மனம் வருடும் ஓவியமே!

By dharshinichimba

103K 8.8K 4.7K

இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadh... More

புது முயற்சி
எழுத்தாளர்களின் சங்கமம்!
1. தர்ஷினிசிம்பா
2. ஹேமா4இன்பா
3.சாரா மோகன்
4. ப்ரியாதர்ஷினி
5. புவனா மாதேஷ்
6. தனலட்சுமி
7. ரம்யா அனாமிகா
8. லட்சுமி தேவி
எங்களின் மற்ற படைப்புகள்
9. அன்பின் ஷிஜோ
10. நர்மதா செந்தில்குமார்
11. பாக்கியலக்ஷ்மி
12. நிருலெட்சுமிகேசன்
13. மது கிருஷ்ணா
14. அனு சுவீட்டி
15. பாக்யா சிவகுமார்
16. ஹேமா ப்ரீத்தா:
மற்ற படைப்புகள்
17. விஜய்
18. அங்குலக்ஷ்மி
19. சல்மா சசிகுமார்
20. அனிதா தியோலனி
22. பிந்துசாரா
23. யஷ்தவி
24. மீரா
25. தீராதி
26- மீராஜோ
27. வைஷு அய்யம்
28. வாசகி
29.ஆர்த்திமுருகேசன்
30. தமிழ்வெண்பா
31. நிவிதா ஜெனி
32. பாலா ராஜி
33. மது
34. அருள் நித்யுவாணி
35. ஆயிஷா
36. ருத்ராவிக்ரம்
37.மது அஞ்சலி
38. சாத்விகா
39.அஃப்ஷா
40. ரைட்டர் எம்.எப்
41. செவ்வந்திதுரை
42. பூஜா
43. கதாரசிகை
44. ஆயிஷ் அஹ்மத்
45. சார்மி
46. ப்ரியாராஜன்
47. மைண்ட் மிரர்
மற்ற படைப்புகள் 3
எழுத்தாளர்களின் கருத்துக்கள் 1
48. ஹஸ்ஸி இனியவள்
49. சரண்யா
எங்களின் எண்ணங்கள் 2
மற்ற படைப்புகள் 4
50. epilogue

21. சல்மான்

1.5K 163 163
By dharshinichimba

21.mad_sago:

“உனக்கென்ன டா என் கஷ்டம் புரியும். எவ்ளோ! கஷ்டப்பட்டு நா பூபதி பொண்ண லவ் பண்ணி அவ காச எடுத்துக்கலாமுன்னு பார்த்தா, அவ எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டா. ஆனா, ஓடி வரும்போது அவ தூக்கிட்டு வந்த பொருளே! ரொம்ப அதிகமான பணம் தேர கூடியதா இருந்துச்சு.

ஆனா என்ன? இதுக்கப்பறம் வளராதே! அத எடுக்க எடுக்க குறைய மட்டும்தா செய்யும்னு நெனச்சு உங்க அம்மாவ கல்யாணம் பண்ணே! அப்பறம் அவங்க ரெண்டு பேரயும் கொன்னுட்டு அவங்ககிட்ட கைல இருக்க மீதி சொத்தயும் அவங்களுக்கு  வேற வாரிசில்லாதனால நானே! எடுத்துக்கலாமுன்னு இருந்தேன்.

ஸ்கெச்சு முதல்ல போட்டது துருவ்க்கு. அப்டினுதா நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, அதுக்கப்பறம் அவங்க அம்மாவ கண்டுபிடிக்க முடில. வாழ்க்கைய வெறுத்து இருக்கத வச்சு ஓட்டிட்டு இருந்தப்போ லீனான்னு ஒரு பொண்ணு கால் பண்ணினா.

