மனம் வருடும் ஓவியமே!

By dharshinichimba

103K 8.8K 4.7K

இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadh... More

புது முயற்சி
எழுத்தாளர்களின் சங்கமம்!
1. தர்ஷினிசிம்பா
2. ஹேமா4இன்பா
3.சாரா மோகன்
4. ப்ரியாதர்ஷினி
5. புவனா மாதேஷ்
6. தனலட்சுமி
7. ரம்யா அனாமிகா
8. லட்சுமி தேவி
எங்களின் மற்ற படைப்புகள்
9. அன்பின் ஷிஜோ
10. நர்மதா செந்தில்குமார்
11. பாக்கியலக்ஷ்மி
12. நிருலெட்சுமிகேசன்
13. மது கிருஷ்ணா
14. அனு சுவீட்டி
15. பாக்யா சிவகுமார்
16. ஹேமா ப்ரீத்தா:
மற்ற படைப்புகள்
17. விஜய்
18. அங்குலக்ஷ்மி
19. சல்மா சசிகுமார்
20. அனிதா தியோலனி
21. சல்மான்
22. பிந்துசாரா
23. யஷ்தவி
24. மீரா
25. தீராதி
26- மீராஜோ
27. வைஷு அய்யம்
28. வாசகி
30. தமிழ்வெண்பா
31. நிவிதா ஜெனி
32. பாலா ராஜி
33. மது
34. அருள் நித்யுவாணி
35. ஆயிஷா
36. ருத்ராவிக்ரம்
37.மது அஞ்சலி
38. சாத்விகா
39.அஃப்ஷா
40. ரைட்டர் எம்.எப்
41. செவ்வந்திதுரை
42. பூஜா
43. கதாரசிகை
44. ஆயிஷ் அஹ்மத்
45. சார்மி
46. ப்ரியாராஜன்
47. மைண்ட் மிரர்
மற்ற படைப்புகள் 3
எழுத்தாளர்களின் கருத்துக்கள் 1
48. ஹஸ்ஸி இனியவள்
49. சரண்யா
எங்களின் எண்ணங்கள் 2
மற்ற படைப்புகள் 4
50. epilogue

29.ஆர்த்திமுருகேசன்

1.5K 145 141
By dharshinichimba

29. ஆர்த்தி முருகேசன்:

        "அந்தாளுக்கு என்னடா? " என துருவின் குரலில் ஏளனம் தெரிந்தாலும் அதை கவனிக்காத விஜய்,  "அப்பா அப்பா" என மீண்டும் பிதற்றினான்.

"விஜய் என்ன ஆச்சு பதறாம சொல்லு?" என்ற துருவின் அதட்டலில் எதிர்முனையில் என்ன கூறப்பட்டதோ சட்டென்று, "என்னால அங்க வரமுடியாதுடா. என்னமோ பண்ணுங்க? அந்தாளுக்கு நெஞ்சு வலின்னா நான் எதுக்குடா வரணும்? அவன் எனக்கு அப்பனும் இல்ல நான் அவனுக்கு புள்ளையும் இல்ல" என கோபத்தில் கடிந்து பேசி விஜயின் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்து மெத்தையில் போனை தூக்கியெறிந்தவன் சுவற்றில் கையோங்கி குத்தினான்.

      இதனை பார்த்துகொண்டிருந்த ஆது,  துருவின் தோளில் கைவைத்து, "பப்பு" என்றாள் மென்மையாக.

  அவனோ, "இல்ல ஆது. என்ன அங்க மட்டும் போன்னு சொல்லாத" என்று வன்மையாய் மறுத்தவனை சமாதானம் செய்யும் பொருட்டு மெத்தையில் அமரவைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்தினாள்.

  "எதுவா இருந்தாலும் கோபத்துல யோசிக்காத பப்பு. கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு. அங்க நெஞ்சு வலில துடிக்கிறது உன்னோட அப்பா" என்றாள் அது.

"அவர் எனக்கு அப்பாவா நடந்துக்கல ஆதுமா" என கூறியவனிடம், "பரவால்ல. நீ ஒரு மகனா நடந்துக்கோ. ஒரு மகனா உங்க அப்பாவுக்கு இந்த கடமையை செய். இல்லனா, ஒரு மனிதாபிமான அடிப்படையில நெஞ்சு வலியில உயிருக்கு போராடுறவற போய் பாரு பப்பு. ப்ளீஸ் போ பப்பு" என்று சமாதானம் செய்து விஜய் வீட்டிற்கு போக வைத்தாள்.

