அவனோ "பார்ரா மரியாதை எல்லாம் தூள் பறக்குது அப்போ புடுச்சுருக்கு போலயே "என்க

அவளும் சிரிப்புடன் "ம்ம் புடுச்சுருக்கு "என்க

அவன் "பிரதர் பேரு என்ன ?"என்க

அவளோ "ஆதித்யா .lectureraah work பன்றார் சென்னைல"என்று அவனின் புகைப்படத்தை காட்ட

அவனோ "எல்லாம் சரி தான் டி ஆமா இவர் எப்படி உனக்கு ஓகே சொன்னார் ?கண்ணுல ஏதும் ப்ரோப்ளேமோ "என்க அவளோ கீழே இருந்த குச்சியை எடுத்து துரத்த ஆரம்பித்து விட்டாள்.

இங்கு இப்படி இருக்க ஜான்வியோ அவன் கூறிய பதிலில் உள்ளே பூத்திருந்த காதலின் எதிர்காலம் கேள்விக்குறியாக கலக்கத்துடன் அமர்ந்தாள் எனில் ஏதோ மனதின் ஓரத்தில் ஒன்று அடித்து கூறியது அவனிற்கு உன் மேல் காதல் உள்ளது ஜான்வி என்று .

இப்போதைக்கு அதை நினைத்து கவலை கொண்டு அவனுடன் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் வீணாக்க அவள் விரும்பவில்லை .அவனிடம் திரும்பியவள் சற்று தொலைவில் குழந்தைகளின் சத்தம் கேட்க "அத்து எழுந்து என் கூட வரியா?"என்க

அவனோ "எங்கடி ?"என்க

அவளோ எழுந்து நின்று அவன் கையை பிடித்து இழுத்தவள் "வாடா play ஏரியா போகலாம் "என்க

அவனோ சிரிப்புடன் "ஏய் பைத்தியம் அதெல்லாம் குழந்தைங்க வெளயாடுறது அங்க போய் என்ன பண்ண ?"என்க

அவளோ அவன் கையை பிடித்து இழுத்தபடி காலை தரையில் உதைத்தவள் "எனக்கு ஊஞ்சல் ஆடணும் வா "என்று பிடித்திழுக்க

அவள் செய்யும் அளப்பறையில் தலையில் அடித்தவன் சிரிப்புடன் "வந்து தொலை "என்று கூறி அவளை அழைத்து சென்றான் .

அங்கு ஊஞ்சல் ,சறுக்கு மரம், சீ சா அனைத்தும் சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருக்க இரண்டு ஊஞ்சல் மட்டும் காலியாய் இருந்தது .அங்கு ஓடி சென்றவள் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு அவளை நோக்கி வந்தவரிடம் "சீக்ரம் வந்து ஆட்டு டா மச மசன்னு வர "என்க

அவனோ தலையில் அடித்தவன் "வேணுனா நீயே ஆடிக்கோ என்ன ஆட்ட சொல்லாத "என்க

தோழனா என் காதலனாWhere stories live. Discover now