அவன் பேசி முடிப்பதற்கும் ஜான்வி வெளியே வருவதற்கும் சரியாய் இருக்க அவன் அவளை பார்த்து மீண்டும் கேட்டான் "அப்போ உன் முடிவுல மாற மாட்ட?"என்று கேட்க

அவளோ சற்று தடுமாறி பின் உறுதியான குரலில் "இல்ல "என்றாள்

அவனோ கையை கட்டியவன் "அப்போ சரி இப்போவே போய் அப்பா கிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொல்லு "என்று கூற

அவளோ "அது கொஞ்சம் டைம் வேணும் "என்று சொல்ல

அவனோ நக்கலாய் உதடு சுழித்தவன் "அப்போ உன் முடிவு மாறலாம்னு உனக்கே பயம் வருது இல்ல ஜான்வி "என்று கிண்டல் செய்து அவளின் ஈகோவை தூண்டி விட்டான் .

ஜான்வி"நா ஒன்னும் அந்த கெளதம் மாறி கொரங்கு இல்ல நெனச்சு நெனச்சு முடிவெடுக்க நா முடிவெடுத்த எடுத்தது தான் .இப்போவே போய் ஓகே சொல்றேண்டா "என்று கூறி கீழே செல்ல அவனோ சிரித்துக்கொண்டான் போ போ என்று .

அவள் கீழே செல்ல அவளின் அன்னையோ பதற்றமாய் அவள் அருகில் வந்தவர் அவளின் நெற்றி கழுத்தை தொட்டு பார்த்து காய்ச்சல் அடிக்கவில்லை என்று தெரிந்த பின்னே நிம்மதி ஆனார் .பின் அவளை உணவுண்ண சொல்ல தந்தையுடன் அமர்ந்து உணவு உண்ண துவங்கினாள் ஜான்வி .

உணவு வேளை அமைதியாக கழிய அவளின் ஜான்வியின் தந்தையோ "என்ன முடிவு பண்ணிருக்குற ஜான்வி ?"என்று கேட்க

அவளோ சற்று நிதானித்தவள் இரண்டு நிமிட மௌனத்திற்கு பின் "உங்க இஷ்டம் அப்பா "என்றதோடு முடித்துக் கொண்டாள்.அவரிற்கு அந்த வார்த்தையை அவள் வாயில் இருந்து கேட்டதும் எத்தனை ஆனந்தமாய் இருந்தது என்று வார்த்தையால் கூற முடியாது .

அவர் "அப்போ அந்த நாலு வரன்ல எது oknu பாத்து சொல்லு ஜான்வி "என்று கூறி அந்த நான்கு புகைப்படத்தையும் எடுத்து கொடுக்க வாசலில்

ரேவதியின் குரல் கேட்டது "வீட்லயே பையன் இருக்கேல எதுக்கு அண்ணையா வெளிய பாக்குறீங்க ?"என்று .

சேகர் அவரின் வரவில் மகிழ்ந்தவர் "வாமா வந்து உக்காரு "என்று கூற

தோழனா என் காதலனாWhere stories live. Discover now