*******    
ராஜேந்திரன் ஒரு பக்க நெஞ்சை அழுத்தி பிடித்துக்கொண்டு கத்த, அறிவழகி "என்னங்க! உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்று தனக்கும் அவருக்கும் ஆறுதல் கூறிக்கொண்டு அவரது நெஞ்சை நீவி விட்டார்.

அப்போது அவ்வறைக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்த துருவை கண்ட விஜயின் தாய், "விஜய்! அப்பா வலில துடிக்கிறாரு. வாப்பா" என்று கூற, துருவோ அதை பொருட்படுத்தாமல் தனக்கு பின்னே வந்துகொண்டிருந்த விஜயிடம், "டேய் விஜய்!  கையை பிடிடா தூக்கனும்" என்று கட்டளையிட்டு இரு கால்களையும் பிடிக்க போனான்.

அறிவழகிக்கு ஒன்றும் புரியாமல் குழப்பம் ஏற்பட. 'கையை பிடிப்பது விஜய் என்றால் காலை பிடிப்பது யார்?' என்ற குழப்பத்தில் விஜயிடம் கேட்க சற்று காட்டமாக, "என்னோட அண்ணன்" என பதிலளித்தான்.

இதனை பார்த்துக்கொண்டிருந்த துருவ் இருவரிடமும், " நீங்க கேள்வி கேளுங்க. இவனும் பதில் சொல்லுவான். இடையில இந்த ஆளோட உயிர் போகட்டும்" என உரக்க கத்தினான்.

விஜயின் பதிலில் சற்று அதிர்ச்சியானாலும், "அவரு உங்க அப்பா. கொஞ்சம் மரியாதை கொடுங்க" என்று கோபமாக கூறிய அன்னையிடம் "அவரு அப்பா இல்ல அயோக்கியன்" என்றான் விஜய் பொங்கி வரும் ஆத்திரத்துடன்.

ராஜேந்திரனை காருக்குள் கிடத்தி, முன்னே விஜயும் துருவ் பின்னே அமர்ந்து கொள்ள, ஓட்டுநர் வண்டி ஓட்ட, தன் கணவனை மடியில் போட்டு கொண்டு அமர்ந்திருந்தார் அறிவழகி.

அவர் கண்களில் நீர் தாரை தாரையாக வழிய, யார் யாரோ தன்னவனை பற்றி பலவாறு பேசினாலும் அவர் நம்பவில்லை.

இன்று அந்த நம்பிக்கையை துருவ் வந்து உடைத்து சென்றதை நினைத்து ஒரு பக்கம் வருத்திக்கொண்டு சொல்லொன்னா துயரம் கொண்டார்.

*********

         சற்று முன் நடந்த உரையாடலை நினைத்து மாது தனியாக அமர்ந்து சிரித்து கொண்டிருந்தாள்.

பத்து நிமிடங்களுக்கு முன்,  'நானும்  துருவும் சேர்ந்து விட்டோம்' என்ற களிப்பில், காதலும் கை கூடியதை நினைத்து பெரும் மகிழ்ச்சியில் தன் வீட்டு மாடியில் உலவி கொண்டிருந்த விஜயின் எண்ணங்களை மாதுவின் அழைப்பு கலைத்தது. 

அழைப்பை ஏற்று, "மாது" என்று ஆரம்பித்து சில பல பரஸ்பர விசாரிப்புகள் முடித்ததும், பிறகு மாதுவே தயங்கி, "விஜய்" என அழைத்தாள்.

"என்ன தயக்கம் மாதுமா என்கிட்டே பேச? என்ன கேட்கனும் கேளு மாது" என்ற அவன் பதிலில் புது தெம்பு பிறக்க, தயக்கம் தளர்ந்தது.

புதிதாய் பிறந்த வெட்கம் வேறு இம்சை செய்ய பட்டென்று, "எப்போ காதல உணர்ந்தீங்க?" என்று  கேட்டுவிட்டாள்.

விஜய், " ம்ம் அதுவா மாது.  எனக்கே தெரியல என்னோட ஆழ் மனசுல எப்போ உங்கிட்ட மனைவின்னு உரிமை எடுத்ததுனு. எப்போ என் மனசுக்குள்ள காதல் வழியா நீ வந்தன்னு.

