Completed - Sudum Nilavu Suda...

By niharikanivas

27.4K 2.6K 3.8K

திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல் More

Sudum Nilavu Sudatha Suriyan - 1
Sudum Nilavu Sudatha Suriyan - 2
Sudum Nilavu Sudatha Suriyan -3
Sudum Nilavu Sudatha Suriyan - 4
Sudum Nilavu Sudatha Suriyan - 5
Sudum Nilavu Sudatha Suriyan - 6
Sudum Nilavu Sudatha Suriyan - 7
Sudum Nilavu Sudatha Suriyan - 8
Sudum Nilavu Sudatha Suriyan - 9
Sudum Nilavu Sudatha Suriyan - 10
Sudum Nilavu Sudatha Suriyan - 11
Sudum Nilavu Sudatha Suriyan - 12
Sudum Nilavu Sudatha Suriyan - 13
Sudum Nilavu Sudatha Suriyan - 14
Sudum Nilavu Sudatha Suriyan - 15
Sudum Nilavu Sudatha Suriyan - 16
Sudum Nilavu Sudatha Suriyan - 17
Sudum Nilavu Sudatha Suriyan - 18
Sudum Nilavu Sudatha Suriyan - 20
Sudum Nilavu Sudatha Suriyan - 21
Sudum Nilavu Sudatha Suriyan - 22
Sudum Nilavu Sudatha Suriyan - 23
Sudum Nilavu Sudatha Suriyan - 24
Sudum Nilavu Sudatha Suriyan - 25
Sudum Nilavu Sudatha Suriyan - 26
Sudum Nilavu Sudatha Suriyan - 27
Sudum Nilavu Sudatha Suriyan - 28
Sudum Nilavu Sudatha Suriyan - 29
Sudum Nilavu Sudatha Suriyan - 30
Sudum Nilavu Sudatha Suriyan - 31
Sudum Nilavu Sudatha Suriyan - 32

Sudum Nilavu Sudatha Suriyan - 19

847 81 102
By niharikanivas

சுடும் நிலவு சுடாத சூரியன் – 19

"சசிதரன், ஐ ஆம் ரியலி இம்ப்ரெஸ்ட். உங்க பிராஸசிங் யுனிட் இவ்வளவு பெரிசாக இருக்கும் என்று எதிர்பார்க்கலை. நியு டெக்னாலாஜி யூஸ் பண்றேங்க. எல்லாமே ஆட்டோமேட் பண்ணிருக்கீங்க. கிரேட்" என புன்னகைத்தான் சித்தார்த்.

சசியின் முகத்தில் சிரிப்புடன், பெருமையும் தெரிந்தது. சசியின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து, சேரில் அமர்ந்தனர்.

"என்ன சாப்பிடறீங்க சித்தார்த், காப்பி, ஃபிரஷ் ஜுஸ்?" என கேட்டான் சசிதரன்.
"காபி ஷுட் பி ஃபைன்" என்றான்.

பக்கத்திலிருந்த உதவியாளரிடம் சசிதரன் தலையசைக்க, அவள் வெளியே சென்றாள்.
"சசிதரன், நான் கேட்ட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் நான் கொடுத்த மெயில் அட்ரஸுக்கு அனுப்பிச்சிடுங்க. தேவ் ஃபுட்ஸின் ஆப்ரேஷன்ஸ் ஹெட், உங்களை தொடர்பு கொள்வார்" என்றான்.

"ஷ்யூர் சித்தார்த்" என்றவன், "என்னை நீங்க சசி என்றே கூப்பிடலாம்" என சிரித்தபடி சொன்னார்.

"யா சசி, யூ கேன் கால் மீ ஸிட்" என்றான் சித்தார்த்.

"நீங்க எவ்வளவு நாளா, இந்த கம்பனியை நடத்திட்டு வர்றீங்க சசி?" என கேட்டான்.

