18

2K 128 145
                                    

வேலை முடித்து வந்த ஜானுக்கு அயர்வாக இருந்தாலும் அதையும் மீறிய மகிழ்ச்சி முகத்தில் இருந்தது அவளது மனம் இன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை நினைத்து நினைத்து மகிழ்ச்சி கொண்டது. 

அந்த நினைவிலேயே வீட்டிற்கு வந்தவள் வரவேற்பறையில் அனைவரும் அவளுக்காக காத்திருப்பதை கண்டு குழம்பினாள். ஏனெனில் எப்பொழுதும் அவள் வேலை விட்டு வருகையில் அனைவரும் உறங்கி இருக்க இன்று அவர்கள் காத்திருப்பது அவளிற்கு புதியதாக இருந்தது. அவள் குழப்பத்தோடு தன் அன்னையை ஏறிட அவளின் அன்னையோ"ஜான்வி போய் உன் டிரஸ்சை எடுத்து வை"என்க 

அவளோ குழப்பமாக" எதுக்குமா எடுத்து வைக்கணும் ?எங்க போறோம்?" என்று கேட்க

 அவரோ சற்று வருத்தம் நிறைந்த குரலில்" உன் அப்பாவோட அம்மா அதான் உன்   பாட்டி இறந்துட்டாங்க ஜான்வி. நாம ரெண்டு நாள்  சொந்த ஊருக்கு போகணும். நீ போய் ரெண்டு நாளைக்கு தேவையான டிரெஸ்ஸை எடுத்து வை" என்றவர் ஆதிசேஷன் இடம் திரும்பி" நீ அக்காவுக்கு போய் ஹெல்ப் பண்ணு" என்க அவனும் தலையாட்டினான் ஜான்வியுடன் மேலே சென்றேன்.

ஜான்விக்கு அவர் கூறியதில் சிறிது வருத்தமே இருந்தது அவளுக்கு அவளின் பாட்டியை பிடிக்காது.அவளின் அன்னையை கொடுமை செய்தவர் அல்லவா எப்படி பிடிக்கும். மேலே சென்றவள் தன் தம்பியுடன் தனது உடமைகளை எடுத்து வைக்க அவனும் சிரிப்புடன் இருந்தான். அவன் சிரிப்பதைப் பார்த்து குழம்பி அவள் அவன் தலையிலேயே ஒரு டிரஸ்சை தூக்கிப்போட அவன் அப்பொழுது அவளை கவனித்தான். 

ஆதிசேஷன் "இப்ப எதுக்கு மினியன் என்ன அடிச்ச?" என்று கேட்க

அவளோ" டேய் பனை மரம் பாட்டி செத்ததுக்கு போறோம் நீ என்னன்னா பிக்னிக் போற மாதிரி பல்ல காட்டிகிட்டு இருக்க.?" என்க

 அவன்" இன்னும்கொஞ்ச வருஷத்துல செஞ்சுரி அடிக்க இருந்த பாட்டி செத்ததுக்கு நான் எதுக்கு feel பண்றேன்? நா என் கவி டார்லிங்கஹ் பார்க்க போற ஆனந்தத்துல இருக்கேன் "என்க 

தோழனா என் காதலனாWhere stories live. Discover now