என்ன துருவோட அப்பாவானு விசாரிச்சுட்டு துருவ் பத்தி சொன்னா, பணக்கார வீட்டு பொண்ணா தான் தெரிஞ்சா, சரி அவளுக்கும் உதவுற மாறி அவன் மத்த பொண்ணுங்களோட நெருக்கமா இருக்க ஃபோட்டொஸ் வாங்கி  ஆதர்ஷினியை அவன வெறுக்க வச்சுட்டு அதுக்கப்பறம் லீனாவ இவனுக்கு எப்படியாச்சு கட்டி வச்ச பின்னாடி லீனா ,துருவ், பூபதி மூணு பேரயும் கொன்னுட்டு அவங்க எல்லா சொத்தையும் லம்ப்பா அடிச்சுட்டு செட்டில் ஆகலாமுன்னு இருந்தேன்.

ஆனா, இப்போ எல்லாம் போச்சு. நா ஆள் வச்சு அவளுக்கு தெரியாம அவ எடத்துல அந்த ஃபோட்டோஸ் வச்சத ஏன் இவ்ளோ நாள் அவ பாக்கலனு தெரில??

இந்த நவீன் கிட்ட துருவ்வ பத்தி நல்ல விதமா ஆது கிட்ட சொல்ல சொல்லி மிரட்டுனா அவன் பயந்து பிரச்சனைய பெருசாக்குவானு பார்த்த அதுவும் ஓர்க்கவுட் ஆகல. நா ஒரு மடையன் உண்ட போய் முடிஞ்சத சொல்லிக்குட்டு”,.என அவன் அடுத்த திட்டத்தை யோசித்தவாறே இடத்தை காலி ராஜேந்திரன்.

******

மேகத்துப் போர்வை போர்த்தி
திகிலான தனிமை அழகில்
தலை சாய்த்த துன்பத்துளிகள்
வலிக்காத கண்ணீர் வழிய
புரியாத துயரம் கொண்டு
ஆது குழப்பத்துடன் துருவை நோக்கினாள்,

“இன்னும் என் மேல உனக்கு சந்தேகம் தீரலல்ல?”, என்றான் துருவ்.

குழம்பிபோன ஆதுவின் கண்களில் கண்ணீரே விடையாய் வந்தது.

“இப்போ ஏன் அழற?”, என்று துருவ் தன்னவள் கலங்குவதைக்கண்டு சற்று அமைதியானான்.

ஃபோட்டோ ஆதாரத்திற்கு விளக்கம் கிடைத்த நிலையில் வீடியோ ஆதாரத்திற்கோ! விளக்கம் குடுத்தால் மட்டும் போதாதே... அவ்வளவு கொடுமையானதாக இருக்கின்றதே, என்று எண்ணியவள் எதுவும் பேசாமல் தன் செல் ஃபோனை எடுத்து ஒரு தட்டு தட்டி இவன் முன் நீட்டினாள்.

துருவை பல பெண்கள் நெருங்கமாக இருப்பது போலும் ஓர் பெண் அவன் கன்னத்தில் முத்தமிடுவது அந்த வீடியோவில் தெரிந்தது.

இதைப் பார்த்ததும் கடுப்பில் கண்ணைமூடிக் கொண்டு தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் துருவ்.

ஆனால் இன்னும் தன்னவள் கண்கள் ஈரமாகவும் ரத்தம் சொட்டும் தன்னவளின் பூவிதழைக் கண்டும் பொறுமையாக பதில் சொல்ல தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தான்.

அவளின் அமைதியான எதிர்ப்பையும் மீறி அவளின் இருதோளிலும் கரம் பற்றி அவ்வாறே அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்தான்.

பிறகு தன் ஷெல்ஃபை கலைத்து சிறிது பஞ்சை பிய்த்து எடுத்து வந்தான். வெடுக்கென்று இவள் அதை பிடிங்கி ரத்தத்தை சுத்தம் செய்தாள்.

மென்மையான யுவன் பாடல் போல அவன் பேச தொடங்கினான்,

"ஹேய்! ஆதுமா இங்க பாருடி நான் படிச்சது அமெரிக்கா டி. அங்க என் ஆதுமா மாதிரி ஒழுக்கமா சேட்டத்தனத்தோட அப்பாவியா இருக்க பொண்ணுங்க ரொம்ப கம்மி டி.
ஒருத்தன பார்த்து சைட் அடிச்சாங்கன்னா அதோட விட மாட்டாங்க. சில பேர் நெருங்கி பேசுவாங்க. ஏன் தப்பா கூட பேசுவாங்க. ஒத்துழைப்பு தரலையா, பாடியால டெம்ப்ட் கூட பன்னுவாங்க . அதுக்குனு சத்தியமா அங்க இருக்க எல்லாரயும் நா மீன் பன்ல.

