அத்தியாயம் 37

4K 227 29
                                    

ஏர்போர்டில் ஒருவயது நிரம்பிய தன் மருமகள் சாஜிதாவுடன்  நிற்கும் சாய்வேதனை அங்கிருந்த இருக்கையில் இருந்தப்படி பார்த்துக்கொண்டிருந்தான் ஜீவன்த்.  ஆதிக் அவன் மடியில் இருந்தான்.  

"வேதா உன் அண்ணன் இப்படி காத்து நின்னே  கிழவன் ஆயிடுவான் போலேயே!" என்று கேலி பேசினான் ஜீவன்த்.

"சும்மா இருங்க.  அவனை பார்த்தா உங்களுக்கு கிழவன் மாதிரி தெரியுதா? உங்களை பார்க்கத்தான் நாலு பிள்ளைகளுக்கு அப்பா மாதிரி தெரியுது. என் அண்ணனுக்கு இப்போதான் இருபத்தெட்டு முடிய போகுது. அவனை பார்த்தா யாரும் அத்தனை வயசுன்னு சொல்ல மாட்டாங்க." என்றாள் சயூரி அண்ணனை விட்டுகொடுக்காமல். 

"ஆமாம் ரொம்ப இளமையாதான் தெரியுறான்.  அதுக்காக நீ அவன் வயசை யாரிடமும் சொல்லிவிடாதே.  இருபத்தெட்டு வயது முடிய போகும் ஒருத்தனுக்கு நான்கு வயது முடிந்த ஒரு மகன்!" என்றான் ஜீவன்த் அந்த பந்தையும்  விடாமல் சிக்ஸர் அடித்தப்படி. 

"போடா! உனக்கு பொறாமை." என்றாள் சயூரி பட்டென்று.

"ஏய்! சரி சரி உன் அண்ணனை பற்றி நான் பேசல.  நீ இறங்கி அடிக்க தொடங்கிடாதே!" என்று சமாதான கொடியை ஏற்றிவிட்டு சாய்வேதன் பார்த்துக்கொண்டிருந்த திசையை நோக்கி பார்த்தான் ஜீவன்த்.  சிறிது நேரத்தில் அங்கே ஒரு மெழுகு பொம்மை அசைந்து வந்தது. அவளேதான்! சாய்வேதனின் அழகி.  "நான் ஆஸ்திரேலியா போகணுமென்றால் நீ இந்தியாவுக்கு வந்துவிட வேண்டும்" என்ற ஒரு கன்டிசனை போட்டு சாய்வேதனை இந்தியாவுக்கு துரத்திவிட்டு ஒருவருடமாக தன் அத்தை, மாமாவிடம்  உறவாடிவிட்டு, அங்கே இருந்தே கல்லுரி சென்று  அவன் சொன்ன படிப்பை படித்ததுமட்டுமல்லாமல் அவன் பெற்றோரையும் மாற்றி 'என் மருமகளைப்போல வருமா' என்று அவர்களை இவளுக்கு ஜாலரா தட்ட வைத்துவிட்டு இன்று திரும்பி வருகிறாள்.  

அங்கே சென்று அவள் படித்த பெரிய பாடம் 'கல்வி மட்டுமே எல்லாவற்றையும் மாற்ற வல்லது. ஒருவர் படிக்கும் படிக்கு அவரின் எந்த சூழ்நிலையையும் அவருக்கு ஏற்றார் போல மாற்றிவிடும்' என்பதைத்தான்.  இங்கே படித்த மூன்று வருடமும் ஏதோ கடமைக்கு என்று படித்தவள், அங்கே சென்று இந்த படிப்பை வைத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற வேகத்தை வளர்ந்துக்கொண்டாள்.  இங்கே ஒருவன் இரண்டாவது குழந்தைக்கு அடிபோட்டுக்கொண்டு இருக்க அவளோ வேறு ஒரு ஐடியாவுடன் வந்தாள்.  

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now