நீ ஆஸ்பிட்டலில தலையில கட்டோட பார்த்தப்போ என்னோட உயிரே துடிக்கிற மாதிரி இருந்தது.

அந்த நிமிடம் தான் எனக்குள்ள வந்த உன்னையும் காதலையும் உணர்ந்தேன் மாதுமா.

என்னை மீறி என்னோட மனசும் உயிரும் உனக்காக துடிச்சத பார்த்தேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் நீதான் என்னோட மனைவினு" என எல்லாவற்றையும் கூறி முடித்தவன் கடைசியில், "ஐ லவ் யூ மாதுமா" என காற்றுக்குக்கூட வலிக்காத வகையில். தன் காதலை கூறினான் மாதுவின் விஜய்.

இச்சொல்லும் காதலும் செவி வழியே  ஊடுருவி மாதுவின் மனதுக்குள் சென்று இதயத்தில் ஆயிரம் மின்னல்களை உற்பத்தி செய்து கண்ணில் சிறு சிறு தூறலாக வெளி வந்தது மாதுவின் காதல். 

மாது வாய் திறப்பதற்குள் விஜய், வீட்டில் யாரோ தன்னை அவசரமாக அழைப்பதாக கூறி பிறகு பேசலாம் மாது என அழைப்பை துண்டித்தான். 

       அப்போதுதான் அங்கு விஜயின் அப்பா நெஞ்சுவலி என துடிக்க அறிவழகி விஜய்யை அழைத்தார்.

        அவன் அலைபேசியை அணைத்துவிட்டு போனாலும் விஜயின்  நினைவுகள் மாதுவை அணைத்துதான் இருந்தது. அவளும் விஜயின் காதல் சொற்களின் பிடியில் இருந்ததால் அந்த மாய அணைப்பிலிருந்து விடுபட எண்ணமும் அவளுக்கு எழவில்லை.

வெறும் வார்த்தைகளால் மாதுவின் உயிரையும் காதலையும் எப்படி தன்வச படுத்தினான் என்பது மாதுவின் மனதில் மாயம் செய்த அந்த மாயக்காரன் மட்டுமே அறிந்தது ஆகும்.

அவை வெறும் வார்த்தைகள் அல்ல உயிரை உறைய வைக்கும் கருவி என்பது மாதுக்கு மட்டுமே தெரியும்.

    மன்னவர் பேரை சொல்லி
    மல்லிகை சூடி கொண்டேன்...

    இசைஞானியின் விரல் நுனி கலையிலும் ஜானகி அம்மாளின் தேன் கொதிக்கும் குரலிலிலும்,  எங்கிருந்தோ வந்த பாட்டு கூட செவிகளை தீண்டி இம்சை செய்யும்போது நவயுக மங்கையான மாதுவையே ஓர் நொடி காதலில் கரைந்து கற்பனையில் மிதந்து வெட்கம் உதிரும் சிரிப்பை மலர செய்தது.

        இப்படி தானாய் சிரித்துக்கொண்டிருந்தவள் அருகே அம்மா என்ன அகில உயிர்களே அருகில் இருந்தால் கூட தெரியாதே.

அதுபோல தான் இங்கும் மாதுவின் அருகில் அவளின் அம்மா லட்சுமி அமர்ந்தும் ஒரு பதிலும் இல்லை ஒரு பார்வையும் இல்லை அதன் காரணம் அவள் இவ்வுலகில் இல்லை என்பதே.

ஆனால் தாய்மனமோ தன்னை பற்றி தன்னிடம் கூறவில்லை என கோபம் கொண்டு அமர்ந்திருக்கிறாள் என எண்ணி கொண்டது.

தாயின் தலைவருடலில் தன்ணுனர்வு பெற்றவள், 'எவளோ  நேரம் இப்படியே அமர்ந்திருக்கிறோம்?' என தனக்குள் யோசித்தாள்.

