Part 39

978 73 5
                                    

பாகம் 39

மறுநாள்

இதயா அமைதியாக நின்றிருக்க,  இனியாவோ  இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் பாரியின் வரவுக்காக காத்திருந்தார்கள்.

உள்ளே நுழைந்து,  அவர்களின் முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு விட்டான் பாரி,  ஏதோ பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை.

இதயாவை பார்த்து,  புருவத்தை உயர்த்தி,  *என்ன நடந்தது?* என்பது போல அவன் சைகை செய்ய, அவளோ கண்களை அகல விரித்து இனியாவை பார்த்தாள்.

" இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? " என்றாள் இனியா.

" என்ன நடந்துச்சு? "

" உங்க பொண்ணு என்ன பண்ணிட்டு வந்திருக்கானு கேளுங்க... "

" என்னடா செஞ்ச? "

" அவ கூட படிக்கிற பையன் முகத்துல ஓங்கி குத்திட்டு வந்திருக்கா... "

அதைக் கேட்டவுடன் பாரிக்கு தூக்கிவாரிப்போட்டது.

" ஏன்டா இப்படி பண்ண? "

" அவன் எப்ப பார்த்தாலும் என்னை கிண்டல் பண்ணிக்கிட்டே இருந்தான் பா.  முதல்ல நான் எதுவும் செய்யல.  எவ்வளவு தைரியம் இருந்தா,  அவன் என் முடியை பிடிச்சு இழுத்திருப்பான்... அதான் ஒரு குத்து விட்டேன்... அவன் முகத்தில் ரத்தம் வந்துடுச்சு. நான் என்ன பண்றது? " என்றாள்  அப்பாவியாக.

" ஆனா, எடுத்தவுடனே கையை நீட்ட  என்ன அவசியம்?  நீ உங்க டீச்சர் கிட்ட சொல்லியிருக்கலாமே? " என்றான் பாரி.

" அதையேத்தான் நானும் கேட்கிறேன்... ( இதயாவை நோக்கி) அதெப்படி அவ்வளவு அனாவசியமா ஒருதரை  நீ  அடிக்க முடியும்? உனக்கு நாங்க கராத்தே சொல்லிக் கொடுத்தது,  உன்னை தற்காத்துக்க தானே தவிர,  எல்லாரையும் அடிக்கிறதுக்கு இல்லை. "

இதயாவிற்கு  ஏதாவது ஒரு தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் பாரிக்கோ,  இனியாவிற்குகோ,  எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.  ஒரு பெண்ணிற்கு படிப்பைவிட,  தன்னை காத்துக் கொள்ள வேண்டிய தைரியமும் துணிச்சலும் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால்,  இன்று செய்ததுபோல இதயா,  இதற்குமுன் எப்போதும் நடந்து கொண்டதில்லை. இதுதான் முதல்முறை அவள் இப்படி ஒரு பிரச்சினையுடன் வந்திருப்பது.

மௌனத்தின் குரல் (முடிந்தது)On viuen les histories. Descobreix ara