கடிவாளம் அணியாத மேகம்

Da vishwapoomi

183K 8.6K 1.4K

கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்... Altro

அத்தியாயம் 1
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41

அத்தியாயம் - 2

6.3K 204 35
Da vishwapoomi

"ஏண்டிம்மா இந்த சின்ன வயசுக்குள்ள குழந்தை பெத்துக்க தெரிஞ்ச உனக்கு அதை பத்திரமா பார்த்துக்க தெரியவேண்டாமோ! எப்போ பாரு வீல் வீல்ன்னு தொண்டை வரண்டு போற அளவுக்கு  அழுதிச்சின்னா குழந்தை என்னத்துக்கு ஆகும்.  பிறக்கும் போது கொழு கொழுன்னு இருந்த குழந்தையை இப்படி எலும்பும் தோலுமா ஆக்கி வச்சிருக்கியே.!" என்று திட்டிக்கொண்டே குழந்தையை ஆட்டி ஆட்டி விளையாட்டு காட்டினார் அம்சா பாட்டி. 

"நான் என்ன செய்வேன்? பால் கொடுக்கத்தான் செய்யுறேன்." என்றாள் அனுமித்ரா கவலையுடன்.  

அவளை நிமிர்ந்து பார்த்த பாட்டி " நீ முதலில் உன் கோலத்தை மாத்து.  இருக்குறது ஈக்கு குச்சி போல.  இதுல விலக்குமாத்துக்கு சுற்றிவிட்டது போல இந்த சேலை உனக்கு தேவைதானா? நல்லா கருங்கருன்னு மூடியை இடுப்புக்கு கீழே வச்சுண்டு அதை இப்படியே கொண்டை போட்டே நாசம் பண்ணுறியே! சாயந்திரம் உன் புருஷன் வந்த பிறகு என்னை வந்து பார்க்க சொல்லு. சும்மா சொல்ல கூடாது உன் புருஷனை உன்னையும் வச்சு காலம் தள்ளுரானே! ஆமாம் உன்கிட்ட என்ன இருக்குன்னு அந்த பய இப்படி பிஞ்சா இருக்க உன்னை தள்ளிட்டு வந்திருக்கான்.  அவனுக்கு அறிவே இல்லை.  அவன் இருக்கிற அழகுக்கும், கட்டுமஸ்தான உடம்புக்கும் எப்பேர் பட்ட அழகியை பார்த்திருக்கலாம்.  போயும் போயும் இந்த சுருங்கி போன சுண்டைக்காய்தான் அவன் கண்ணில் பட்டிச்சா என்ன?" என்றார் கேலியாக. 

"அதை அவரிடமே கேளுங்க." என்று குழந்தை வாங்கிக்கொண்டு படியேறியவள் "பாட்டி உண்மையிலேயே நான் பார்க்க ரொம்ப கேவலமா இருக்கிறேனா?" என்று என்று கேட்டாள்.

அவளை பாசத்துடன் பார்த்த பாட்டி "இல்லடிம்மா, நான் சும்மா சொன்னேன்.  நீ துடைச்சு வச்ச குத்துவிளக்கு போல அழகு.  மாசு மரு இல்லாத பால் முகம். வயசுக்கு மீறிய கஷ்டத்தை நீ அனுபவிக்கிறதால உன் முகம் களைச்சு போயிருக்கு அவ்வளவுதான்.  குழந்தை வளந்துட்டா எல்லாம் சரியாயிடும். இனியாவது உன் புருஷனை கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லு." என்றார் அவர் சிரித்துக்கொண்டு.

"அதையும் நீங்களே சொல்லிடுங்க." என்று கூறிவிட்டு போனாள் அனுமித்ரா சிரித்துக்கொண்டு.  சிரிக்கும் போது இந்த குழந்தை எத்தனை அழகா இருக்கு! என்று பாட்டி நினைத்துக்கொண்டார்.

பாட்டி பேசனுமுன்னு சொன்னாங்க என்று அனுமித்ரா சொல்ல பாட்டியை தேடி போனான் ஜீவன்த். 

