கைதி - அத்தியாயம் 15

69 6 7
                                    

திருமணம் முடிந்த கையோடு அனைவரும் சிதாராவின் வீட்டுக்கு கிளம்பினர்.

காலையிலிருந்தே திருமணத்திற்காக தயாரானதில் சிதாராவுக்கு சோர்வாக இருக்கவும் தேவியிடம்,

"மா... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு... நான் கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கிறேன்..." என்க,

தேவி அவசரமாக, "இல்ல சித்து... இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பி ஆகனும்... உன்ன அங்க கொண்டு போய் விடனுமே..." என்க சிதாராவின் முகம் வாடியது.

யாருக்கு தான் பிறந்த வீட்டைப் பிரியும் சோகம் இல்லாமல் இருக்கும்.

அதுவும் ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் சொந்த வீட்டுக்கே விருந்தாளியாகி விடுவாள்.

சரியாக சங்கரும் ஆர்யானுடன் அவ்விடம் வர,

"என்னாச்சு தேவி... ஏன் சித்து ஃபேஸ் டல்லா இருக்கு..." என சங்கர் கேட்டார்.

தேவி, "ஒன்னுமில்லங்க... டயர்டா இருக்கு தூங்குறேன்னு சொன்னா... நான் தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும்னு வேண்டாம்னு சொன்னேன்..." என்க,

ஆர்யான், "அதொன்னும் பிரச்சினை இல்ல அத்த... மினி நீ போய் ரெஸ்ட் எடு..." எனக் கூறினான்.

சங்கர், "இல்ல மாப்பிள்ளை... இப்போவே உங்க வீட்டுக்கு கிளம்பினா தான் நேரமா போய் சேர முடியும்... கல்யாணம் முடிஞ்சதும் முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்கு போறது தான் முறையும் கூட..." என்கவும் ஆர்யான் ரஞ்சித்தை அழைத்தான்‌.

ரஞ்சித் வர அவரிடம், "டாட்... நான் சொன்ன விஷயம் என்னாச்சு... எல்லாம் ஓக்கேயா..." என ஆர்யான் கேட்க,

"ஆமா ஆரு.. எல்லாம் அரேன்ஜ் பண்ணி இருக்கேன்.. நாம கிளம்பினா சரி.." என்றார் ரஞ்சித்.

தந்தை மற்றும் மகனின் உரையாடலில் சங்கர், தேவி, சிதாரா மூவரும் புரியாமல் குழம்ப,

ஆர்யான் சங்கரிடம், "மாமா... இப்ப என்ன... உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் நேரா மாப்பிள்ளை வீட்டுக்கு போகனும்னு தானே யோசிக்கிறீங்க... தாராளமா போலாம்... இங்க கோயம்புத்தூர்லே அப்பா ஒரு வீடு வாங்கி இருக்காரு... அங்க போய் எல்லாம் செய்யலாம்..." என்றான்.

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே... (முடிவுற்றது)Where stories live. Discover now