கைதி - அத்தியாயம் 21

50 5 4
                                    

ஆர்யானுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என ரூஃப் கார்டனை முன் பதிவு செய்தவள் ஆர்யானுக்கு ரூஃப் கார்டனுக்கு வருமாறு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள்.

வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து என்றும் போல யாரோ தன்னை பின் தொடர்வது போல் சிதாராவுக்கு தோன்றியது.

ஏதோ தன் பிரம்மை என அதனைப் புறக்கணித்து விட்டு டாக்சி பிடிக்கப் பார்க்க,

அதற்குள் அவளுக்கு அருகில் வந்து நின்ற வேனிலிருந்து இறங்கிய சிலர் மயக்க மருந்து அடித்து கர்சீப் மூலம் சிதாராவை மயக்கமடையச் செய்து வேனில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றனர்.

மருந்தின் வீரியத்தால் சிதாரா உடனடியாக மயக்கமடையவும் அவர்களுக்கு அவளை கடத்த இலகுவானது.

ஆனால் சிதாராவை உள்ளே தூக்கிப் போடும் போது வேன் கதவைத் திறந்தவனின் கையிலிருந்து விழுந்த பிரேஸ்லட்டை யாரும் கவனிக்கவில்லை.

_______________________________________________

சிதாராவின் நிலையை அறிந்த ஆர்யான் மடிந்து அமர்ந்திட அவனுக்கு என்ன செய்ய என்றே விளங்கவில்லை.

"மினி... ஏன்டி சொல்லாம போன..." என தலையில் அடித்துக் கொண்டு அழுதவன் சில நொடிகளில் தன்னை சமன் செய்து கொண்டு மொபைலில் யாருக்கோ அழைத்தான்.

மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் ஆர்யான், "டே... டேய்... அவங்க மினிய கடத்திட்டாங்கடா... " என நடந்ததைக் கூற,

மறுபக்கம், "என்னடா சொல்ற... சரி சரி.. தங்கச்சோட மொபைல்ல தானே அவன் பேசினதா சொன்னான்... நான் அந்த லொக்கேஷன ட்ரேஸ் பண்ண ட்ரை பண்றேன்... நீ ஒரு வேலை பண்ணு... அன்னைக்கு ஒரு நம்பரால உனக்கு கால் வந்திச்சுல்ல... அதுக்கப்புறம் நாம ட்ரை பண்ணப்போ அந்த நம்பர் ஸ்விச் ஆஃப் பண்ணி இருந்ததே.. நீ திரும்ப அந்த நம்பருக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இரு.. நான் உன்ன கூப்பிட்றேன்..." என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே... (முடிவுற்றது)Where stories live. Discover now