"பாட்டி"

"வாப்பா ! பார்த்து ரொம்ப நாளானது போல இருந்துச்சு, அதான் வர சொன்னேன். இந்த கீழ் போஷன் அடுத்த வாரம் காலியாக போகுது.  வீட்டுக்காரன் இதை வேற யாருக்கும் கொடுக்கும் முன்னே நீ புக் பண்ணிடு.  உன் பொண்டாட்டி மேலேயும், கீழேயும் ஏறி இறங்கியே எலும்பா போயிடுவா போல.  அப்புறம் அவளுக்கு இந்த சேலை எல்லாம் ஒத்துவரல.  இல்லாத இடுப்பில் அதை இழுத்து சொருகுவாளா? சதா அழும் குழந்தையை பார்ப்பாளா? இந்த சுடிதாரு, இறுக்கி பிடிக்காத பேன்ட் சட்டை வாங்கி கொடு." என்றார் பாட்டி.

"ஆனா பாட்டி குழந்தைக்கு பால் கொடுக்குறாளே!" என்று அவன் இழுக்க 

"அதனால் என்ன? இப்போதான் அதுக்கு ஏத்த மாதிரி துணி கிடைக்கே!" என்றவர் அவனுக்கு மேலும் சில ஆலோசனை கூறி மறக்காமல் அடுத்த குழந்தைக்கு பொறுமையாக இருக்கும் படி சொல்லி அனுப்பினார்.  மேலே வந்து அனுமித்ராவை பார்த்த ஜீவன்த் அவளை பார்த்து சிரித்தான். 

"என்ன சிரிப்பு மாமா?" என்றாள் அனுமித்ரா பாட்டி என்ன சொல்லியிருப்பார் என்று தெரிந்துக்கொண்டே.

"இல்ல பாட்டி வண்டி வண்டியா புத்திமதி சொல்லி அனுப்பினாங்க.  அதை நினைச்சேன் சிரிச்சேன்.  மனுஷன் இருக்கிற இருப்பில் இன்னொரு குழந்தையா? ஐய்யோ..அம்மான்னு ஓடிட மாட்டேன்.  இங்கே வீட்டை சமாளிக்க முடியாமல் முழி புதுங்குது. ஆபிஸில் வேற ஒரு புது பிரச்சனை கிளம்பிருக்கு.  முதலில் கிடைச்ச வேலைதான் தலைவலின்னு விட்டுட்டு நல்ல வேலைன்னு இந்த வேலைக்கு வந்தேன்.  சம்பளமும் பரவாயில்லை, வேலை டென்ஷனும் இல்லைன்னு பார்த்தா ஒரு பொண்ணு ரூபத்தில் பிரச்சனை வந்திருக்கு.  அவ பார்வையே சரியில்லை.  நாலு மாசமா தெரியாமல் லுக்கு விட்டவ, இப்போ தெரியுற மாதிரி லுக்கு விடுறா.  சீக்கிரமே வந்து லவ்வை சொல்லுவான்னு நினைக்கிறேன். போடின்னு துரத்த கூட முடியாது, அப்புறம் அவ என்னை துரத்திடுவா." என்றான் ஜீவன்த்.

"ஏன்?" என்றாள் அனுமித்ரா அதிர்ச்சியுடன். 

"ஏன்னா அவள்தான் அந்த கம்பெனி முதலாளி." என்று கூறிவிட்டு போனான் ஜீவன்த்.  போகும் அவனை பல்லை கடித்துக்கொண்டு முறைத்தாள் அனுமித்ரா.

என்றும் கேட்கும் குழந்தையின் அழுகுரல் இன்று கேட்காமல் போகவே ஜீவன்த் படுக்கையறையை எட்டி பார்த்தான்.  தாயும் மகனும் நித்திரையில் இருந்தார்கள். மெல்ல அவர்கள் அருகில் சென்றவன் மகனை தூக்கி தொட்டிலில் படுக்கவைத்தான்.  எத்தனையோ முறை அவளிடம் கூறியிருக்கினான் குழந்தையை தொட்டிலில் படுக்கவை, பக்கத்தில் போட்டு பழக்காதே என்று.  மறுப்பேதும் கூறாமல் தலையை தலையை ஆட்டுவாள். ஆனால் மீண்டும் அதைத்தான் செய்வாள்.  கேட்டால் தனியே படுக்க ஒரு மாதிரி இருக்கு என்பாள். 'நான் பக்கத்தில் படுத்துக்கவா?" என்று கேட்டால் அதுக்கும் மறுத்துவிடுவாள்.  