சோ, அப்படி ஒருத்தி நா எதிர்பாக்காத நேரத்துல என்ன சீண்ட பார்த்தப்போ யாரோ வேணும்முன்னே எடுத்துருக்காங்க. ஆனா, அதுக்கப்பறம் நடந்தது அந்த வீடியோல வரல. பளார்னு ஒன்னு அவளுக்கு விட்டேன். ஆனா, அங்கிருந்த அவ பாய் பெஸ்டீ என்ன கீழ தள்ளி தன்னோட வைன் பாட்டல என் வயித்துலயே அடிச்சு உடச்சான்..", என்று கூறி சட்டையைத் தூக்கி காயத்தை காட்டினான்.

அவளுடைய ஆதரங்கள் எல்லாம் முறிந்த நிலையில் இன்னும் தெளிவாக குழம்பி போனாள்.

நெற்றியில் கையை வைத்தவாறு சற்று எழுந்து அந்த ரூமை சுற்றி யோசித்தவாறே நடந்தாள்.

நான் உண்மையில் காதலித்தது இவனை தானா?

என்னென்னமோ நொடி நேரத்தில் நடந்து முடிந்து விட்டதே!

இப்போது என்ன செய்ய? என்றெல்லாம் குழம்பியவள் திடீரென வேகமாக சென்று அவன் சட்டை காலரை திருகிப் பிடித்தாள்.

ஆனால், இவள் பேசுவதற்கு முன்னரே அவன் "நீ தெளிவா குழம்பியிருக்க பாப்பா, உன்ன நா யாருக்கும் விட்டு குடுக்கக் கூடாதுனு தா இப்படி பண்ணுனே! ஆனா உனக்காக இனி நா எவ்வளவு நாள் வேணா வெயிட் பண்ணுவே. உன் அனுமதி இல்லாம நா இதெல்லாம் பண்ணதுக்கு என மன்னிச்சோ இல்ல ஏதாச்சு தண்டனையோ கூட குடு பாப்பா ", என அவன் கண்கலங்கக் கூறி வாயை அடைத்தான்.

தன் முன் ஒரு ஆண் கலங்குவதைப் பார்த்து இவள் இதயம் கனக்காமல் இல்லை.
தான் காயமான உதடுகளை ஓரப்பற்களால் கடித்தவாறே தலை குனிந்து மீண்டும் யோசனைக்குள் போனாள்.

" நா அங்க இருந்த போது உன்ன ப்ரபோஸ் பண்றதுக்கு பாட்டுலா எழுதிவச்சேன்டி ஆதுமா... கல்யாணம் தா எதிர்பாக்காம நடந்து போச்சு நா ஆச பட்ட ப்ரபோஸலாச்சு இப்ப பண்ணிக்கவா?", என்று வேண்டுகோள் விடுத்தான்.

இதை சற்றும் எதிர்பாராத அவளுக்கு சற்றே வியர்க்க தொடங்கியது. ஏற்கனவே தன்னை பாதி குழப்பியவன் முற்றிலுமாய் தன்னை ஈர்த்து விடுவானோ என்ற பயம் இருந்தாலும் மறுப்பேதும் கூறவில்லை.

சிறு சிரிப்புடன். இவன் பாடத் தொடங்கினான்....

"விழியாலே.... விழியாலே.....
எனைதீண்டி சென்றவளே....
விளகாத என் காதல்....
வெள்ளாமல் போகாதே....

விழியாலே.... விழியாலே.....
எனைதீண்டி சென்றவளே....
விளகாத என் காதல்....
வெள்ளாமல் போகாதே....

நாலிமை....
மூ..டவே....
நாளிதழ்....
சே..ரவே....
நெஞ்சமும்...
ஏங்குதே...

