அவனோ முகம் நிறைந்த புன்னகையுடன் "பண்ணிக்கோங்க "என்று கூறினான் சட்டையை மாட்டியபடி .

அவனை கண்டு புன்னகைத்த கௌதம் கை நீட்டி "நான் கௌதம் ஆதித்யாவோட friend .நீங்க ?"என்று கேட்க

அவன் ஏதோ கூற வரும் முன் அங்கே கதவு முன்னறிவிப்பின்றி திறக்கப்பட குரல் மட்டும் வந்தது "எரும மாடு ஆதி எவ்ளோ நேரம் டா ரெடி ஆவ சீக்ரம் கீழ பொய் கவ...."என்று கூறிக்கொண்டே சென்றவள் அப்பொழுதே நிமிர்ந்து பார்க்க அங்கே கெளதம் அவளை பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தான் கண்கள் அவளை மேலிருந்து கீழ் படம் பிடித்துக் கொண்டிருந்தது .

இது வரை jeansilo , சுடி toppilo ஒற்றைகுதிரை வாழ் குடும்பியில் பார்த்தவளை இன்று வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கலந்த கற்கள் பதித்த லெஹெங்காவில் சிகை அலங்காரம் நேர்த்தியாய் செய்யப்பட்டிருக்க அவளின் மான் விழிகள் இரண்டும் அவனை கண்டு மருண்டு விழிக்கும் வேளையில் காண தேவக்கன்னியாகவே தெரிய அவளை அள்ளி அணைக்க பரபரத்த கைகளை சிரமப்பட்டு அடக்கினான் அவன் .

ஆதி இருவரையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன் "நை நைனு எப்போ பாரு கத்திகிட்டே இரு கிளம்புறேன் போ "என்று கூறி சென்றுவிட ஜான்வியோ அவனை பார்த்து சிலை ஆகி நின்றவள் அப்படியே தான் நின்றாள் .

அவனின் தொடர் பார்வை வேறு உடலில் ஏதேதோ உணர்வுகளை தோற்றுவிக்க ஆதி சென்றபின்னே உணர்வு வந்தவள் வேகவேகமாய் அவ்விடம் விட்டு ஓட பார்க்க முடியவில்லை .அவளின் லெஹெங்கா துப்பட்டா அங்கிருந்த ஆணி ஒன்றில் மாட்டி இருந்தது .அவஸ்த்தையாய் திரும்பியவள் பரபரவென்று அதை எடுக்க போக கௌதமோ நிதானமாய் அவள் அருகில் வந்து அந்த ஆணியில் இருந்த துப்பட்டாவை பிரித்து எடுத்தான் .

அவன் அருகில் வரும்பொழுதே ஏனோ வியர்த்து கொட்ட அவன் கண்களில் தெரிந்த பார்வை மாற்றம் வேறு வயிற்றில் பயப்பந்தை உருளைச் செய்தது .அருகில் மிக அருகில் நெருங்கி வந்தவனின் மூச்சுக் காற்று அவள் மேல் பட்டு தெறிக்க துப்பட்டாவை அவன் எடுத்து விடும் வரை அவளிடம் மூச்சு கூட வெளியேறவில்லை .தான் எடுத்துவிட்டபின்னும் அப்படியே மிரண்டு விழிப்பவளை அத்தனை அருகாமையில் கண்டு தடுமாறியவன் "சாரி ஜானு "என்று மெல்லமாய் கூற அவன் குரலில் தெளிந்தவள் பொய் கோபத்தை பூசிக்கொண்டு அவன் கையிலிருந்த துப்பட்டா முனியை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு சென்று விட்டாள்.

தோழனா என் காதலனாWhere stories live. Discover now