தூங்கும் அவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவள் அவளின் புரண்ட கேசத்தை ஒதுக்கிவிட்டான்.  பட்டென்று விழித்துவிட்டாள். 

"ரிலாக்ஸ் அனும்மா, நான்தான்." என்றான் ஜீவன்த்.

"ம்" என்றவள் தன் நெற்றியில் இருந்த அவன் கரத்தை கைவைத்து பிடித்துக்கொண்டு "பட்டு எப்போ வளர்வான் மாமா." என்றாள்.

"சீக்கிரம் வளந்திருவான். அதுக்கு முன் நீ வளரனும்.  மாமா உனக்கு என்ன சொல்லி தந்திருக்கிறேன்? தவறுகள் ஒருமுறை இருமுறை நடக்கலாம்.  அதுக்காக சோர்ந்து போக கூடாது.  எதையும் பிளான் போட்டு நிதானமாக, ரசிச்சு செய்தால் கஷ்டமாக பீல் ஆகாது.  பட்டுடைய அழுகையை பார்த்து மிரளாமல் அவன் செய்யும் சின்ன சின்ன செய்கையை பாரு.  அதுல உன்னை தொலைச்சிடுவ.  அப்போ நாட்கள் நகராது, ஓடும்.  நீயும் வளர்ந்திரலாம், பட்டுவும் வளந்திடுவான்." என்றான் மென்மையாக.

"ம்" என்று தலையை ஆட்டியவள் அவன் கையைவிட்டுவிட்டாள்.  

"தூங்கு" என்று அவன் திரும்பவும் "மாமா உங்க முதலாளியம்மா ரொம்ப அழகா இருப்பாங்களா?" என்று கேட்டாள்.

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் கூறாமலேயே சென்றுவிட்டான். போகும் அவன் மனதில் நினைத்துக்கொண்டான்  "எந்த பெண்தான் உலகத்தில் அழகு இல்லை? எல்லோரும் எல்லாவிதத்திலும் அழகுதான்.  ஆனால் அழகு மிக மிக ஆபத்தானது."

அனுமித்ரா பெட்ரூமில் படுத்துக்கொள்ள ஹாலில் வந்து படுத்தவன் மனம் வேலை செய்யும் இடத்திற்கு போனது.  சில ஆபிஸ் மாதிரி பிக்கல் பிடுங்கல் இல்லாத ஆபிஸ். வேலையை மட்டும் சரியாக செய்தால் போதும், கேட்காமலேயே சில சலுகைகளை கொடுக்கும் நிறுவனம்.  அக்கௌன்ட் செக்சனின் வேலை செய்தவனை இப்போ மேனேஜர் லெவலுக்கு கொண்டு போயிருக்கிறது.  அதில்தான் இவனுக்கு ஒரு சந்தேகம்.  இதெல்லாம் என் திறமைக்கு கிடைத்ததா? இல்லை என்னை கண் எடுக்காமல் பார்க்கும் அந்த நிறுவனத்தின் சொந்தகாரியின் தயவில் கிடைத்ததா? என்று.  