நாலிமை....
மூ..டவே....
நாளிதழ்....
சே..ரவே....
நெஞ்சமும்...
ஏங்குதே...

உயிரே உறவே உலகம்மே.....
தூனே.. துணையே.. தேவதையே....
உயிரே உறவே உலகம்மே.....
தூனே.. துணையே.. தேவதையே....

எந்தன் உயிர் என்னை விட்டு பற்ககிறதே!!
என்னைவிட உன்னை உது வேண்டுறதே!!
எந்தன் உயிர் என்னை விட்டு பற்ககிறதே!!
என்னைவிட உன்னை உது வேண்டுறதே!!

உயிரே உறவே உலகம்மே.....
தூனே.. துணையே.. தேவதையே....

விழியாலே.... விழியாலே........
எனைதீண்டி சென்றவளே.......
விளகாத என் காதல்.......
வெள்ளாமல் போகாதே.......

நிஜமே... நகையே... நிறைவனபே....
அன்பே... அழகே... ஆருயிரே....

(நிசப்தம்)

(மீண்டும் தொடருகிறான்)

{என்னைநீ கடந்திட
படபட.. என அடித்திட...
பொடிநட என.. துறத்திட.
இடையடி அது குறைந்திட..
சடசட சடவென....
ஓடியோடி நானும்முன்ன
வந்துதானே நின்னே. }-2

தெரிந்தும் தெரியாத மழலையே....(high pitch)
என்ன வேண்டுமென   கேக்கவே....
ஒரு ஓகேன்னு தா நா சொல்லவே......................." ,

என்று அழகாய் இவன் பாடி முடிக்க,

"ஓக்கே...ஓக்கே...", என்று குரல் வந்தது.

சட்டென்று எதிர்பாராத பதிலை கேட்டு இவன் திகைக்காமல் இல்லை.

இவன் ஏதோ பயத்துடன் அவனை கிள்ளி பார்த்து விட்டு அவள் தோளை பின்னால் இருந்து உலுக்கவே..  பட்டென திரும்பி பளாரென அரைந்தாள்.

சட்டென இதழை கவ்விக்கொண்டாள்....
இந்த முறை முற்றிலும் தன்னை மறந்துபோனான் துருவ் . சிறு காயம் உருவாகி இவன் உதடும் சிவந்தது.

பிறகு போதை தெளிந்தவன் போல்.. அவளை இறுகி அணைத்து ஒரு கையில் தலையை கோதியவாரும் இன்னொரு கையில் அவள் கழுத்தை இழுத்து வைத்தவனாகவும் அவள் இதழ்களை ஆழமாக சுவைத்தான்

"ஓய் என்ன அறஞ்சதுல மூல குழம்பிருச்சா வாயில ஜொல்லு ஊத்துரது கூட தெரியாம என்ன கனவு கானுற?".

நிலைக்கு திரும்பிய   துருவ் அவள் தன்னை அறைந்தது வரையிலும் தான். நிஜம் என்று உணர்ந்து பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான்.

"எப்படியோ என்ன குழப்பிட்ட... இருந்தாலும் நீ பண்ணுதுக்கு உன்ன சும்மா விட மாட்டே ஏதாச்சு உன்ன பழிவாங்குவே", என்று அன்பு புதிதாய் தொற்றிய மிரட்டலை விட்டாள்.

"ஹை பழி வாங்கப்போறயா ... ஈஈஈஈஈ" , என்று இளித்தான்.

"இப்ப ஏன் இளிக்குற ?", என முறைத்தாள்

இவன் இளித்துக்கொண்டே தன் உதடை தொட்டுக் காட்டினான். முதலில புரியாததுபோல் நடித்தவள் தன் உதட்டு காயத்தைப் பார்த்துவிட்டு , " செருப்பு பிஞ்சிடும்" , என்று அனல் பார்வை கக்கிவிட்டு கதவை காது பிளக்கும் வேகத்தில் சாத்தினாள்.
புதிதாய் மனதில் உருவாகிக் கொண்டிருக்கும் காதல் vs ஈகோ போரை நடத்திக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

*****

அதே இரவில் மாது தூக்கம் இன்றி தவித்தாள் தன்னவனை தனியே சந்தித்த நாள் அல்லவா அது? தூக்கம் எங்கனம் வரும். ஆனால் அவனோ  இன்னும் துக்கத்தில் அல்லவா இருக்கின்றான் என்று தன் கைபேசியில் இருந்து அவனுக்கு குட் நைட் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு படுத்துவிட்டாள்.

