டி தழுவினாள்.அப்பொழுது கோகிலாவின் கை விரல் லேசாக அசைந்து...

டாக்டரை அழைத்து வந்து காண்பிக்க "நீங்க வெளியில் போங்க நான் பார்க்கிறேன்" என்றார்.....

வெளியே வந்த டாக்டர் "அவங்களுக்கு பரவாயில்லை... நார்மல் ஆகிட்டாங்க.. டூ ஹார்ஸ்ல கண்  முழிச்சிடுவாங்க... நீங்க யாராவது ஒருத்தர் இங்க இருங்கலாம்.... மத்தவங்க போகலாம்..." என்றதும் இளவரசன் இருப்பதாக சொன்னான். ஷாலினி சுபா உடன் வீட்டிற்கு வந்தார்.
ஷாலினியின் மடியில் சுபா உறங்கினாள்..

காலை விடிந்ததும் ஷாலினி படுக்கையிலிருந்து எழுந்தாள்...அப்பொழுது தன் எதிரில் நின்ற சுபாவை பார்த்து அதிர்ந்தாள்...
( திரும்பவும் கிருத்திகாவா மாறிட்டாளா? இல்லை இதெல்லாம் கனவா? என்ன நடக்குதுனு நாம அடுத்த பாகத்தில் பார்க்கலாம் 🤓)

Next kadaisi athiyayam...miss Panama padinga

இவளை போலTempat cerita menjadi hidup. Temukan sekarang