நீயும் நானும்

By LayolaJustinaMary

12K 1.9K 812

கதிர் முல்லை எப்போது இணைவர். Km story More

அம்மா
உனக்குனு ஒரு வாழ்க்கை
குழப்பமும் தெளிவும்
விதி
உயிரும் உடலும்
Happy birthday
ஏமாற்றம்
உண்மை
வீட்டுக்கு வரனும்
உன் முடிவு
சம்மதம்
புரிதல்
some one spl
கோபமும் வார்த்தை பிழையும்
❤️❤️❤️
நட்புக்காக
பரிசு
திருமணம்
தவிப்பு
தப்பும் மன்னிப்பும்
காதலும் காமமும்
பயம்
முடிவுரை

காதலின் அடையாளம்

349 74 12
By LayolaJustinaMary

நீயும் நானும் - 22

கதிரும் முல்லையும் தங்கள் இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பித்தனர்..

அடுத்த இரண்டு நாட்கள் டெல்லியில் தங்களுக்கு பிடித்த இடங்களை சுற்றி பார்த்தனர்.....

இந்த இரண்டு நாட்களில் அவர்கள் வாழ்க்கையில் காதலும் காமமும் மட்டுமே நிறைந்திருந்தது...

வேறு எந்த எண்ண ஓட்டங்களும் மனதில் இல்லை...

தனக்கானவள் தன்னோடு இருக்கையில் வேற என்ன தோன்றும் அவன் மனதில்....

தன்னவன் கை கோர்த்து நடக்கும் போது தேவை இல்லா கற்பனைகள் அவளுக்கு ஏன் எழ வேண்டும்..

இருவரும் சென்னை திரும்பினர்...

அவர்களுக்கு முன்னதாகவே ஆதவனும் பாண்டியன் மற்றும் லட்சுமி வீட்டில் இருந்தனர்...

ஆதவன் : அம்மா....

முல்லை : என் செல்லக்குட்டி எப்ப வீட்டுக்கு வந்தீங்க

ஆதவன் : நாங்க காலையிலேயே வந்துட்டோம் மா.. நான் வந்ததும் உங்களை தான் தேடின தெரியுமா..

முல்லை : என் தங்க பட்டு அம்மாவ தேடுனீங்களாடி..

கதிர் : டேய் பொடி பயலே நான் ஒருத்தன் இங்க இருக்கேன்டா..

ஆதவன் : சாரிப்பா.. நான் உங்களை பார்க்கவே இல்லையே..

கதிர் : எது.. பாக்கலையா..

என்று கூறி ஆதவனின் இடையில் கிச்சு கிச்சு மூட்ட....

தன் உடலை நெளித்துக் கொண்டு கதிரின் மேல் ஒட்டிக் கொண்டான் ஆதவன்...

சிறிது நேர விசாரிப்புகளுக்கு பிறகு....

KM அறை.....

ஆதவன் : அம்மா டெல்லியில எல்லா இடத்தையும் சுத்தி பாத்தீங்களா

முல்லை : பாத்தோம்டா..

ஆதவன் : அப்பா வேலை பார்த்துட்டு இருந்தாங்களா... இல்ல உங்களை வெளியில கூட்டிட்டு போனாங்களா..

முல்லை மனதில் : நல்லாதான் வேல பாத்தாரு....

ஆதவன் : மா...

முல்லை : அப்பா வேலையெல்லாம் முடிச்சிட்டு அம்மாவை வெளியில கூட்டிட்டு போனாங்க....

ஆதவன் : நானும் தாத்தா பாட்டி கூட ஜாலியா இருந்தேன்... நீங்க ஜாலியா இருந்தீங்களாமா...

முல்லை : நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் டா பட்டுக்குட்டி...

ஆதவன் : அடுத்த தடவை நானும் உங்களோட வரேன்..

முல்லை : கண்டிப்பா... நம்ம எல்லாம் ஒன்னா போகலாம்..

ஆதவன் : ஐ... ஜாலி..

கதிர் : என்ன அம்மாவும் புள்ளையும் ஒரே குஷியா இருக்கீங்க போல..

முல்லை : ஆமா.. அதுல உங்களுக்கு என்ன பொறாமை..