காதலுக்கும் அன்புக்கும் ஏங்கும் உள்ளதிற்கெல்லாம் குட் நைட் பேச்சை முடிக்கும் வாக்கியம் அல்லவாம். மாறாக தொடக்க தயக்கத்தை எளிதில் நீக்கி பேச்சை எளிதில் தொடங்க உதவும் கருவியாம்.
இவள் மனதில் ஆயிரம் குழப்பங்கள். யாராக இருக்கும் அந்த ஆது. அதுவும் இவளைப் போலவே உருவத்தோற்றம் வேறாம். இவனோ இன்னும் அவள் நினைவில் வாடிக்கொண்டிருக்கிறான். அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் வருமா? என பல கேள்விகள் இவளுக்கு….

மறுமுனையில் அவனோ தன் தந்தையின் சுயநலத்தை நொந்தவனாக இருந்தான். இவள் செய்தி அப்போது அவனை வந்து சேர அவன் எண்ணங்கள் மாறின. மாதுவிடம் இருந்த சில நிமிடங்கள் அவனால் ஆதுவின் சிந்தனை இல்லாமல் இருக்க முடிந்தது என்று உணர்ந்தான். அதே நேரத்தில் இவளும் தன்னை உண்மையாக நேசிப்பதையும் அக்கறை காட்டுவதையும் உணர்ந்தான்.

ஆது தான் இல்லையென்று ஆகிவிட்டதே இவளை அட்லீஸ்ட் மதிச்சு ரிப்லை பண்ணி நல்ல ஃப்ரெண்டாவாச்சும் முதல்ல இருப்போம் அப்பறம் மனம் போனவாக்கில் போவோம் என்று முடிவெடுத்தான்.

முதலில் ஒரு தயக்கத்துடன் குட் நைட் மட்டும் பதிலாக சொல்லிவிட்டு இண்டெர்நெட்டை அணைத்துவிட்டான்.

அங்கு நம் தேவதை குட் நைட் பாத்து முகம் மலர்ந்தவள் ஆன்லைன் டேக் மறைந்து லாஸ்ட் ஸீன் டேக் வந்ததும் கடுப்பானாள்.

‘சோப்புடப்பா மண்டையா ஒழுங்கா ரிப்லை பன்றதுக்கு என்னவாம்’ என்று மனதில் திட்டி முடிப்பதற்குள் மீண்டும் ஆன்லைன் டேக் வந்தது.

ஏதாவது ஃபார்மலாய் கேப்போமே என்று எண்ணியவன் கை தன்னையும் தன் அப்பாவி மற்றும் ஜெண்டில்மேன் தனத்தையும் மீறி உறிமையோடு  “அதுக்குள்ள தூங்க போறியா எரும?”, என்றது.

தன்னை அறியாமல் உரிமையோடு அவன் அனுப்பிய வார்த்தைகளில் அவனே பயந்தான்.

“எரும” என்ற அவன் உரிமையை இவளும் கவனிக்க தவரவில்லை. இருப்பினும் அவள் கண்டுகொல்லாமல் சாதாரணமாக பேச தொடங்கினாள்.

இவ்வாறே அவர்களின் ஃபார்மல் உரையாடல், நலம் விசாரிப்பது, உணவு விசாரிப்பது என்று இரவில் நீண்டது…

**********
எழுத்தாளர்: சல்மான்

ஐடி: @mad_sago

**********

Continue Reading

You'll Also Like

109K 7.7K 35
Hai thangangala..............mature content.....core story partially based on few true incidents.....
18.5K 907 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்
201K 4.9K 30
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
423K 12.1K 55
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உ...