கைதி - அத்தியாயம் 11

56 7 2
                                    

பிரணவ்வின் தனிப்பட்ட தாரா என்ற அழைப்பில் விழி விரித்து நின்றாள் சிதாரா.

பிரணவ், "எனக்கு உன்ன பிடிச்சிருக்கு தாரா... நீ ரொம்ப அழகா இருக்காய்... ப்ளீஸ் உன் நம்பர் கிடைக்குமா..." என்க,

அவனின் பார்வை ஏற்கனவே சிதாராவை ஏதோ செய்ய,

தன் அண்ணனின நண்பன் தன்னிடம் இவ்வாறு கூறவும் எப்படி எதிர்வினையாற்ற என தெரியாமல் முழிக்க,

அவள் யோசிக்கும் இடைவேளையில் அவள் கரத்திலிருந்த மொபைலைக் கண்டு கொண்ட பிரணவ் அவள் கையிலிருந்து அதனைப் பறித்து அவசரமாக தன் எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு அவளிடமே ஒப்படைத்தான்.

பிரணவ்வின் இந்த திடீர் செயலில் அதிர்ந்த சிதாரா அவன் விரல் தன் கரத்தை தீண்டவும் அவளுள் நடந்த இரசாயன மாற்றத்தில் அவஸ்தைப்பட்டாள்.

அதற்குள் லாவண்யாவும் அக்ஷராவும் அவர்களை நோக்கி வருவதைக் கண்ட பிரணவ் சிதாராவிடம் ஹஸ்கி வாய்சில்,

"பாய் தாரா... அப்புறம் கால் பண்றேன்..." என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

அவனின் தீண்டல் ஏற்படுத்திய குறுகுறுப்பு ஒருபக்கம் இருக்க அவனின் செயலில் சிதாரா இன்னும் அதிர்ச்சியில் இருக்க,

அங்கிருந்து வேகமாக செல்லும் பிரணவ்வைப் பார்த்தவாறே அவளிடம் நெருங்கிய தோழிகள் அவளை உலுக்கவும் தான் தன்னிலை அடைந்தாள் சிதாரா.

லாவண்யா, "என்னாச்சி சித்து... ஏன் நீ இப்படி ஷாக் அடிச்ச மாதிரி நிக்கிறாய்... அது அபி அண்ணா கூட சென்னைல இருந்து வந்த அவர் ஃப்ரென்ட் தானே... அவர் உன் கிட்ட தனியா என்ன பேசிட்டு போறாரு..." என்க சிதாராவோ திருதிருவென முழித்தாள்.

"வனி உன் கிட்ட தான் சித்து கேட்டுட்டு இருக்கா... பதில் சொல்லு..." என அக்ஷரா கூற,

சிதாரா, "அவருக்கு என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போறாருடி..." என்கவும் அதிர்ந்த இருவரும் ஒரே சமயத்தில், "என்ன..." என்றனர்.

உன் இதயச்சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே... (முடிவுற்றது)Where stories live. Discover now