மனித கூடு

1K 91 16
                                    

மறுநாள் பொழுது விடிந்தது..குடும்பம் மொத்தமும் முற்றத்தில் கூடியிருந்தது..

கதிர் தனக்கு BHEL அரசாங்க உத்யோகம் கிடைத்ததை தெரிவிக்க எல்லோருக்கும் பெருமிதமும்.. மனமகிழ்ச்சியும்..

முல்லையிடம் கூட இது வரை கதிர் நேற்றைய கலாட்டா வில் சொல்லவில்லை...

முல்லை க்கு கதிர் தனக்கு முன்னமே சொல்லவில்லை என்று சிறு கோபம் இருந்தாலும் தன் கணவனுக்கு தங்கள் சொந்த ஊருக்கு மிக அருகிலையே அரசாங்க வேலை கிடைத்துள்ளது என்பதால் அவள் மனம் ஆனந்தமாக திருப்தியாக இருந்தது...

பார்வதிக்கும்... முருகனுக்கும் பரம சந்தோஷம்...தன் மகளை அரசாங்க உத்யோகத்தில் நிரந்தர வருமானத்தில் உள்ள மாப்பிளைக்கு தான் கட்டித்தர போகிறோம் என்றும்..அவள் குன்னக்குடியிலேயே தான் இருப்பாள் என்பது இரட்டிப்பு சந்தோஷம்....

அனைவரும் கதிருக்கு வாழ்த்து சொல்ல.....தனமும்... மூர்த்தியும் உண்மையிலேயே மகிழ்ந்தாலும் வெளிப்படையாக தங்கள் மகிழச்சியை தெரிவிக்கவில்லை...

****

சிறிது நேரத்தில் கதிர் முல்லையை மாடிக்கு அழைக்க... மாடிக்கு வந்த முல்லையை  கதிர் கட்டி அணைத்து முத்தமிட்டான்...

கதிரின் ஒரு கை முல்லையின் இடையை இறுகப்பற்றியும்..மற்றொரு கை அவளின் தோளையும் அணைக்க... அவளை அவன் அள்ளி முத்தமிட்டான்.

அவனின் கை தன் இடையை பற்றியதில் அவள் அவனுடைய உடைமை என்ற கர்வம் வெளிப்பட்டதை உணர்ந்த முல்லை...கதிரிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து "எடுத்துக்கோ" என்பது போல் நின்றாள்...

கதிர் அவளின் உதட்டில் மெலிதாக முத்தமிட்டபடி அவளின் இடையில் தன் பிடியை மேலும் வலுவாக்க முல்லை அந்த பிடியில் உள்ள அழுத்தத்தையும்...வெப்பத்தையும் ரசித்தாள்.கதிரை இருக்கமாக அணைத்து கதிரின் உதட்டை கடித்து வைத்தாள்...

சிறிது நேரம் இருவரும் தங்கள் இருக்கும் நிலையை மெய்மறந்து நிற்க...முல்லை சிறிது நேரத்தில்  கதிரிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு..தன் ஆடையை சரி செய்தாள்.

முல்லையின் மணாளன்Donde viven las historias. Descúbrelo ahora