"இருபது வருஷத்திற்கு முன்னே மஞ்சள் ஏற்றுமதி பண்ணற சின்ன கம்பனியா தான் ஆரம்பிச்சார். அப்பறம் மிளகு, ஏலம் என்ற ஸ்பைசஸ் ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சார். நல்ல தரமான பொருளுக்கு உலகளவில் இருக்கிற டிமாண்டை பார்த்து, நட்ஸ் அண்ட் டிரை புருட்ஸ் ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சார். நான் இங்கே சேர்ந்த பிறகு தான், ஸீ புட்ஸ் யூனிட் ஆரம்பிச்சோம்" என அவன் சொல்லும் போதே உதவியாளர் காப்பியுடன் வந்தார்.

காப்பியை சுவைத்து விட்டு, "சசி, காப்பி நிஜமாகவே நல்லாயிருக்கு" என்றான் சித்தார்த்.

"தாங்க்ஸ் ஸிட். இது கூர்க்கில் இருந்து வர்ற காப்பி கொட்டையில் செய்தது. இந்தியாவிலே தரம் வாய்ந்த காப்பி, அங்கே இருந்து தான் வருது. இந்திய சந்தையில் அதை விற்பனை செய்யறதே இல்லை. எவ்வளவு விளைஞ்சாலும் உலக சந்தையில் அதை வாங்க பயங்கர போட்டி இருக்கு. பிரேஸிலியன் காப்பியும், அரேபியன் காப்பியும் அதற்கு அடுத்த கிரேட் தான்" என்றான் சசிதரன்.

"சசி, இந்தியாவில் இருக்கிறதால் உங்களுக்கு நிறைய அட்வாண்டேஜ் இருக்கு" என சொன்னவனின் கண்கள், சசியின் மேஜையிலிருந்த ஸ்ம்யு-சசியின் போட்டோவில் நின்றது.

சித்தார்த்தின் பார்வை சென்ற இடத்தைப் பார்த்ததும் சிரித்தபடி, "எங்க நிச்சியதார்த்த போட்டோ" என சொன்னான் சசி.

"நைஸ்" என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்ன சித்தார்த், "உங்களோடது அரேஞ்ட் மேரேஜ்ஜா?" என கேட்டான்.

"நோ, லவ் மேரேஜ்" என சொன்னவன், "ஸம்யுக்தா" என அந்த போட்டோவை காதலுடன் கையில் எடுத்தான்.

"எனக்கு சின்ன வயசிலிருந்தே சம்யுவை ரொம்ப பிடிக்கும். இங்கே அப்பா கம்பனியில் வேலைக்குச் சேர்ந்த பிறகும், என காதலை அவ கிட்ட சொல்ல தைரியம் வரலை. என் காதலை அவ மறுத்திடுவா என்ற பயமும், எங்கே அவ நட்பை இழந்துடுவோமோ என்ற பயமும் என் காதலை சொல்ல விடாமல் தடுத்தது. எப்படியோ அவ காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும் போது சொல்லிட்டேன். முதலில் அவ ஒத்துக்கலை. கொஞ்ச நாள் அவ பின்னாடியே சுத்தி, என காதலை ஏத்துக்க வைச்சேன். அந்த.. ரோட் ஆக்ஸிடண்ட் மட்டும் நடக்கலை என்றால், இந்த நேரம் என மனைவியா எங்கூட இருந்திருப்பா" என சொன்னவனின் குரலில் உணர்ச்சி நிறைந்ட்திருந்தது.

சித்தார்த், குனிந்து தன் செல்லில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். "ஸாரி, எங்க காதல் கதையை சொல்லி போரடிச்சிட்டேனா?" என கேட்ட சசியிடம், இல்லை என்று மறுத்துத் தலையசைத்தான்.