எதற்கு கிடைத்தாலும் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியாது.  ஆடைவடிவமைப்பில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனத்தில் கிடைத்த இந்த போஸ்டும், அதன் மூலம் கிடைக்கும் சம்பளமும் ரொம்பவே முக்கியம் இவனுக்கு.  என்னதான் செலவை குறைத்து கொண்டாலும் வரவுக்கும், செலவுக்கும் சரியாகவே இருக்கிறது.  குழந்தைக்கு சளி பிடித்திருக்கிறது என்று ஹாஸ்பிடல் போனால் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை செலவாகிவிடுகிறது.  அனுமித்ரா பலவீனமாக இருப்பதாலும், குழந்தைக்கு பாலுட்டுவதாலும் அவளுக்கு தனியாக சில ப்ரோட்டீன் பவ்டர், நட்ஸ், நான்வெஜ் என்று அதற்கு ஒரு செலவு.  முன்பு இருந்த வீடு அவ்வளவு வசதியில்லை என்று இந்த வீட்டுக்கு வந்ததில் கூடுதல் செலவு. 

இந்த செலவுகளை சமாளிக்க என்ன தொந்திரவு வந்தாலும், பிரச்சனை வந்தாலும் இந்த வேலையை விடமுடியாது என்று அவன் நினைக்க அவனின் மனம் இடித்துரைத்தது 'உன் முதலாளியம்மா உனக்கு தொந்திரவும், பிரச்சனையுமா தருகிறாள்?' என்று. 

"இல்லை, இல்லை அவள் அப்படி ஒன்றும் இல்லை.  நல்ல பெண்.  பேசவும், பழகவும் இனிமையானவள்.  அவளின் கொஞ்சும் தமிழும், நிமிர்ந்த நடையும் அவளுக்கு தனி அழகு." என்று எண்ணியவன் அவள் தன் ஆபிஸ்க்கு வந்த முதல் நாளை நினைத்தப்படி தூங்கி போனான்.

இந்த நிறுவனத்திற்கு ஆடை வடிவமைப்பு மட்டும் அல்ல, அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு சில பல தொழில்கள் இவர்களுக்கு இருக்கிறது இந்தியாவிலும், வெளிநாட்டிலும்.  அனைத்தையும் கவனிக்க ஒருவன் இருக்க, அவனின் தங்கையான இவளுக்கு எந்த பிஸினெஸ் பிடிக்கிறதோ அதில் கொஞ்ச நாள் இருப்பாள்.  போர் அடித்துவிட்டால் அடுத்த நாட்டுக்கு சென்றுவிடுவாள்.  அப்படி வெளிநாடு போர் அடித்துவிட்டது என்று இந்தியா வந்தவள் இந்த கம்பெனிக்கு வந்தாள். பெயர் சயூரிவேதா.

வந்த முதல் நாள் எல்லோரிடமும் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டவள் அந்த நிறுவனத்தின் சொந்தக்காரி என்ற கெவுரவம் இல்லாமல் எல்லோருடனும் சகஜமாக பழகினாள்.  அவளுக்கு எல்லோரின் பழக்கவழக்கத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.  அங்கே நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். எல்லோரிடமும் அந்த வயதுக்கு ஏற்ற கலகலப்பு இருக்கும்.  ஆனால் ஜீவன்த் மட்டும் தனியாக இருப்பான்.  அவனின் கவனம் இல்லாமே வேலையில்தான் இருக்கும்.  வேலையைவிட்டால் போனை பார்த்துக்கொண்டு இருப்பான்.  

சயூரி ஒருநாள் ஒரு மீட்டிங் போக துணைக்கு தன்னுடைய பிஏவுடன் கிளம்ப, பிஏவின் தாயாருக்கு திடீர் உடல்நல குறைவு என்று போன் வந்தது.  உடனே அவரை அனுப்பிவிட்டு தன்னுடைய கவனத்தை கொஞ்சமேனும் கவர்ந்த ஜீவன்த்தை அழைத்துக்கொண்டு மீட்டிங் கிளம்பினாள். கொடுக்கப்பட்ட அரைமணி நேரத்தில் மீட்டிங் சம்பந்தப்பட்ட அனைத்தையுமே தெரிந்து கொண்டு அவளுக்கு உதவி செய்த இவனை அவளுக்கு வேலை நிமித்தமாக மிகவும் பிடித்து போனது.
என்ன ஒரு சிக்கல் ஏழு மணிக்கு மேல் எங்கேயும் நிற்கமாட்டான்.  வீட்டுக்கு போகணும், ஆத்தா வையும், ஆளை விடு என்கிற கேஸு.