தாயோ அவளிடம், " அம்மாடி நாங்க பண்ணது தப்பு தான். எங்க உன்கிட்ட உன் பிறப்ப பத்தி சொன்னா நீ பிரிஞ்சு ரகுநாதன்- மையுரி(ஆதுவின் பெற்றோர்)கிட்ட போயிடுவியோன்னு ஒரு பயம். உன்ன என் பொண்ணா வளர்த்திட்டு உன்ன விட்டு கொடுக்க முடியாதுமா. உண்மை தெரிஞ்சா நீ எங்கள வெறுத்திடுவியோன்னு ஓரு பயம்தான்மா. அதான் உன்கிட்ட சொல்லலைடா. இந்த கோபத்தில அம்மா அப்பாவ வெறுத்துடாதடா. நானும் உன் அப்பாவும் உன்ன உசுரா பாக்குறோம்டா. நீ ஒதுக்கிட்டா எங்களால அத தாங்க முடியாதுடா. அம்மா உன்கிட்ட மன்னிப்பு கேக்குறேன்டா நீ உண்மை தெரிஞ்சி நம்ம வீட்டுக்கு வந்ததிலிருந்து பேசாம இருக்குறது ரொம்ப கஷ்டமா இருக்குடா. தயவு செஞ்சு பேசுடா. ஒரு தடவ அம்மானு கூப்பிடுடா. உன் வாயால இல்லனா திட்டவாவுது செய்டா. தினம் தினம் உன்கிட்ட இத சொல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். உன்னையும் கஷ்டப்பட வச்சிட்டோம். எங்கள பிரிஞ்சிறாதடா. நீ இல்லனா எங்களுக்கு வாழ்க்கையே இல்லாமா.  நீ வந்த பிறகுதான் எங்களுக்கு சந்தோசமே பிறந்துச்சுமா. நீ எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம்டா." என மாதுவின் கையை பிடித்து மனதில் உள்ளவற்றை புலம்பி அழுதவரை மாது வேகமாக அணைத்துக்கொண்டு அவளும் அழுதுவிட்டாள்.

பிறகு தன் கண்ணீரையும் தாயின் கண்ணீரையும் துடைத்து அவரின் கன்னத்தில் முத்தம் வைக்க, அப்போதே அவருக்கு உயிர் வந்தது.

"அம்மா என்ன எப்படி இப்படி நினைச்சீங்கமா? நான் எப்படிம்மா உங்கள விட்டு போவேன்? என்னோட பிறப்பு வேண்ணா அவர்களை சார்ந்ததா இருக்கும். ஆனால், என்னோட வளர்ப்பு முழுசும் உங்களோடாதுமா. 23வருஷம் அன்பா என்னை வளர்த்த உங்கள விட்டு நான் போவேணு நினைச்சீங்களாமா? எனக்கு இப்போ நீங்க பேசுனதுதான் கஷ்டமா இருக்குமா. ஏதோ ஒரு புது சொந்தம் கிடைச்ச மாதிரிதான்மா அவுங்க என்னோட வாழ்க்கையில  வந்ததும். ஆனால் நீங்க என்னோட உறவும்மா. உங்களுக்கு நான் உயிர்னா எனக்கு நீங்க ரெண்டு பேரும் தான் உலகமே. உங்கள விட்டு போனா நான் எங்கம்மா போவேன். உங்க வளர்ப்பு மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லையாமா? இந்த சமூகத்துல இவ்ளோ பெரிய  நல்லா பொண்ணா பாதுகாப்பா வளர்ந்து நான் நிக்கிறதுக்கு நீங்கதான் காரணம்ம்மா. நான் எப்போதும் உங்க பொண்ணுதான். சரியா? மனச போட்டு குழப்பிக்காதீங்க." என்று கூறி அவரது குழப்பத்தை தீர்த்து தனக்கு மறு உயிர் கொடுத்த மகளின் நெற்றியில் முத்தமிட்டார்.

"நான் எப்படியும் உங்கள பிரிஞ்சு தானே ஆகணும்?" என பாவமாக முகத்தை  வைத்து கூறியவளிடம் "எதுக்கு?" என்றார் பதட்டமாய்.

  "ஆமாமா. கல்யாணம் ஆனா பிறகு இங்க உங்க கூடவா இருக்கமுடியும் விஜய் வீட்டுக்கு போகணும்ல?" என சாதாரணமாக தோளை குலுக்கி கண்ணடித்து சொல்லியவளை முறைத்து பார்க்க முயன்று, "போடி அரட்டை" என்று அவளின் தோளை செல்லமாக தட்டினார். அங்கே சிரிப்பொலி பிறந்தது தாய் மகளுக்கிடையே.

