கைதி - அத்தியாயம் 3

101 8 4
                                    

அக்ஷராவும் லாவண்யாவும் வண்டியிலிருந்த சிதாராவின் லக்கேஜ்ஜை எடுத்துக் கொண்டிருக்க மொபைலில் அழைப்பொன்றில் இருந்த பிரணவ் பேசி முடித்து விட்டு அவர்களிடம் வந்தான்.

பிரணவ், "யாரு வனிம்மா அந்த பொண்ணு.. உங்க ப்ரென்டா.. சரியான திமிரு பிடிச்சவலா இருப்பா போல..‌ ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம அவ பாட்டுக்கு போறா..." என்க அக்ஷராவும் லாவண்யாவும் அதிர்ச்சியில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

எங்கே அவனுக்கு அடையாளம் தெரிய. அவள் தான் முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு இருந்தாளே.

"என்னண்ணா இப்படி‌ கேக்குறீங்க... நெஜமாலுமே அவள உங்களுக்கு அடையாளம் தெரியலயா..." என‌ அக்ஷரா கேட்க அவளுக்கு இல்லை என்பதாய் இட வலமாக தலையசைத்தான்.

லாவண்யா, "என்ன எங்க கூட விளையாடுரீங்களாண்ணா.. உங்களுக்கு அவள பிடிக்காதுன்றத்துக்காக நீங்க சித்துவ பத்தி இப்படியெல்லாம் பேச‌ வேணாம் அண்ணா.." என்று‌ விட்டு வேகமாக அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள்‌ கோவமாக சென்றது எதுவும் பிரணவ்வின்‌ கருத்தில் பதியவில்லை.

அவன் தான் 'சித்து' என்ற பெயரிலே விழி விரித்து சிலையாகி நின்றானே.

இங்கு வீட்டினுள்‌ நுழைந்த சிதாராவுக்கோ பலத்த வரவேற்பு.

லாவண்யாவின் குடும்பத்தினர் எப்போதும் சிதாராவை தங்கள் வீட்டில் ஒருவராகவே எண்ணுவர்.

சிறு வயதிலிருந்தே இருவரும் தோழிகள். அக்ஷராவுடனான பழக்கம் பள்ளிப்பருவத்தில் ஆரம்பமானது.

அன்றிலிருந்தே மூவரும் நல்ல நண்பர்கள். அவர்களுக்குள் எந்த ரகசியமும் இருக்காது.

ஏனைய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட்டிருந்த சிதாராவிடம் வந்த லாவண்யாவும் அக்ஷராவும் தொண்டையை செறுமி தங்கள் வரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் பக்கம் திரும்பி‌ ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என வினவ அவளைப் பார்த்து இருவரும் இளித்து வைத்தனர்.

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே... (முடிவுற்றது)Where stories live. Discover now