கதிர் : எனக்கு என்னப்பா பொறாமை..
அம்மா புள்ளைக்குள்ள ஆயிரம் இருக்கும் அதெல்லாம் இந்த அப்பா கிட்ட சொல்லுவீங்களா😞

ஆதவன் : அப்பா இதெல்லாம் உங்களுக்கு செட்டே ஆகல...

முல்லை: 🤣🤣

கதிர் : கண்டுபிடிச்சுட்டியா 😁

முல்லை : சரி சரி அரட்டை அடித்தது போதும்... நாளைக்கு ஸ்கூல் இருக்கு சீக்கிரம் படுத்து தூங்கு...

ஆதவன் : அப்போ உங்களுக்கு ஸ்கூல் இல்லையா நீங்க தூங்க மாட்டிங்களா..

முல்லை : எனக்கும் தான்டா ஸ்கூல் இருக்கு..

கதிர் : முல்லை நீ ஸ்கூலுக்கு போக போறியா..

முல்லை : இது என்னங்க கேள்வி...

கதிர் : இல்ல....

முல்லை : இத்தனை வருஷமா சோறு போட்ட வேலை... அதுவும் கவர்மெண்ட் ஜாப்.. அதெல்லாம் போகாம இருக்க முடியாது..

கதிர் : அடியேய்... நாளைக்கே போறியானு தான் கேட்க வந்தான்..
அதுக்குள்ள நான் என்னமோ உன்ன வேலைக்கே போக வேணாம்னு சொன்ன மாதிரி சண்டைக்கு வர..

முல்லை : அச்சோ.. சாரி கதிர்...

கதிர் : நா உன்ன எதுவுமே சொல்லல படுத்து தூங்குமா...

முல்லை : கோச்சுகிட்டியா...

கதிர் :

முல்லை : கதிர்

ஆதவன் : அம்மா... அப்பா இப்படி தான் அடிக்கடி மூஞ்சிய தூக்கி வச்சுப்பாங்க... நீங்க வந்து படுங்க..

கதிர் : பொடி பையலே... உன்ன....

முல்லை : 🤣

அன்றைய நாளும் மகிழ்ச்சியான நாளாகவே நிறைவுற்றது...

-----------------------------------

சில மாதங்கள் கடந்த நிலையில்....

வீட்டில் இருக்கும் எல்லா நேரமும் ஆதவன் முல்லையின் பின்னாலே சுற்றிக் கொண்டிருக்கிறான்...

இரவில் கதிர் முல்லை அறையிலேயே அதிகம் உறங்குகிறான்...

சில நேரங்களில்.....

லட்சுமி அழைத்துச் சென்று தன்னுடன் படுக்க வைத்துக் கொள்வார்....

இன்று....

லெட்சுமி : தங்க புள்ள இன்னைக்கு பாட்டி கூட வந்து படுத்துகிறீர்களா

ஆதவன் : என்ன பாட்டி சும்மா சும்மா உங்க கூட கூப்பிடுறீங்க..

லெட்சுமி : பாட்டிக்கு ரொம்ப கால் வலிக்குதுடா தங்கம்.. நீ வந்தீனா பாட்டிக்கு கால் புடிச்சு விடுவ..

ஆதவன் : உங்களுக்கு கால் புடிச்சு விட்டுட்டு நான் வந்து அம்மா கூட படுத்துக்கவா...

லெட்சுமி : நீ பாட்டி கூட படுத்து கிட்டினா பாட்டிக்கு சுத்தமா கால் வலியே இல்லாம.. வலி காணாம போயிடும்டி தங்கம்..

ஆதவன் : அதுதான் இந்த ஆதவனோட சூப்பர் பவர்... நான் வந்தா உங்க வலி காணாம போகுது பாத்தீங்களா..

லெட்சுமி : ஆமாண்டி தங்கம்.. அதான் நீ பாட்டி கூட வந்து படுத்துக்கிறியா.. பாட்டியோட வலி எல்லாம் காணாம போயிடும்..

ஆதவன் : சரி பாட்டி நான் வந்து உங்க கூட படுத்துக்குறேன்..

ஆதவன் பாண்டியன் லட்சுமியுடன் படுக்க சென்றுவிட...

KM அறை....