******

        ஆதுவின் பெற்றோர் வீட்டில் நவீனின் தாயார் சுகந்தி ஊருக்கு போகும் பொருட்டு கிளம்பி தயாராகி நவீனிற்காக காத்திருந்தார்.

ஆனால் அவனோ உள்ளே நுழையும்போதே சண்டை போட்டுக்கொண்டே வந்தான்.

"ஏய் கத்தரிக்காய்,  தொன தொன்னு பேசாம வாடி" என்றான்.

"நீ வாய மூடுடா ஆப்பிரிக்கா கரடி" என்று சுதாவும் கத்திக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

          சுகந்தி நவினை கேள்வியாய் நோக்க அவனோ படபடவென பொறிய ஆரம்பித்தான்.

"அம்மா சாரி இன்னைக்கும் ஊருக்கு போக முடியாது. ஏன்னா, துருவ் இவளுக்கு (சுதாக்கு) போன் பண்ணி நான் வெளில இருக்கேன் நீயும் நவினும் ஆதுக்கு துணையா இருங்கனு சொல்லியிருக்காரு. இவ என்கிட்ட சொன்னா அதான் அழைச்சிட்டு வந்தேன். ஓஹ் இவ யாருன்னு தான பார்க்குறீங்க?  இவ வேற யாரும் இல்லமா. ஆதுவோட ஒர்க் பன்றா அவளோட பிரண்ட் பேரு சுதா.  பார்க்கத்தான் அமைதியா இருப்பா. ஆனால் கொரோனா வைரஸை விட கொடூரமானவ இவ.  நாம தான் பார்த்து இருந்துக்கணும்" என்று அவளை வாரி விட, அவளோ நவீனின் காலை மிதிக்க நவீன் சற்று தடுமாறி அருகிலிருந்த  சுதாவின் கையை பிடித்து நேர்த்தியாக நின்றான்.

"சொன்னேன்லமா? இவ ஆபத்துன்னு பாத்திங்களா செஞ்சி காமிச்சிட்டா? சரிம்மா நாங்க கிளம்புறோம். ரொம்ப இருட்டிட்டு. ஆது வேற தனியா இருப்பா."  என மனப்பாடம் போல ஒப்பித்தவன் தாயின் பதிலுக்கு காத்திராமல் சுதாவின் கையை பிடித்து அழைத்து சென்றான்.

சுதாதான், 'தான் அம்மா முன்னாடியே கைய புடிச்சு அழைச்சிட்டு போறானே' என  அவனை வசை பாடிக்கொண்டு அவஸ்த்தையில் நெளிந்துகொண்டே சுகந்தியை திரும்பி திரும்பி பார்த்து சென்றாள்.

அப்பார்வையில் எங்கு என்னை தப்பாக நினைப்பாரோ எனும் கேள்வி மட்டுமே இருந்தது.

ஆனால் நவீனின் தாய் பதில் சொல்லும் நிலையிலும் இல்லை இத்தனை ஏன் நவீனின் பட பட பட்டாசு பேச்சை கூட அவர் கவனிக்கவில்லை.

மாறாக அவர் கவனித்தது இருவரின் ஜோடி பொருத்தத்தை தான். கடைசியாக நவீன் சுதாவை உரிமையாக கைபிடித்து அழைத்து சென்றது அவருக்கு அத்தனை மகிழ்வாக இருந்தது.

     ஐந்தடிக்கு சற்று கம்மியான உயரம், கொஞ்சம் பூசினார் போல உடல்வாகு கோதுமை மஞ்சள் நிறம் வட்டமான முகம் அதனை பிரகாசம் செய்ய வைப்பது அவளது படபடக்கும் விழிகளும் லேசாக குழிவிழும் கன்னக்குழி சிரிப்பும்தான், முகத்தை பார்த்தாலே தெரிகிறது சாந்தமானவள் தான் என்பது. ஆனால் நவினிடம் மட்டும் கொஞ்சம் வாயடிப்பாள் போல. ஆம் இவனிடம் வாயடித்தால் தானே இவனை மேய்க்க முடியும் என மனதில் சுதாவை  மெச்சிக்கொண்டார் சுகந்தி.

