விஷயம் அறிந்து வீட்டிற்கு வந்த இளவரசன் சுபத்திரையை  தூக்கிக்கொண்டு "அப்பா அப்பா.." சொல்லு என்றான். "அப்பா..." என்று சுபா  சொன்னதால்  சந்தோஷத்தில் அவளை தூக்கிச்சுற்றினான்.
"பாட்டி சொல்லு.... பாட்டி!!!! பாட்டி! சொல்லுமா" என்றால் கோகிலா .
சுபத்திரை "பாட்டி!" என்றாள்  .

"இவள் மட்டும் ஏன் இப்படி இருக்கானு நான் ரொம்ப கஷ்டப்பட்டன்.நல்ல  வேலை பேச ஆரம்பித்து விட்டாள்"என்று கையில் வைத்திருந்த பாயாசத்தை அனைவருக்கும் கொடுத்தாள் ஷாலினி.

"நாளை வருகிறேன்!" என்று சொல்லி சென்ற கங்கா கிருத்திகாவுடன் வந்தாள்.
"ஷாலினி "
"எப்படிமா இருக்க? என்ன கிருத்திகா நெற்றியில் அடிபட்டு இருக்கு ?"என்று நலம் விசாரித்த கோகிலாவிடம்
"உங்கள் பேத்தி தான் தள்ளிவிட்டுடா  "
"அவள் என்ன வேணும்னு தள்ளி விட்ட மாதிரி சொல்ற.... விளையாட்டுல விழுந்திருப்பா?" என்று கோவமாக சொன்னாள் கோகிலா .
"அத்தை !நான் உள்ள பால் வைத்திருக்க போய் பாருங்கள "என்று கோகிலாவை திசை திருப்பினாள்  ஷாலினி. கோகிலா உள்ளே சென்றாள். "சொல்லு கங்கா! ஆ!!! ஞாபகம் வந்தது !ஸ்கூல் அட்மிஷன் நாளைக்கு ஸ்டார்ட் பண்றாங்களாம். கிருத்திகா கிட்ட சும்மா 2 கொஸ்சன்ஸ் கேட்பாங்க ...ஏபிசிடி.. அதெல்லாம் கேட்பாங்க  அவ்வளவுதான்" என்றால் ஷாலினி.
" அப்படியா !அப்ப சுபத்திரை கேட்ட கொஸ்டினுக்கு எல்லாம் எப்படி ஆன்ஸர்  பண்ணா? அவளக்கு தான் பேச வராதே ! எனக்கு கவலை இல்லை ஏனென்றால் கிருத்திகா நல்லா பேசுறா .எல்கேஜிலையே போட்டியிலலாம் கலந்துக்குனு  சர்ட்டிஃபிகேட் வாங்கியிருக்கா. அதெல்லாம் காண்பித்தால்  அவளை ஈசியாக சேர்த்து பாங்க" என்று கர்வத்துடன் கூறினாள் கங்கா.  ஒவ்வொருவரும் தன் குழந்தை மற்ற குழந்தைகளை  விட சிறந்தவள்  என்று நிரூபிக்க தன் குழந்தையை பெருமையாகக் கூறுவர். கிருத்திகாவின் திறமை பற்றி கங்காவின் பேச்சு ஷாலினிக்கு சிறு பொறாமை ஏற்படுத்தினாலும் அதனை வெளிக்காட்டாமல், "சொல்ல மறந்துட்டேன்! சுபா  பேச ஆரம்பிச்சுட்டா ..சுபா இங்க வா" என்று சுபாவை  அழைத்து வந்து" அம்மா  சொல்லு"
"அம்மா"
" ஆண்டி ...சொல்லு"
"ஆன்னன்ஆன் " என்று தடு மாறினாள் சுபத்திரை .
"ஆன்ட்டி !ஆன்ட்டி சொல்லு!" என்றாள் ஷாலினி .
"முயற்சி பண்ணாத  அவ ஆண்டி சொல்ல இன்னும் கொஞ்ச நாள் ஆகும் "என்று கங்கா சொன்னாள்.சுபத்திரை கங்காவின் அருகில் வந்து அவள் புடவை பிடித்துக் கொண்டு "ஆண்ட்டி"என்றால் சுபத்திரை .
ஷாலினி மகிழ்ச்சியில் திளைத்தாள்.
"நல்லவேளை  பேச ஆரம்பித்து விட்டால், இன்னும் கொஞ்ச நாள எல்லா வார்த்தையும் பேச ஆரம்பிச்சிடுவா" என்று அவளும் மகிழ்ச்சியில் உள்ளதைக்  காண்பித்துக்கொண்டு சென்றால் கங்கா. இந்த இனிய செய்தியுடன் ஷாலினி ஷாலினிக்கு இன்னொரு இனியநிகழ்வும் நடந்தது. ஷாலினி கருவுற்றாள்.கோகிலா அவளை  கவனித்துக் கொண்டாள்.இளவரசனும்  சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.இதுவும் சுபாவின் வாழ்க்கையை மாற்றிய ஒரு நிகழ்வு.........

Padichitu marakama comment pannunga....

இவளை போலWhere stories live. Discover now