"ஒ.கே சசி, நான் கிளம்பறேன். நீங்க எங்க ஆப்ஸ் ஹெட் கிட்ட சீக்கிரம் டெர்ம்ஸ் பேசி முடிச்சிடுங்க. தாத்தாவோட சத்தியமங்கலம் போயிட்டு வந்தவுடன், நான் திரும்ப அமெரிக்கா கிளம்பறேன். நீங்க உங்க லாயரிடம் சீக்கிரம் லீகல் பேப்பர்ஸ் ரெடி பண்ண சொல்லுங்க. நான் இங்கேயிருந்து கிளமபறதுக்கு முன்னாடி சைன் பண்ணிடறேன்" என்றான் சித்தார்த்.

"ஒகே ஸிட என கை கொடுத்தவனிடம், கை குலுக்கி விட்டு விடை பெற்றான் சித்தார்த்.

"ஹாய் ஸம்யு" என தன் மேஜையின் முன் வந்து நின்ற ஸ்மிருதியைப் பார்த்து புன்னகைத்தாள் ஸம்யுக்தா.

"கிளம்பலாமா?" என அவள் கேட்டவுடன் தலையசைத்து, தன் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

வாசலில் டிரைவருடன் நின்றிருந்த ஸம்யுவின் காரை பார்த்த ஸ்மிருதி, "ஒ, இதுக்குத் தான் என்னை கேபில் வா என்று சொன்னியா?" என கேட்டாள்.

"ஆமாம் ஸ்மிருதி. நான் திரும்பவும் வேலைக்கு போறேன் என்று சொன்னதில் அம்மாவுக்கு கொஞ்சம் கூட இஷ்டமே இல்லை. மித்ரன் வற்புறுத்தினதால் ஒத்துக்கிட்டாங்க. டிரைவரோட காரில் போனா தான் அப்பா அனுமதிப்பேன் என்று சொல்லிட்டாங்க" என வருத்தமுடன் சொன்னாள் ஸம்யுகதா.

"எல்லாம் போக போக சரியாயிடும். நீ திரும்பவும் உன் வண்டியில் சென்னையை சுத்தி வர தான் போறே" என சொன்னாள் ஸ்மிருதி.

"பார்க்கலாம். இன்னிக்கு சனிக்கிழமை அரை நாள் என்பதால் தான் உங்கூட வெளியே போக அனுமதிசாங்க. இல்லைனா, வீட்டிலிருந்து ஆபிஸ், அபிஸிலிருது வீடு தான்" என்றாள்.

"கல்யாணத்தின் போது நாலு ஸல்வார் எடுத்திருந்தேன். அதை தைக்க அதே கடையில் கொடுத்திருந்தேன். உனக்குத் தான் தெரியுமே, இவ்வளவு நாள், வாங்க முடியாம போயிடிச்சு. இன்னிக்கு போயிட்டு வாங்கிட்டு வந்திடலாம் என்று தான் உன்னை கூப்பிட்டேன். தனியா போக வீட்டில் விட மாட்டேங்கிறாங்க" என்றாள்.

"ஒகே, அதே மாலில், ஒரு ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. சாப்பிட்டு விட்டு, டிரஸ்ஸை வாங்க போகலாம்" என்றாள்.

உணவகத்தில் அமர்ந்து, உணவை ஆர்டர் செய்து விட்டு பேசி கொண்டிருந்தனர்.
"ஸம்யு, எனக்கு புரியலை. நீ எப்படி அந்த காரில் ஏறினே?" என கேட்டாள் ஸ்மிருதி.

"நீ கார் எடுத்திட்டு வர போனியா, அப்போ தான், பார்லர் பெண் நான் கிரெடிட் கார்ட்டை மறந்து வைச்சிட்டேன் என்று கொண்டு வந்து கொடுத்தாள். நான் பாகில் வைச்சிட்டு நிமிரும் போது, ஒரு ரெட் கார் வந்து நின்று, முன் பக்க கதவு திறந்தது. நானும், அது உன் கார் என்று நினைச்சு ஏறிட்டேன். ஏறினா பிறகு பார்த்தா, உன் ஸல்வார் கலரில் டிரஸ் போட்டு வேற ஒரு பெண் இருந்தா. நான் ஸாரி என்று சொல்லிட்டு கதவை திறக்க நினைச்சேன். ஆனா லாக் பண்ணியிருந்ததால் திறக்க முடியலை. அதற்குள் யாரோ பின்னாடி இருந்து என மூக்கில் ஒரு துணியை வைச்சு அழுத்தினாங்க. அதற்கு பிறகு நடந்த எதுவுமே எனக்குத் தெரியலை. அந்த கெஸ்ட் ஹவுஸில் தான் கண் முழிச்சேன்" என்றாள்.

