இவளை போல

8 1 1
                                    

இவளைப் போல!!!

ஒரு தாய் பிரசவ வலியால் துடித்தாள். அதனை பார்க்க முடியாமல் மேகம்  சூறாவளி காற்றுடன் கைகோர்த்து பெரும் மழையைக் கொடுத்தது. தாயின் கதறலுக்கு முன்னால்  இடியின் ஓசையும் சிறு கூச்சலானது.  என்ன குழந்தை பிறக்கும் என்று தெரியாமல் வெளியே உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் நடந்து கொண்டிருந்தால் கோகிலா. தாயின் கூச்சல் மெதுவாக மங்கியது .ஒரு நர்ஸ் வந்து கோகிலாவிடம் "உங்க மருமகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது" என்றாள். திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது என்ற சந்தோசம்  இருக்க பிறந்தது ஒரு பெண் குழந்தை என்ற சோகம் ஒரு பக்கம்  நிலவியது.
இனம் இனத்தோடு சேரும் என்பது பழமொழியாக இருந்தாலும் அது பெண்களின் விஷயத்தில் சரியாக  பொருந்தவில்லை. ஒரு பெண்ணே பிறந்தது ஒரு பெண் குழந்தை என்று நினைத்து சோகம் ஆகிறாள்  .சில பெண்கள் பெண் குழந்தைகளை அவர்கள் காசை செலவு செய்ய மற்றும் அவர்களுக்கு கஷ்டங்களை தர வந்துள்ள ஒரு சூனியமாகவே பார்க்கிறார்கள் .அதுவும் சில அத்தை மார்களை பற்றி சொல்லவே வேண்டாம். மருமகள் பெண் குழந்தையை  அதுவும் முதல் குழந்தையாக பெற்றால் போதும் அவர்களுக்கு அந்த மருமகளை காலத்திற்கும் திரட்டுவதற்கான ஒரு சாக்கு கிடைத்துவிட்டது. அறையின் உள்ளே உள்ள தனது மருமகள் ஷாலினியை பார்க்கச் சென்றால் கோகிலா. மயக்கத்திலிருந்து தெளிந்த ஷாலினி பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் அத்தை என்ன கூறுவார் ? என்ற பயத்தில் ஆழ்ந்திருந்தாள்.
கோகிலா அவளிடம்" நீ மஹாலக்ஷ்மியே பெற்றெடுத்து இருக்க! கவலை படாதே! இரண்டு நாள்ல வீட்டுக்குபோயிடலாம். இளவரசன் இடமும் சொல்லிட்டேன் அவனும் சந்தோசப்பட்டான். வரணும் சொல்லியிருக்கான். "என்று சின்னப் புன்னகையுடன் கூறிக்கொண்டே குழந்தையை செல்லமாக தடவினாள். அத்தையின் வார்த்தைகள் சற்றே அவளை அமைதி அடையச் செய்தன. ஷாலினியின் கணவரும் நீண்டகாலம் கழித்து தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான் .இரண்டு நாட்கள் கழித்து ஷாலினி தனது வீட்டுக்குச் சென்றால் அந்தக் குழந்தைக்கு சுபத்திரை என பெயரிட்டனர் .குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனது .தட்டுத்தடுமாறி நடக்கும் அந்த குழந்தையின் கை பிடித்து கேக்கை வெட்டினார்கள்  அந்த குழந்தையின் பெற்றோர் .பட்டு பாவாடை அணிந்திருந்த சுபத்திரைக்கு இளவரசனும் ஷாலினியும் கேக் ஊட்டினார்கள் . பின்னர் வந்த விருந்தினர் அனைவருக்கும் கேக்கை கொடுத்தால் ஷாலினி. சுபத்திரை மெதுவாக நடந்து கொண்டே ஷாலினியின் தோழியும் எதிர் தெருவில் குடியிருப்பவளுமான  கங்காவிடம் சென்றது. நிறைமாத கர்ப்பிணியான கங்கா குழந்தையை தூக்க முடியாமல் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்துகொண்டு குழந்தையிடம் பேசினாள்.
" சுபத்திரை கங்கா ஆன்ட்டி  சொல்லு!" குழந்தை  "பபபபா"என்று கூறியது. கங்கா குழந்தையை விடாமல் "அம்மா சொல்லு... அம்....மா ...அப்பா ...."என்றாள்.சுபா வாயில் விரலை சப்பிக் கொண்டே  "பபபபாபம" என்று சொன்னது. கேக்கை தட்டில் வைத்துக் கொண்டு கங்காவிடம் கொடுக்க வந்தால் ஷாலினி. "ஷாலினி !என்ன சுபத்திரை அம்மான்னு கூட சொல்ல மாட்டுரா?" .
ஷாலினி  சுபத்திரையை தன் பக்கம் இழுத்துக் கொண்டு "ஒரு வயசுதான ஆகுது இனிமேல் தான் பேச ஆரம்பிப்பாள்."
"ஆனால் என் பக்கத்து வீட்டு சவிதா பையன் ஒரு வயதிலேயே அம்மான்னு   சொன்னா?"
" சுபத்திரை பேசுவாள். தோ கேக் எடுத்துக்கோ.' என்று கங்காவிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.ஒரு வாரம் கழித்து கங்கா விற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. வீட்டுக்கு வந்த குழந்தையை பார்க்க சென்றால் ஷாலினி.
" குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போற?"
" கிருத்திகா "
"நல்ல பெயர்"
பின்னால் மறைந்திருந்த சுபத்திரை  "பபாமாப"என்று கிருத்திகாவின் கையை பிடித்தாள் .
"நீ பாப்பா கூட விளையாடலாம் "என்று ஷாலினி கூறினாள். ஷாலினியும் கங்காவும் ஆழமாக பேசிக் கொண்டிருந்த நேரத்தில் சுபத்திரை கிருத்திகாவின் கையை பிடித்து இழுக்க  அதனை கவனித்த கங்கா "சுபத்திரை! பாப்பாவ என்ன பண்ற? குழந்தை கீழே விழுந்து இருப்பாள்!" என்று கத்தினாள்.குழந்தை தெரியாமல் தான் இப்படி செய்தால் என்பதையும் கங்காவின் தாய்பாசம்  மறைத்தது. செய்வதறியாமல் ஷாலினி சுபத்திரையை அடித்தாள். கிருத்திகாவை காரணம் காட்டி சுபத்திரை வாங்கப்போகும் அடிகளின் தொடக்கம் இதுவே .........

படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க...

இவளை போலOnde histórias criam vida. Descubra agora