இவனின் இந்த பழக்கம் அவளுக்கு சிரிப்பைத்தான் ஏற்படுத்தும்.  பாவி அப்போதே காரணத்தை அழுத்தி கேட்டிருக்கலாம்.  அவளுக்கு அவனை பார்க்க விளையாட்டாக இருந்தது போல.

பெண்கள் எல்லோரும் பலவீனமானவர்கள், ஆண்கள் அவர்களை பாதுகாக்க வந்தவர்கள் என்ற எண்ணம் கொண்ட ஊரில் வளர்ந்தவள்  இல்லை அவள்.  அவளுக்கு அது பழக்கமும் இல்லை. எங்கேயும் சிங்க பெண்ணாக வலம் வந்து பழக்கப்பட்டவள் முதல் முறையாக ஒரு ஆணின் பாதுகாப்பை உணர்கிறாள்.  அவளுக்கு ஒரு அண்ணன் உண்டுதான்.  சரியான டான் அவன்.  அவனிடம் யாரையாவது பற்றி இவள் புகார் செய்தால் தவறு யார் பக்கம் என்று கூட யோசிக்காமல் கன்னை எடுத்து அவர்கள் நெற்றி பொட்டில் வைத்து அழுத்த போய்விடுவான். பிறகு இவள்தான் அவனிடம் மன்றாடி சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றுவாள். நிழல் போல பெண்களுக்கு ஒரு ஆணின் துணை தேவையில்லை,  அந்த ஆண் இருக்கிறான் என்ற எண்ணமே அந்த பெண்ணை நிமிர்ந்து வைக்கவேண்டும் என்று நினைப்பவன் இவளின் அண்ணன்.

ஆனால் ஜீவன்த்தோ பெண்களை கண்ணுக்குள் வைத்து காக்க வேண்டும் என்று நினைப்பவன்.  மீட்டிங்க்கு இவளுடன் செல்பவன் இவள் சொல்லும் வேலையும் செய்வான், சொல்லாத வேலையும் செய்வான்.  அவளின் பாதுகாப்பில் அதிக கவனத்துடன் இருப்பான்.

அதிகம் உயரம் உள்ள ஹை ஹில்ஸை போட்டுக்கொண்டு அவள் அசால்ட்டாக நடக்க அவளுடன் செல்லும் இவனின் பார்வை எல்லாம் அவள் காலில்தான் இருக்கும்.  மனதிற்குள் ஆயிரம் நேரம் நினைத்திருக்கிறான் "விழுந்து கிழுந்து வாரி தொலைச்சிடாதேம்மா." என்று.

ரெஸ்ட் ரூமுக்கு கூட தனியாக விட தயங்குவான்.  ஒருநாள் கேட்டான் ரெஸ்ட் ரூம் செல்ல எழும்பியவளிடம்.  "நானும் வரவா?" என்று.

"சாரி வாட் யூ சே" என்று அவள் புருவத்தை நெரிக்க 

"நானும் வரவான்னு கேட்டேன்.  மீட்டிங் வைக்க வேற ஹோட்டலே இல்லன்னு இந்த டன்ஜன் ஹோட்டல்ல வச்சிருக்கானுங்க.  ரெஸ்ட் ரூம்  எங்கோ அன்டெர் க்ரவுட்ல இருக்குற மாதிரி இருக்கு. யாரும் முகத்தை மூடி தூக்கிட்டு போனா கூட தெரியாது." என்றான். 

"இட்ஸ் ஓகே, ஐ கேன் மேனேஜ்.  ஐ அம் நாட் அ சைல்ட்.  என் மேல ஒருத்தன் கையைவச்சுட்டு என் அண்ணிடம் இருந்து தப்பிவிடுவானா? ஸ்வாக பண்ணிடுவான்." என்றவள் லேசாக சிரித்துக்கொண்டு ஒரு நாலு எட்டு எடுத்துவைத்துவிட்டு இவனை திரும்பி பார்த்தாள்.  அவன் முகம் சரியாக இல்லை. 