முல்லை நாளை பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பாடப்புத்தகத்தின் குறிப்புகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்...

அப்போது இடையில் துண்டுடன் ஈரத்தலையோடு தன் தலையை துவட்டி கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வந்தான் கதிர்..

கதிர் : என்ன மேடம் எங்க உங்க அருமை புதல்வன்

முல்லை : 😏

கதிர் : என்ன லுக்கு😏

முல்லை : ஏன் அவன் உங்களுக்கு  புதல்வன் இல்லையா😏

கதிர் : அவர் எப்பயும் உங்க வாலை புடிச்சிக்கிட்டு தான சுத்துறாரு அப்போ உங்களுக்கு தானே அருமை புதல்வன்

முல்லை : ஓ அப்ப எனக்கு வால் இருக்குன்னு சொல்ல வரீங்க😠

கதிர் : இதில் என்ன சந்தேகம் நீ வாலு தானே அப்போ உனக்கு வால் இருக்க தானே செய்யும்

முல்லை : 😡

கதிர் : இப்படி நீ கோபப்படும்போது உன் முகம் எவ்ளோ அழகா தக்காளி பழம் மாதிரி சிவந்து இருக்கு தெரியுமா🤣

முல்லை : ஓஓஓ.. இவ்வளவு நேரம் animal ah இருந்தேன் இப்ப fruit ah மாறீட்டேனா...

கதிர் : என்னடி எது சொன்னாலும் கோபப்படுற...

முல்லை : நீங்க வந்ததுல இருந்து என்கிட்ட ஏட்டிக்கு போட்டியா தானே பேசிட்டு இருக்கீங்க...

கதிர் : அச்சச்சோ.. என் செல்ல குட்டிக்கு என்ன ஆச்சு... ஏன் இன்னைக்கு ஒரு மாதிரி பேசுறீங்க..

என அவள் அருகில் நெருங்கப் போக..

முல்லை : நீங்க கேட்கிற கேள்வி அப்படி பேசுற பேச்சு அப்படி..

கதிர் : ஆதவன் பேசாம இங்கேயே இருந்திருக்கலாம்... இந்த மாதிரி எதுவும் நடக்காம இருந்திருக்கும்..

முல்லை : என்ன சொன்னீங்க..

என அவன் இடையில் இருக்கும் துண்டை பிடித்து இழுக்க...

துண்டை மட்டுமே அணிந்திருந்த கதிரோ என்ன செய்வது என புரியாமல்...

சட்டென தன் கைகளால் முல்லையின் கண்களை இறுக முடிவிட🙈..

முல்லை : ஏங்க கை எடுங்க... இந்த மாதிரி நேரத்துல எல்லாரும் எதை மறைக்கணுமோ அதை தான் மறைப்பாங்க நீங்க என்னங்க என் கண்ணை மூடுறீங்க😂

கதிர் : முதல்ல நீ துண்ட குடு... அவள் கைகளில் இருக்கும் துண்டை எடுக்க போக முல்லையோ அந்த துண்டை தருவதாய் இல்லை...

முல்லை : நீங்க முதல்ல என் கண்ணில் இருந்து கைய எடுங்க...

கதிர் : முதல்ல நீ துண்ட குடு

முல்லை : எங்க ரொம்ப பண்ணாதீங்க என்னமோ நான் பாக்காதது புதுசா காட்டுற மாதிரி தான்🙊

கதிர் : என்னடி நான் பேச வேண்டிய டயலாக் எல்லாம் நீ பேசுற..

முல்லை : உங்களுக்கு தான் இதெல்லாம் வராதே.. அதனாலதான் நானே பேசுகிறேன்..

கதிர் : உன்ன விட்டா பேசிக்கிட்டே இருப்ப இருடி இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்...

சட்டென முல்லையை மெத்தையில் தள்ளியவன் அவள் மீது விழ...

இவனுக்கெனவே மின்சாரத் துறையும் மின்சாரத்தை நிறுத்தி உதவி புரிய....

ஏட்டிக்கு போட்டி பேசிக்கொண்டிருந்த இருவரது வாயும் ஒன்றோடு ஒன்று சண்டை போடத் தொடங்கின முத்தத்தினால்....