உணவு வந்துவிட, ஸம்யு நடந்தவற்றை, ஸ்மிருதியிடம் சொல்லி கொண்டே சாப்பிட்டாள்.

"என்னால நமப முடியலை ஸம்யு. அவன் எப்படி வேற ஆளாக இருக்க முடியும்? உங்கிட்ட வேண்டுமென்றே வாய பேச முடியாத ஆள் மாதிரி நடிச்சிருக்கான். கண்ணுக்கு, இப்போ தான் கலர் கலராக லென்ஸ் கிடைக்குதே, அதை போட்டிருப்பான். உடம்புக்கு கருப்பு கலரில் ஏதாவது பாடி கலர் பூசியிருப்பான்" என படபடவென்று பொரிந்தாள் ஸ்மிருதி.

"நீ பார்க்கிற வேலையே இன்வெஸ்ட்கேட்டி ஜர்னலிஸம் தானே? உனக்கு இது தோணவே இல்லையா?" என கோபத்துடன் கேட்டாள் ஸ்மிருதி.

"எனக்கு தோணிச்சு ஸ்மிருதி, ஆனா என்னை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க. என்னை கடத்தினதில் எனக்கு ஏதோ மனசு சரியில்லாம போச்சு என்று நம்பறாங்க" என விரக்தியாக சொன்னவளின் குரல் உணர்ச்சிகளால் நிரம்பி இருந்தது.

"அவங்களை விடு ஸம்யு, அவன் தான் உன்னை கடத்தினான் என்று நீ நிருபிக்கிற வழியைப் பாரு. அதுக்காக உடனே ராத்திரி பகல் என்று வெளியே சுத்தாதே. உங்கண்ணன் என்னை இதை சொன்னதுக்காக அடி பின்னிடுவார்" என சொன்னாள்.

"என்னை இப்போ தான் வீட்டிலிருந்து வெளியே விட்டிருக்காங்க. நான் அவனை பத்தின தகவல் சேகரிச்சிட்டிருக்கேன்" என சொன்னவளின் குரலில் நம்பிக்கை தெரிந்தது.

"உன் கல்யாணம் என்னாச்சு, சம்யு" என யோசனையுடன் கேட்டாள் ஸ்மிருதி.

"கல்யாணம் நின்னு போனதில் அம்மா ரொம்ப அப்செட்டாக இருக்காங்க. இரண்டு வீட்டிலேயும் திரும்பவும் பேசினாங்க. சிம்பிளா கோயிலில் கல்யாணத்தை முடிச்சிடலாம் என்று முடிவு பண்ணியிருக்காங்க" என உணவர்களற்று சொன்னாள்.

"கல்யாணம் நின்னு போனதில் நிறைய செலவாயிடிச்சு ஸ்மிருதி. அப்பா எல்லாத்தையும் காண்ட்ராக்ட் விட்டிருந்தாங்க. அட்வான்ஸா நிறைய கொடுத்துட்டாங்க. நிறைய பேர் திருப்பியே தரலை. வேண்டுமென்றே இழுத்தடிச்சிட்டிருக்காங்க" என கவலையுடன் சொன்னாள்.

"அப்பாவுக்கு இன்னொரு தடவை செலவு வைக்க எனக்கும் இஷ்டமில்லை. கோயிலில் கல்யாணத்தை முடிச்சிட்டு, கொஞ்ச நாள் கழிச்சு ரிசப்ஷன் வைக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்காங்க" என சொன்னவளின் கண்கள் அலைபாய்ந்தது.