*******

        காரில் நால்வரும் பயணம் செய்ய, மடியில் தலைவைத்து படுத்திருந்த ராஜேந்திரன் சாதாரணமாக கொட்டாவி விட்டு சோம்பல் முறித்த படியே எழுந்தமர்ந்து சீட்டில் சாய்ந்துகொண்டார்.

விஜயும் துருவும் விழி விரித்து அதிர்ச்சியில் பார்க்க, "மை டியர் சன்ஸ். என்னடா ரெண்டு பேரும் ஒன்னு சேந்துட்டீங்களா? இது எப்படி தெரியும் தான பாக்குறீங்க?" என்று துருவை  கை நீட்டி "இவனை தப்பா சித்தரிக்க முயற்சி பண்ணேன். அதுவும் நடக்கல" என்றார்.

விஜய் பக்கம் கை நீட்டி "உன்னை கொல்ல முயற்சி பண்ணேன். அதுவும் ஆகல.  நீ சாகலைனு செய்தி வந்தவுடனே உன்னோட கார பின் தொடர்ந்தே நானும் வந்தப்போ தான் தெரிஞ்சது மரவீட்டுல ரெண்டு பேரும் ஓன்னு சேந்துட்டீங்கன்னு. (அன்று  ஐவருடன் ஆறாவதாக அவர்கள் பேசியதை கேட்டது இவர்தான்) அப்பறம் தான் இந்த திட்டத்தை போட்டு உங்க ரெண்டு பேரையும் கொலை பண்ண முடிவு பண்ணேன்" என்று ஜெயித்த களிப்பிலும்  அடிக்குரல் சீற்றத்தோடு கூறினார்.

இருவரும் அதிர்ச்சி நிலையிலிருந்து வெளி வந்து சிரித்தனர். துருவ், "டேய் உங்க அப்பாவுக்கு ஒழுங்கா ஒரு கொலையே பண்ண முடியாது. இதுல ரெண்டு கொலையாம்" என்று கேலியில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தான்.

விஜய்,  "யோவ்! அன்னைக்கு நீ கொலை பண்ண பார்த்தது என்னய இல்ல.  அண்ணாவ" என்று கூறி மிரட்டும் தொனியில், "ஏன்டா நீயே இவ்ளோ நடிக்கிறப்ப நாங்க கொஞ்சம் கூட நடிக்க மாட்டோமா?" என்று கூற, அதே தொனியில் துருவ், "நீயே 8 அடி பாயும்போது உன் பிள்ளை நாங்க 64அடி பாய மாட்டோமா?" என்று குரலில் சீற்றத்தை ஏற்றி வினவினான்.

  விஜய், "அண்ணா! அது என்ன கணக்கு 64?" என சந்தேகம் கேட்க அவனும், "டேய் நல்லா வருதுடா உனக்கு டவுட்" என்று அவனை திட்டி கொண்டே, "நீ 32 நான் 32 ரெண்டையும் ஒன்னு சேர்த்தா 64 தான?" என தெளிவாக கூறி இருவரும் சிரித்துக்கொளண்டனர்.

"என்னங்கடா ரெண்டு பேரும் என்னோட கஸ்டடில இருக்குறத மறந்து சிரிக்கிறீங்களா?" என்று இவர்களின் தந்தை  சீறினார்.

இருவரும், "என்னது உன் கஸ்டடியா?" என்று கோரஸாக கூற துருவ், "யோவ்! நீதான் எங்க மூணு பேரு கஸ்டடில இருக்க" என்று கூற, விஜய் ஓட்டுனரின் முகத்தை கொஞ்சம் திருப்பி பின் பக்கம் காட்ட, அவனை கண்ட ராஜேந்திரனுக்கு உண்மையான நெஞ்சுவலியை வந்துவிடும் போல இருந்தது.

************

எழுத்தாளர்: ஆர்த்தி முருகேசன்

ஐடி: Aarthimurugesan

************

Continue Reading

You'll Also Like

8.5K 1.6K 24
இதுவும் KM கதையே.. கதிர் முல்லையாக குமரன் சித்ரா... இதில் எந்த கருத்தையும் சொல்ல முற்படவில்லை... திடீர் என்று தோன்றிய ஒரு கதை மட்டுமே.. அப்படியே ஒரு...
100K 5.2K 42
titleh solludhe vaanga ulla povom
51.8K 1.8K 23
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நா...
117K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