"ஓகே வாங்க.  ஆனா வெளியே நில்லுங்க." என்றாள் கேலியாக. 

அவள் கேலியை  புரிந்துக்கொண்டாலும் வாய்க்குள் முனுமுனுத்துக்கொண்டு அவளுடன் சென்றான் அவன்.  அவள் உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும் வரை அவளுக்காக காத்திருந்தவனை பார்த்து அவளுக்குள் லேசாக ஒரு மயக்கம் தொடங்கியது.  

ஆடை வடிவமைக்கும் நிறுவனம் என்பதால் இவர்களின் மீட்டிங் எல்லாம் கலர்புல்லாதான் இருக்கும்.  பார்டி, மாடல்ஸ், சினிமா பீல்ட்டில் உள்ளவர்கள் என்று எல்லாமே ஹை ரேஞ்சில் இருக்கும். யதார்த்தமான ஒருவரையும் அங்கே பார்க்க முடியாது. 

"மேடம் மீட்டிங் முடிஞ்சுதுள்ள, அப்புறம் ஏன் இங்கே இருக்கிறோம்.  கிளம்பலாமா?" என்று கேட்பவனை ஒரு பார்வை பார்ப்பாள். 

"மணி ஏழாக போவுது." என்பான்  அவன். 

"ஏழு மணிக்கு வீட்டுக்கு போக உங்களுக்கு அர்ஜெண்டா இருக்கலாம்.  எனக்கு எந்த வேலையும் இல்ல.  நீங்க கிளம்புங்க." என்று அவள் இருக்க அவன் என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாவியாக அவனை பார்த்துகொண்டு நிற்பான். 

"என்ன மேன் அப்படி லுக் விடுறிங்க? இனி உங்களை என்னுடன் சேர்த்துக்க மாட்டேன்.  நீங்க இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டிங்க.  வாங்க போகலாம்.  ஒரு பார்டி, என்ஜாய்மென்ட் பார்த்து இரண்டு மாசம் ஆகுது." என்று சலித்துக்கொண்டே அவனுடன் எழுந்து போவாள்.  

ஒருநாள் பர்த்டே பார்டிக்கு என்று சென்றார்கள்.  திறந்த புல்வெளியில் வைத்திருந்தார்கள் பார்டியை.  அழகுக்கு என்று சற்று பள்ளம், மேடாக அலங்கரிக்கபட்டிருந்தது அந்த இடம்.  இவளின் ஹை ஹீல்ஸ் அவளுக்கு கொஞ்சம் இடைஞ்சல் கொடுத்தது.  இவள் கொஞ்சம் தயங்கி நிற்க அவன் இவளுக்கு கை கொடுத்தான்.  சிரித்துக்கொண்டு அவன் கையோடு தன் கையை இணைத்துக்கொண்டு சென்றவள் அதை விடாமல் இருக்க, இவன் கையை விட்டுவிட்டு முன்னே சென்றான்.  அவளுக்கு சிறிது கோபம் எட்டிப்பார்த்தது.  அதனால் திரும்ப கீழே இறங்கும் போது தனியே இறங்க முயன்றாள்.  அப்போதும் வந்து சரியாக அவளுக்கு உதவி செய்தான்.  அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் அன்று முதல் இவனுக்காக ஒரு இடம் இருந்தது.  

குடும்பமாக வாழ்பவன் என்று தெரியாமல் இவனிடம் மனதை பறிகொடுத்தவளுக்கு அவள் ஆசை நிராசையாகும் போது என்னமாதிரி எடுத்துக்கொள்வாள்? இவளை ஒருவன் சும்மா சீண்டினாலே கொதித்து எழும் இவனின் அண்ணன் சாய்வேதன் தங்கையின் நிலையை எப்படி கையாள்வான்? கேள்வியுடன் நகர்கிறது இவர்களின் நாட்கள். 

Continua a leggere

Ti piacerà anche

32.5K 2.6K 92
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூ...
20.9K 498 55
ஆன்ட்டி ஹீரோ வகை காதல் கதை..
80K 3.8K 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா...
49.2K 2.9K 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்...