"ஏன் ஸம்யு? என்னாச்சு" என கேட்டாள் ஸ்மிருதி.

"எப்படி சொல்றது என்று தெரியலை ஸ்மிருதி. எனக்கு இப்போ கல்யாணம் செஞ்சிக்க இஷட்மில்லை" என வெறுப்பாக சொன்னாள்.

"ஏன் ஸம்யு, சசி ஏதாவது உங்கிட்ட சொன்னானா?" என கேட்டாள்.

"இல்லை. அவர் இதுவரைக்கும் எங்கிட்ட எதுவும் நேரடியாக கேட்கலை. ஆனா அவருக்கு சந்தேகம் மனசில் இருக்குமோ என்று எனக்கு தோனுது" என சொன்னாள்.

"கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும் ஸம்யு" என அவளின் கைகளை அழுத்தினாள் ஸ்மிருதி.

உணவகத்திலிருந்து வெளியே வந்தவர்கள், அடுத்த மாடியிலிருந்த கடைக்கு சென்றனர். பில் கொடுத்து விட்டு, அங்கே இருந்த சேரில் அமர்ந்தனர்.

"மித்ரன் அண்ணா கில்ட்டியா ஃபீல் பண்றாங்க. அவங்க உயிரைக் கொடுத்து தேடியும், என்னை கண்டு பிடிக்க முடியலை. என் பேட் லக்" என சொன்னாள்.

"எனக்குத் தெரியும் ஸம்யு, அவர் வீட்டுக்கே நாலு நாள் வரலை. பைத்தியம் பிடிச்சா மாதிரி அலைஞ்சிட்டிருந்தாங்க" என வருத்தமுடன் சொன்னாள்.

ஸம்யுவின் ஸல்வார்கள் தைத்து வந்துவிட, அதை வாங்கிய கொண்டவள், "ஸ்மிருதி, அண்ணாக்கு ஒரு டிஷர்ட் வாங்க போறேன். பத்து நிமிஷத்தில் கிளாம்பிடலாம்" என சொன்னவள் அதற்கு கீழ் தளத்தில் ஆண்களுக்கான உடைகள் இருந்த தளத்தை அடைந்தாள்.

அங்கு தொங்கி கொண்டிருந்த டிஷர்ட்களில் மித்ரனின் சைஸ்ஸில் இருந்தததைப் பார்த்தாள்.

"ஸம்யு, வெற்றிவேல் தாத்தா பேரன், அந்த யூ.எஸ் ஆள் அவன் பேர் என்ன சொன்னே?" என கேட்டாள்.

"சித்தார்த். முதல் தடவை பீச்சில் அவனை பார்த்த போது பயந்துட்டேன். இரண்டாவது தடவை அவனை பார்ட்டியில் பார்த்ததால் ஒன்றும் செய்ய முடியலை" என்றாள்.

"என்ன செய்யனும் நினைச்சே ஸம்யு" என கேட்டாள் ஸ்மிருதி.

"அவன் சட்டை காலரை பிடிச்சு, எனக்கிருந்த கோபத்தில் அவன் கன்னத்தில பளாரென்று நாலு அறை விட்டிருப்பேன்" என கோபத்துடன் சொன்னாள்.

"மத்தவங்களுக்கு வேணா சந்தேகம் இருக்கலாம், எனக்கு ஒரு துளி கூட சந்தேகமே இல்லை. அவனும், இவனும் ஒரே ஆள் தான்" என சொன்னவள், ஆழ்ந்த கிரே நிறத்தில் கறுப்பு கோடுகள் போட்ட டிஷர்ட்டை எடுத்தாள்

"குட் கலர் சாய்ஸ்" என கேட்ட குரலில் திரும்பி பார்த்த போது, கையில் இரு டிஷர்ட்களுடன் சித்தார்த் நின்றிருந்தான்.

Continue Reading

You'll Also Like

165K 14.2K 63
A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU...
56.2K 3.3K 53
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?'...
13.1K 835 22
இதயத்தை கொய்த கொலையாளி - பாகம் 2