அத்தியாயம் 32

3.9K 213 44
                                    

மனைவியின் மௌனம் சாய்வேதனை அதிகமாக பாதித்தது. அவள் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவதை தவிர இவனிடம் வேறு என்ன மார்க்கம் இருக்கிறது. அவன் தன்னை தயார்படுத்திக்கொள்ளதான் வேண்டியதிருந்தது.

"யாரையோ தேடி அலைஞ்ச நீங்க எதுக்காக என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிங்க?" என்று கேட்டாள் அவள் அடுத்ததாக.

"பேபிக்காக. ஜீவன்த் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று அவள் உறுதியா நின்னா. அவள் அழுது நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு நிலையை அவளுக்கு நான் வரவிட்டதும் இல்லை. ஆனால் தன் காதலுக்காக அவ அழுதா. அது பொறுக்க மாட்டாமல்தான் ஜீவன்த்தை அவளிடம் சேர்க்க தடையா இருக்க உன்னை விலக்கனும் என்று நினைச்சி இந்த கல்யாண ப்ளானை போட்டேன். அப்படித்தான் நான் நினைச்சேன். ஆனால் அது உண்மை இல்லைன்னு போக போக புரிஞ்சிகிட்டேன். மனுஷனின் ஆழ்மனசுக்கு ஒரு ஆசை வந்தா அதை அடைய அவன் என்னன்னவோ சாக்கு போக்கு சொல்வான். அப்படித்தான் சொன்னேன் நானும்." என்றான் அவன்.

"ஒருவேளை நீங்க தொட்ட அந்த பெண் நானாக இல்லாமல் இருந்திருந்தால்?" என்று அவள் கேட்க

"நான் உன்னை இழக்கும் சூழ்நிலை வந்திருக்காது. ஏன்னா போதையில் இருந்தால் மட்டுமே அந்த பெண்ணை என்னால் அடையாளம் காண முடியும், அதுவும் படுக்கையில். முத்தா உன்னை பார்த்தவுடனும், உன்னை கல்யாணம் செய்து ஒரே அறையில் ஒரே கட்டிலில் இருந்த போதும் எனக்குள் இருந்தது காதலோ, ஆசையோ இல்லை. ஒரு சின்ன பெண் எதற்காக இவ்வளவு கஷ்டபடனும்? என் தங்கையும் இந்த வயதைத்தானே தாண்டி வந்தாள். அப்போ அவ எவ்வளவு சந்தோசமா இருந்தா! இந்த பெண் மட்டும் தன்னையே சுமக்க முடியாத நிலையில் கையில் ஒரு குழந்தையை சுமந்துக்கொண்டு நிற்கிறாளே! அவளுக்கு ஏதாவது செய்யணும் என்றுதான் எனக்கு தோணிச்சு.

ஆதிக்கை உன்னிடம் இருந்து பிரிச்சு உன்னை தனியா படுக்கவைத்தது, உன் ட்ரெஸ்ஸை , ஸ்டைலை எல்லாம் மாற்றி காலேஜ் அனுப்பியது எல்லாமே உனக்காக மட்டுமே! என்னை நம்பியோ, வேறு யாரையும் நம்பியோ நீ இருக்க கூடாது என்று நினைத்தேன். ஏன்னா நான் உனக்கு நிரந்தரம் இல்லாதவன். எந்த நொடியும் நான் தேடுபவளை நான் பார்க்கலாம். அப்போ கண்டிப்பா நான் உன்னை விவாகரத்து பண்ணிட்டு அவளிடம் போய்விடுவேண்டும் என்றுதான் நினைத்தேன். செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய நினைத்தேன். நீயும் என்னை பிடித்துவைக்க முயற்சிக்கமாட்ட. என் இந்த முடிவால் உனக்கு அநியாயம் நடந்துவிட கூடாது என்றுதான் சென்னையில் இருக்கும் இந்த கம்பெனியை உன் பெயருக்கு மாற்றினேன். என் சொத்துக்கு வாரிசு ஆதிக்காகத்தான் இருக்கணும் என்று அவனின் பிறப்பு சான்றிதலில் கூட என் பெயரை போட்டேன்.

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now