காலையிலிருந்து வேலை செய்து களைத்து போன அவளது உடலில் இருந்து வந்த வியர்வை வாசம் அவனை சந்தனம் போல் சுண்டி இழுக்க....

புதிதாய் பூத்த மலரை போல் குளித்து முடித்து புத்துணர்ச்சியோடு வந்த அவனது தேகத்தின் வாசமோ இவளை கிறங்கி போகச் செய்ய...

முத்தச்சண்டை உச்சத்தை தொட தயாராக....

இவனது விரல்கள் அவள் உடலில் நாட்டியமாட.....

இவன் நடனத்துக்கு அவளோ இசைந்து ஜதி சொல்ல....

பக்கம் பக்கமாய் வசனம் பேசிக் கொண்டிருந்தவளுக்கு....

கதிர் என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு ஒன்றும் வரவில்லை அவள் வாயிலிருந்து....

அவள் முனகும் இவனின் பெயர் கேட்க இவனுக்கோ ஆனந்தமாய் இருந்தது...

கட்டுப்பாட்டை இழந்தவன் எல்லைகளை மீறி இலக்கை அடைந்து விட்டான்...

வந்து போன அடையாளத்தையும் பதித்து விட்டான்.....

சில மணி நேர காதல் போராட்டத்திற்குப் பிறகு....

ஒரு போர்வைக்குள் இருவரும்...

அவன் இதயத்தில் தலை சாய்த்தவளாய்....

முல்லை : கதிர்...

கதிர் : ம்ம்...

முல்லை : நமக்கு எப்ப பாப்பா வரும்..

கதிர் : இப்போ என்ன திடீர்னு..

முல்லை : சொல்லு நமக்கு எப்போ பாப்பா வரும்...

கதிர் : அது எல்லாம் இப்ப வேணாம் பொறுமையா வரட்டும்..

முல்லை :

கதிர் : முல்ல..

முல்லை :

கதிர் : ஏய் என்னாச்சு...

முல்லை : நமக்கு குழந்தை வரது உங்களுக்கு பிடிக்கலையா..

கதிர் : இப்போ எதுக்கு அதெல்லாம் நமக்கு தான் ஆதவன் இருக்கானே...

முல்லை : அப்போ நமக்கு அவன் மட்டும் போதுமா..

கதிர் :

முல்லை : சொல்லுங்க அப்ப நமக்கு குழந்தை வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்களா...

கதிர் : அது இல்ல முல்ல..

முல்லை : நமக்கு இன்னொரு குழந்தை வந்துட்டா நான் ஆதவனுக்கு நல்ல அம்மாவா இருக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா..

கதிர் : நான் அப்படி எல்லாம் சொல்லல முல்ல..

முல்லை : அப்ப கடைசி வரைக்கும் நமக்கு குழந்தை பிறக்க கூடாதுன்னு நினைக்கிறீங்களா

கதிர் : ஏய்... என்ன பேசுற.. அவசரத்துல வார்த்தையை விடாத முல்ல...

முல்லை : உங்க குழந்தை எனக்குள்ள வேணுங்க..

கதிர் : பெத்துக்கலாம் இப்ப வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்...

முல்லை : ஏன்...

கதிர் : கொஞ்ச நாள் நமக்குன்னு செலவு பண்ணுவோம்..

முல்லை : இப்படி சொல்லி என் அமைதியாக்கிட்டு.. அப்புறம் நமக்கு குழந்தை வேணாம்னு சொல்ல போறீங்களா

கதிர் : எப்ப பாத்தாலும் எல்லாத்துலையும் உனக்கு அவசரம் தானா..

முல்லை :

கதிர் : நா சொல்றத பொறுமையாவே கேக்க மாட்டியா...

முல்லை :

கதிர் : இப்ப இருக்கிற ஒருத்தனே நம்ப ரெண்டு பேருக்கும் நேரம் செலவிட நேரத்தையே கொடுக்க மாட்டுறான்... இதுல இன்னொரு ஆள் வந்துருச்சுன்னு வச்சுக்கோ அப்புறம் சுத்தம் உன்னை என் பக்கத்துல பாக்குறது உலக அதிசயம் ஆயிடும்..

