அத்தியாயம் 7

3.6K 185 26
                                    

"முடியவே முடியாதுண்ணா. இதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்கமாட்டேன். என் ஒருத்தியின் காதலுக்காக நீங்க இத்தனை பேர் கஷ்டப்படவேண்டாம். நான் என் காதலை மறந்துவிடுகிறேன்." என்று தன் மறுப்பை பயங்கரமாக தெரிவித்ததாள் சயூரி.

"புரியல! காதலை மறந்துவிட்டுகிறேன்னா நீ என்ன சொல்ல வர. ஜீவன்த்தை மறந்துட்டு அம்மா பார்க்குற மாப்பிளையை கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்றியா? அப்படின்னா எனக்கு ஓகே. நானும் ஒன்றும் பிடிச்சுபோய் இந்த முடிவை எடுக்கவில்லையே. ஆமா இந்த முடிவில் யார் கஷ்டபடுவாங்க? நீ காதலிச்சவனே உனக்கு கிடைச்சிடுவான், அவனுக்கும் அப்படித்தான். அந்த பெண்ணின் பிரச்சனையும் தீர்ந்துவிடும். அப்புறம் எனக்கு இதுல எந்த பாதிப்பும் வரபோறது கிடையாது. நானும் என்னை மாற்றிக்கபோறதில்லை. அப்புறம் யாருக்கு கஷ்டம் வரும்?" என்று கேட்டான் சாய்வேதன்.

"புரிஞ்சிதான் பேசுறியா? அனுவுக்கு இதில் பிரச்சனை தீராது. அவளுக்கு பிரச்சனை வெறும் சாப்பாடும், தங்குற இடமும் கிடையாது. அவளை நல்லவிதமாக பார்த்துக்குற ஒருத்தர் வேண்டும். அவ மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிற ஒரு சின்ன பெண். அவளுக்கு அன்பு வேண்டும், தட்டி கொடுத்து கொண்டு போகிற மனசு உடையவன் ஒருத்தன் வேண்டும். முக்கியமா அவளிடம் உடல்ரீதியாக எந்த உறவையும் எதிர்பாக்காத ஒரு ஆண் வேண்டும். இதுல எதுவுமே உன்னிடம் இல்லையே. நீ என் அண்ணன்தான். உன்னை நான் எங்கேயும் விட்டுகொடுத்தது இல்லை. அதற்காக நீ ரொம்ப நல்லவன் என்று அர்த்தம் இல்லை. இன்னைக்கும் ட்ரிங் பண்ணாம உன்னால் இருக்க முடியாது. போதையில் வேற பெண்ணை தேடாமல் உன்னால் இருக்க முடியாது. உன்னிடம் போய் எப்படி அந்த சின்ன பெண்ணை அவர் தருவார்.?" என்று கேட்டாள் சயூரி கோபத்துடன்.

"அவன் கொடுத்தாலும் நீ விடமாட்ட போல." என்றான் சாய்வேதன் சின்ன சிரிப்புடன்.

"எப்படி விடுவேன்? ஒரு தங்கையா உலகத்திலே பெஸ்ட் அண்ணன் யாருன்னு கேட்டா நான் என் அண்ணன் என்று பெருமையா சொல்வேன். அதுவே ஒரு பெண்ணா வொர்ஸ்ட் மேன் நீதான்னு சொல்வேன். நீ ஒரு பெண்ணுக்கு கணவனாக இருக்கும் தகுதிக்கு இன்னும் உன்னை தயார்படுத்திக்கல." என்றாள் சயூரி.

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now