கைதி - அத்தியாயம் 10

62 4 0
                                    

ஆர்யானும் சிதாராவும் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

லாவன்யாவின் தாய், தந்தை, பாட்டி என‌ அனைவரும் சிதாராவுக்கு பல அறிவுரைகள் வழங்கினர்.

பாட்டி, "இங்க பாரு சீதா கண்ணு... நீ இன்னும் அம்மா அப்பாவ பாக்கலன்னு தான் உன்ன போக விடுறேன்... இல்லன்னா என் கூடவே வெச்சிப்பேன்... திரும்ப வெளிநாட்டுக்கு போக முன்னாடி இந்த கிழவிய வந்து பாத்துட்டு தான் போகனும்..." என்க,

"சரி லட்சு..." என அவரை அணைத்துக் கொண்டாள் சிதாரா.

சிதாராவை பாட்டியிடமிருந்து விலக்கிய ஆர்யான் அவர் தோளில் கை போட்டு,

"என்ன டார்லிங் நீ.... உன்ன போய் கிழவின்னு சொல்ற... நீ இன்னுமே ஸ்வீட் சிக்ஸ்டீன் டார்லிங்... உன்ன கல்யாணம் பண்ணிக்க ஐடியால இங்க நான் இருக்கேன்... நீ என்னன்னா..." என்றவன் பட்டென அவர் கன்னத்தில் முத்தமிட்டான்.

அனைவரும் சிரிக்க, "போடா பொடிப் பயலே..." எனக் கூறி வெட்கப்பட்டார்.

பின் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் கிளம்பினர்.

கேப்பில் இருவரும் பின் சீட்டில் அமர்ந்திருக்க ஆர்யான் மொபைல் நோண்டிக் கொண்டிருந்தான்.

சிதாராவோ அவனையே பார்த்துக் கொண்டிருக்க ‌ஆர்யான்,

"நான் ரொம்ப ஹேன்ட்சமான பையன்னு எனக்கு தெரியும் மினி... அதுக்காக இப்படி வெச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருக்காதே..
கண்ணு பட்டுரும்... அப்புறம் யாரு என்ன கல்யாணம் பண்ணிப்பாங்க..." எனக் கூற கையில் இருந்த ஹேன்ட் பேக்கால் அவனை அடித்த சிதாரா,

"ஜிராஃபி... நானும் ரெண்டு நாளா உன்ன பார்த்துட்டு தான் இருக்கேன்... நீ ஏதோ ப்ளான் பண்ணி இருக்க... மவனே ஏதாவது கேடி வேலை பண்ணன்னு தெரிஞ்சது அப்புறம் உனக்கு கடைசி வரை கல்யாணமே நடக்காம பண்ணிருவேன்...." என்றாள்.

ஆர்யான் அவள் கூறியதைக் கேட்டு அதிர்வது போல் நடித்தவன்,

"வேணாம் மினி... வாழ வேண்டிய வயசு... அதுவும் எங்க வீட்டுக்கு நான் ஒரே புள்ள.." என்க அவனை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே... (முடிவுற்றது)Where stories live. Discover now