சடுகுடு

844 90 11
                                    

முல்லை கண்கலங்கி என்ன செய்வது என்று தெரியாமல் அழுது தீர்த்தாள்.

கதிர் அப்படியே நேரடியாக மண்டபத்திற்கு சென்று விட்டான்.

வீட்டில் அனைவரும் மண்டபத்திற்கு வர..கதிர் திருமண வேலையாக எப்போதும் ஓடிக்கொண்டிருக்க... முல்லையால் கதிரிடம் மனம் விட்டு பேச முடியவில்லை‌.

கதிர் முல்லையிடம் இருந்த வந்த அழைப்பை எடுக்கவில்லை. முல்லை மிகுந்த ஏமாற்றத்துடன் மனவருந்தினாள்.

கதிர் மலருக்கும் கண்ணனுக்கும் சமாதானம் செய்ய அவர்கள் சற்று சகஜமானார்கள்.

கல்யாண நாள் திருவிழா கோலமாக ஆரம்பித்தது..

மண்டப வாசலில் வாழை மற்றும் மாவிலை தோரணங்கள் மங்களத்தை பரசாற்றியது.....மண்டப வாசலை வளைத்து போடப்பட்ட மிகப்பெரிய கோலம் அனைவரையும் ஒரு நிமிடம் நின்று கவனித்து ரசிக்கும்படி செய்தது.....மங்கள வாத்தியங்களினான நாதஸ்வரம் மற்றும் மத்தளத்தின் ஒலி அந்த மண்டபம் முழுவதிலும் எதிரொலித்தது.

மலரும்...மற்றொரு உறவுக்கார பெண்ணும் வருபவர்களை வரவேற்று
பன்னீர் தொளித்து சந்தனம்.. குங்குமம்..கல்கண்டு..சாக்லேட் குடுத்துக்கொண்டிருக்க...

தமிழ்பட கல்யாண பாடல்கள் ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டிருந்தது...

உறவினர்களும்...சுற்றத்தாரும்...சற்று நேரத்தில் படை படையாக அணிவகுக்க கல்யாண மண்டபம் அமர்க்களப்பட்டது...

லெட்சுமியும்...
பார்வதியும்....பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்கள்.

தனம் மூர்த்தி வருபவர்களை உபசரித்தும்..அமர வைத்தும்...பூஜைக்கு தேவையான தாம்பல தட்டுக்களை சரி பார்ப்பதுமாக நாலா திசையும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ஜீவாவின் நண்பர்கள்...கதிர் மற்றும் கண்ணனின் நண்பர்கள் மற்றும் தோழிகள் ஒன்றுகூடி இளைஞர் பட்டாளமாக தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தனர்...ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்...

முல்லையின் மணாளன்Where stories live. Discover now