10 பாட்டி வழியில் பெயரன்

Start from the beginning
                                    

"அப்படியா?" என்றான் டீக்கடையை பற்றி ஏதும் அறியாத விக்ரம்.

"ஆமாம் விக்கி. வாட்ஸ்அப் குரூப் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி, ஜனங்க இங்க தான் எல்லா கிசுகிசுவையும் பரப்பினாங்க. பாலிடிக்ஸ்ல இருந்து, பக்கத்து வீட்டு பாட்டி வரைக்கும் இங்க பேசப்படாத விஷயமே இல்ல" என்று டீக்கடையின் சரித்திரத்தை கூறி முடித்தான் சுதாகர்.

"அப்படின்னா, அங்க போய் கேட்கலாம்"

அந்த டீக்கடைக்கு வந்தார்கள் நண்பர்கள் இருவரும்.

"சார் ஒரு நிமிஷம்" என்றான் சுதாகர் டீக்கடைக்காரரை பார்த்து.

அவர்களைப் பார்த்த உடனேயே அவர்கள் வேற்று மனிதர்கள் என்பதை புரிந்து கொண்டார்கள் அந்த கடையில் இருந்தவர்கள்.

"என்ன சார் வேணும்?" என்றார் ஒருவர்

"நீங்க எங்கிருந்து வந்திருக்கீங்க?" என்றார் மற்றொருவர்.

"நாங்க கோப்பெருந்தேவியை தேடி வந்திருக்கோம்"

அங்கிருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"கோப்பெருந்தேவியா? அப்படி ஒரு பேரை நாங்க கேள்விப்பட்டதே இல்லையே"

"இது தான் அவங்களுடைய அட்ரஸ்" என்று அவர்களிடம் அந்த சீட்டை நீட்டினான் விக்ரம்.

"அட, இந்த அட்ரஸ் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கு" என்றார் ஒருவர்.

"ஆமாம். கோப்பெருந்தேவியும் அவங்க மகளும் அங்க தான் இருக்காங்க"

"உங்களுக்கு யாரோ தப்பான அட்ரஸ் கொடுத்து இருக்காங்க தம்பி. ஒருவேளை, ஊர் பெயரை தப்பா மாத்தி எழுதிட்டாங்களோ என்னவோ. அந்த வீட்ல, இந்த பேர்ல யாரும் இல்ல" என்றார் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? உங்களுக்கு தெரியாம கூட அவங்க அந்த வீட்ல இருக்கலாம் இல்லையா?" என்றான் விக்ரம்.

"வாய்ப்பே இல்ல. இது எங்க ஊரு. எங்க கண்ணுல படாம இங்க ஒருத்தரும் உள்ளே நுழையவே முடியாது" என்று ஒருவர் கூற, மற்ற அனைவரும் அதை ஆமோதித்தார்கள்.

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Where stories live. Discover now