அதன் தலையில் தட்டியவன் என்ன ஆனாலும் என் ஜானுவை விட்டு தர மாட்டேன் என்று கூறி சமாதானம் அடைந்தான்முதல் முறையாய் மனதில் துளிர்விட்டிருந்த காதலும் அந்த நேசத்தை நெஞ்சில் விதைத்தவளின் நினைவும் சுகமாய் சிகை கோதிய தென்றலும் அவனிற்கு நிம்மதியை தர மோஹனக் கனவுகளுடன் கண் மூடி உறங்கினான் கௌதம்.

இவன் இங்கு இப்படி இருக்க ஜான்வியோ ஜீவிதாவிடம் புலம்பி தள்ளிக் கொண்டிருந்தாள் "ஜீவி அவன் ஏன் டி இப்டி சொன்னான் ?அப்போ நா loveah சொன்ன accept பண்ண மாட்டானா ?"என்று கேட்டவள் ஜீவி ஏதோ கூற வரும்முன் அவளே "ஏன் accept பண்ண மாட்டான் ?அவனுக்கு என்மேல கண்டிப்பா லவ் இருக்கு இல்லேனா யார்கிட்டயும் எதையும் ஷேர் பண்ணாதவன் டெய்லி என்கிட்டே எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு என்ன பாக்குறதுக்காகவே இவ்ளோ மெனக்கெட்டு ஒவ்வொரு தடவையும் வருவானா ?"என்று அவளே பதிலும் கூறிக் கொண்டாள் .

ஜீவிதா கடுப்பானவள் "ஜான்வி அரை மணி நேரமா நீ இதையே தான் வேற வேற மாடுலேஷன்ல சொல்லிக்கிட்டு இருக்க "என்று கூற

ஜான்வியோ சோகமாய் ஆனவள் "லூசு மாறி பேசுறேன்ல ?first லவ் ஜீவி அவனோட செய்கையெல்லாம் பாத்து நீங்களே எத்தனை தடவ சொல்லிருப்பீங்க லவ் பண்ரானோனு தோணுதுன்னு ?ஆனா அவன் இப்டி சொல்லேல எங்க கிடைக்காம போயிருவானோனு பயமா இருக்கு டி "என்று கூறும் பொழுதே குரல் அவளிற்கு உடைந்து விட்டது .

ஜீவிதாவிற்கு பாவமாய் இருந்தது "நீ ஏன் ஜான்வி overthink பண்ணுற ?may be அவர் இன்னும் realise பண்ணாம இருக்கலாம்ல உன்ன மாறி .நீ realise பண்ணியே ஒரு நாள் தான் ஆகுது ஆனா அதுக்குள்ள இவ்ளோ insecurity "என்று கூற

ஜான்வியோ "தெரிலடி உள்ளுக்குள்ள என்னவோ பயமாவே இருக்கு "என்று கூற

ஜீவிதாவோ "ஒன்னும் இல்ல எல்லாம் நல்லா நடக்கும் . கடவுளே நீ பொலம்புனதுல சொல்லவே மறந்துட்டேன் "என்று கூற

ஜான்வி "என்னடி ?"என்க

ஜீவிதா சிறு வெட்கத்துடன் "எனக்கு கல்யாணம் fix பண்ணிட்டாங்க டி "என்று கூற ஜான்வியோ இன்பமாய் அதிர்ந்தாள் .

தோழனா என் காதலனாWhere stories live. Discover now