முல்லை : உண்மையாவே வா

கதிர் : உண்மையா தான் சொல்றேன்.. பகல்ல ரெண்டு பேரும் வேலைக்கு போயிடுறோம்.. வீட்டுக்கு வந்தா எந்த நேரமும் வீட்டு வேலை பார்க்கிற இல்லைன்னா அந்த குட்டி பைய உன் கூடவே இருக்கிறான்..

முல்லை : ம்ம்..

கதிர் : நம்ம ரெண்டு பேரும் தனியா ஒரு அரை மணி நேரம் சேர்ந்து உட்கார்ந்து பேசுறது பெரிய விஷயமா இருக்கு..

முல்லை :

கதிர் : நான் தப்பா எதுவும் சொல்லல.. உன் கூட நேரம் செலவிடனும்னு எனக்கும் ஆசை இருக்கும் இல்ல..

முல்லை : சரி அப்ப நம்ம எப்ப குழந்தை பெத்துகிறது...

கதிர் : நமக்கு எப்போ பொறக்கணுமோ அப்ப சரியா பொறக்கும்...

முல்லை : என்னைக்குமே நான் ஆதவனுக்கு நல்ல அம்மாவா இருப்பேன்.. ஆனா நமக்குன்னு ஒரு குழந்தை நமக்கு கண்டிப்பா வேணும்..

நம்ம காதலோட அடையாளமா....

கதிர் : கண்டிப்பா.. எப்ப நமக்கு நம்ம காதலோடு அடையாளம் கிடைக்கணுமோ அப்ப கிடைக்கும் நீ தேவை இல்லாம அதையே நினைச்சுகிட்டு இருக்காத...

முல்லை : ம்ம்

கதிர் : சரி அப்ப இன்னொரு ரவுண்டு போவோமா🙊

முல்லை : உன்ன🙈

அன்று இரவு அவர்களுக்கு இன்பமாய் கடந்து போக....

--------------------------------------

சில மாதங்கள் வேகமாய் கடந்து போனது.......

கதிர் முல்லை இருவரின் வேலைகளும் அவர்களுக்கு என நேரத்தை கொடுக்கவில்லை...

குடும்ப பொறுப்புக்கள் தன் வேலை தன் மகன் என நாட்கள் வேகமாக நகர்ந்தன முல்லைக்கு...

வேலை விட்டு வந்ததும் தன் மகன் மனைவியை முதல் தேடுவான் கதிர்...

இவர்களுக்கு கிடைக்கும் சிறு தனிமையான நேரத்தையும் இருவரும் மகிழ்ச்சியாக செலவழித்தனர்....

அன்றைய தினம் வெற்றி கதிரை சந்திக்க வர...

முல்லை ஆதவனுக்கு உணவு ஊட்டி கொண்டிருக்க....

முல்லை ஆதவன் இடையேயான உறவு என்றுமே வெற்றிக்கு மகிழ்ச்சியை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறது....

தன் தங்கை இருந்திருந்தால் கூட ஆதவனை இப்படி கவனித்துக் கொள்வாளோ என்னவோ...

கதிரும் முல்லையும் ஆதவனை தங்கள் சொந்த பிள்ளை போல் வளர்த்து வருகின்றனர்...

வெற்றிக்கு தன் தங்கை மகனை நினைத்து ஒருநாளும் பயம் வந்ததில்லை...

அது போலவே இன்றும் ஆதவன் முல்லையை தூரம் நின்று ரசித்துக்கொண்டிருந்தான் வெற்றி....

கதிர் : வெற்றி வாடா.. என்ன வாசல்லையே நின்னுட்ட...

வெற்றி : ஆங்.. ஒன்னும் இல்ல சும்மா தாண்டா...

கதிரும் வெற்றியும் பேசிக் கொண்டிருக்க.....

ஆதவன் : அப்பா.. அப்பா.. எனக்கு கூச்சலிட...

சந்திப்போம்🙏

Continue Reading

You'll Also Like

16.6K 611 19
a suspense police love story ..read பண்ணி பாருங்க😊
81.9K 3.8K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...
11.2K 486 8
ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்...
26.3K 1K 12
சூழ்நிலையின் தாக்கத்தில் பிரிந்து போன இரு உள்ளங்கள், நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்... அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்க...