அத்தியாயம் 31

4.2K 224 43
                                    

ஜீவன்த்தின் கார் சத்தம் கேட்க இறுகிய முகத்துடன் மனைவியிடம் இருந்து விலகினான் சாய்வேதன்.  உள்ளே வந்த ஜீவன்த்க்கு சயூரியின் முகத்தைப்பார்த்தும்  எதுவோ சரியில்லை என்று புரிந்தது. அவளின் கலக்கம் நிறைந்த முகத்தைப்பார்த்தவன் நேராக அவளிடம் வந்து அவளை தோளோடு அணைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டான்.  அவனின் இந்த செயல் அவனின் மனைவிக்கு சிறு தெம்பை கொடுத்தது.  

சயூரிக்கு அனுமித்ராவை நினைத்து மட்டும் கலக்கம் இல்லை. ஜீவன்த் தன்னுடைய காதலை வெளிப்படையாக வெளிபடுத்திக்கொண்டு இருக்கும் போதும் அதன் தொடக்கம் அனுமித்ரா சாய்வேதனின் திருமணம்தான்.  அனுமித்ராவிற்கு ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற நம்பிக்கையில் தன் கூட்டைவிட்டு வெளியே வந்திருந்தான்.  இப்போது இருக்கும் சூழ்நிலையோ அனுமித்ராவுக்கு சாதகமாக இல்லை.  தன் அண்ணன் என்னமாதிரி உண்மையை சொல்ல போகிறானோ என்ற கலக்கம் சயூரியை பயமுறுத்தியது.  அவனின் உண்மை கூறும் இந்த செயலின் அனுமித்ராவுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜீவன்த்தின் அன்பு தனக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணம் அவளை வேதனைப்படுத்தியது. 

சமுதாயத்தில் உறவுகளின் நிலை அப்படித்தானே இருக்கிறது. கிவன் டேக் பாலிசிதான் எல்லாம். கணவன், மனைவி என்ற உறவும் வரதட்ச்சனை என்ற பண பரிமாற்றத்தில்தான் தொடங்குகிறது.  அன்பு எல்லாம் கடமையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. 

மனைவியின் மனதில் ஓடிய எண்ணத்தை அறியாத ஜீவன்த் "என்ன உன் அண்ணன் மறுபடியும் பழைய கதையை தொடங்கிவிட்டானா? அனுவை நல்லா பார்த்துப்பேன் என்று அவன் சொன்னதை நம்பி நான் அவளை அவனுக்கு கட்டிகொடுத்ததற்கு என்னை எதைவைத்து அடித்தாலும் தகும்.  சரியான குழப்பம் பிடித்தவன்.  என்ன பிரச்சனை என்று வெளியே சொன்னால்தானே தெரியும். எதையோ மனசில் வச்சிக்கிட்டு முகத்தை தூக்கிக்கொண்டு திரிகிறான்.  போனா போடான்னு விட்டுட்டு இருக்க முடியாமல் அவ வேற அழுது கறையுரா." என்றவன் மனைவியின் முகத்தைப்பார்த்து புருவத்தை நெறித்தான். 

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now