இவளை போல 2

5 2 0
                                    

நான்கு வருடம் உருண்டோடியது. சுபத்திரை வளர்ந்தால் ஆனால் அவளின் பேச்சு திறமை வரவில்லை. அவள் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை. எத்தனையோ மருத்துவர்களையும் ஷாலினி பார்த்தாள். ஆனால் எல்லோர் சொன்னதும் ஒன்றுதான். 'சுபத்திரை கண்டிப்பாக பேசுவாள்' என்பது தான். ஷாலினியை பார்க்க கிருத்திகா உடன் வந்தால் கங்கா. வீட்டிற்குள் நுழைந்த கங்காவை கட்டி தழுவினால் சுபத்திரை. "அம்மா எங்கே?" என்றால் கங்கா  ஷாலினி இருக்கும் திசையை நோக்கி கைகளை காட்ட சுபா முற்படும்போது "உன்னால பேச முடியாது என்பதை அடிக்கடி மறந்துடுறன்." என்று கூறினாள். சமையல் அறையிலிருந்து கைகளை துடைத்துக் கொண்டு வந்த ஷாலினி அந்தச் சொற்களைக் கேட்டு மன அழுத்தத்திற்கு உள்ளானாள்.
" என்ன திடீர்னு வந்து இருக்க?"
"  சும்மா தான்.ஷாலினி கோகிலா அம்மா எங்கே போயிருக்காங்க? ரொம்ப நாளாக ஆளையே காணோம்!"
" அவங்க பொண்ணு வீட்டுக்கு போயிருக்காங்க.'
"ம்மம். நான் கிருத்திகாவ யு.கே.ஜி. சேர்க்கலாம்னு இருக்கேன். இவள் நல்லா பேசுறாள். நல்லா படிக்கிறாள்.அதனால மெட்ரிகுலேஷன்ல இருந்து சிபிஎஸ்சி சேர்க்கலாம் இருக்க."
"4 வயசுதான ஆகுது. அதுக்குள்ள நல்லா படிக்கிறாள் என்று சொல்ற."
"சின்ன வயசுல தான் குழந்தைக்கு நல்லா மூளை வளருமா ?ஏபிசிடி எல்லாம் நல்லா சொல்றா... சுபத்திரையால தான் சொல்ல முடியாது. எழுதவாவது செய்றாளா இல்லையா?"
தன் குழந்தையும் கிருத்திகா போல் பேசினால் நன்றாக இருக்கும் என்று ஷாலினி எண்ணினாள். ஷாலினியின் மனம் நொருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சுபத்திரையும் கிருத்திகாவும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது சுபத்திரை கிருத்திகாவை பிடிக்க முயன்றபோது கிருத்திகா கால் தடுக்கிக் கீழே விழுந்தாள். மனம் உடைந்த ஷாலினிக்கு பூத்தொட்டி உடைந்து விழும் சத்தம் கேட்டு ஓடினாள். கிருத்திகா அழுது கொண்டிருந்தாள்  கங்கா கிருத்திகாவை தூக்கினாள். புருவத்திற்கு மேலே சிறு கீரலுடன் ரத்தம் வந்தது.
" எப்படி விழுந்த?" என்று கங்கா கேட்கும்பொழுது "அக்கா..." என்று குழந்தை அழுதது.
கங்கா சுபத்திரையை பார்த்த பார்வையில் ஷாலினி சுபாவை அடித்தாள்.சுபத்திரை அழுது கொண்டே உள்ளே சென்றாள்.
" ஸ்கூல் அட்மிஷன் எப்ப ஸ்டார்ட் பண்ணுவாங்கன்னு தான் கேட்க வந்த .சரி நான் அப்புறம் வரேன்!" என்று கங்கா கிருத்திகாவை தூக்கிக்கொண்டு சென்றாள்.சுபத்திரையின் நிலை எண்ணி  ஷாலினி  மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அழுது கொண்டே வந்த சுபத்திரை ஷாலினியின் கையை பிடித்தாள்.
"நீ மட்டும் இப்படி இருக்க ? "என்று சுபத்திரையை பார்த்து கூறினால் ஷாலினி. "அம்மா... அம்மா" என்று சுபத்திரை தன் கையில் கல் பொத்தி இரத்தம் வந்த கையை காண்பித்தாள்.
" என்ன சொன்ன? அம்மாவா?  திரும்ப சொல்லு ?"
"அம்மா..."
" அப்பா என்று சொல்" 
" அப்பா..." என்றாள் சுபா.
சந்தோஷத்தில் ஷாலினி சுபத்திரையின் தலையை தடவிய போது மண் இருந்தது.  நெற்றியிலையும் மண் ஒட்டி இருந்தது. சந்தோஷத்தில் உறைந்திருந்த அவளுக்கு கற்கள் கைகளில் குத்திய போது தான் நிஜத்திற்கு வந்தாள். 
"நீயும் கீழே விழுந்தியா?"
என்று குழந்தையின் கைகளில் இருந்த அடியை பார்த்துக் கேட்டாள்.
இவளும் தடுக்கிக் கீழே விழுந்தாள் .
அதனால் "ஆமா" என்று குழந்தை தலையாட்டியது. குழந்தைக்கு மருந்து வைத்து விட்டு குழந்தை பேசும் இனிய செய்தியை யாரிடம் கூற வேண்டும் என்று தெரியாமல் முதலில் கோகிலாவுக்கு போன் செய்தாள். இனிய செய்தி கேட்டவுடன் வீட்டுக்குத் திரும்புவதாக கூறினாள் கோகிலா.....

படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க..

இவளை போலWhere stories live. Discover now