மேகம் கொட்டட்டும்

999 95 27
                                    

6 மாதங்கள் கடந்தன...

கதிர் தினம் கல்லூரி முடியும் வேளையில் முல்லையின் கல்லூரிக்கு எதிரே நின்று அவளை பார்ப்பதும்..அவள் அவனை
பார்ப்பதுமாக 6 மாத காலத்தை ஓட்டினர்.

இருவரும் பேசிக்கொள்ளா விட்டாலும...அவர்கள் கண்கள் தான் ஆயிரம் கதைகள் பேசுமே...இருந்தாலும் கண்ணெதிரில் காதலர்கள் பேசி கொள்ளாமல் நிற்பது நரக வேதனையாகவும்...மன அழுத்தமாகவும் வேதனைப்படுத்தியது....உலகமே வெறுப்பாக வெறுமையாக இருந்தது..அவர்களுக்கு இருளே நீடிக்க கூடாதா என்றிருந்தது..ஒவ்வொரு நாள் வெளிச்சம் கூட அவர்களுக்கு எரிச்சலாக இருந்தது..இருந்த போதும் முல்லை தன் பிடிவாதத்தை விட வில்லை..கதிர் அழைத்தும் அவள் கண்ணீரோடு பதிலளிக்கவில்லை..முருகன் அதை கனத்த இதயத்துடன் கண்டு கொண்டுதான் இருந்தார்...

அந்த பிரிவு அவர்களுக்கு இடையே காதலை அதிகரித்தாலும்
இரவுப்பொழுதுகளில் மிகுந்த மனஅழுத்தத்தால் கதறி அழுது வேதனையோடு அயர்ந்து சோர்ந்து தூங்குவதை முல்லை வாடிக்கை ஆக்கி கொண்டாள்...

கதிரால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினான்...
கல்லூரி...மாலையில் பரோட்டா கடை...அதிகாலையில் டீ கடை என்று அதீதமான உழைப்பு அவன் உடல்நிலையை பாதித்தது...மனநிலையும்..உடல் நிலையும் அவனை மிகவும் பலகீனமாக்கியது..அந்த பலவீனம் அவனுக்கு முல்லை மீது கோபத்தை ஏற்படுத்தியது...

அவளை பார்த்துவிட்டு பேசாமல் வருவது மிகுந்த மனவேதனையாக இருந்ததால் தினம் தினம் பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வாரம் 2 நாள்கள் என்று மாற்றி கொண்டான்..

முல்லை யோ அவன் வராத நாட்களில் துடிதுடித்து போய்விடுவாள்...அவன் வராத ஒவ்வொரு நாளும் அவளுக்கு பயமும் மனவேதனையும் அதிகரிக்கும். இரண்டு நாள் கழித்து அவனை திரும்ப தூரத்தில் பார்க்கும் போதுதான் அவளுக்கு போன உயிர் திரும்ப வரும்...

கதிர் கிருத்திகாவை மணக்க ஒத்துக்கொள்ளாது இருந்ததால் தனமும்..மூர்த்தியும் கதிரிடம் பேசுவதில்லை.

முல்லையின் மணாளன்Waar verhalen tot leven komen. Ontdek het nu