அவளோ "ஹீஹீ சிக்கிட்டோம் தப்பவா முடியும் முன்னாடி போ "என்று அவளை தள்ளி விட்டாள் .

அவர்கள் விழித்தபடி அவன் அருகில் வர கௌதமோ கஷ்டப்பட்டு முகத்தை கடுமையாக்கியவன் "இதென்ன உங்க தாத்தா வீட்டு roadaa இஷ்டத்துக்கு குறுக்கால வந்து ஆடிக்கிட்டு இருக்கீங்க ?"என்க

இருவரும் திருதிருவென்று விழித்தனர் .தீரா வாய்க்குள்ளேயே "தாத்தா வீடு roadnaa நாங்க இவ்ளோ அடக்கமாவா விளையாடுவோம் "என்று முனங்க

ப்ரியாவோ அவளை முறைத்தாள் "கொஞ்ச நேரம் சும்மா இரேன் டி" என்று

அவனிற்கு அவளின் முனங்கல் தெளிவாய் கேட்டுவிட சிரித்தவன் "உன் பெரு என்ன ?"என்க

அவளோ ப்ரியாவை ஒரு முறை பார்த்தவள் பின்"தீரா, தீரதி"என்க

அவனோ "ஸ்வீட் நேம் இனிமே இப்டி விளையாடாத பாப்பா "என்க

அவளோ முகத்தை தூக்கியவள் "நா ஒன்னும் பாப்பா இல்ல "என்று முகத்தை வெட்ட அவளின் சிறு சிறு அசைவுகளும் அவனிற்கு அவனின் ஜானுவின் குறும்புத்தனத்தை நினைவுப்படுத்தி மனம் அவளை பார்க்க வேண்டுமென்று சண்டித்தனம் செய்ய துவங்கியது .

பின் சிரித்தவன் "அப்டியே என் ஜானுவோட xerox .என்றவன் ஓகே பெரியமனுஷி வழிய விட்டா நா போய்டுவேன் "என்க

இருவரும் வழிவிட்டு நிற்க அவனும் கிளம்பினான் .அவன் சென்றதும் பிரியா பெருமூச்சு விட்டு தீராவை முறைக்க அவளோ ஏதோ யோசனையில் இருந்தாள்.அவள் தோளை தோட்ட பிரியா "என்னாச்சு பாப்பு என்ன யோசனை ?"என்க

அவளோ "இல்லக்கா இந்த அண்ணா என் ஜானுனு சொன்னாரே ஒருவேளை அவரோட loveraa இருக்குமோ ?"என்க

ப்ரியாவோ தலையில் அடித்துக்கொண்டவள் "ரொம்ப முக்கியம் வா வீட்டுக்கு போகலாம் இந்த authorjiகே அது தெரியுமோ என்னவோ என்ன கேக்குறா "(என்னடி சைடு gapula என்ன கலாய்ச்சுடீங்க?)என்றவள் தன் தங்கையை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு சென்று விட்டாள் ,.

கௌதமோ இன்று அந்த சிறுமியின் செயல்கள் ஜானுவின் நினைவுகளின் தாக்கத்தை அதிகரித்திருக்க அழைக்கலாமா வேண்டாமா அழைக்கலாமா வேண்டாமா என்று மனதினுள் ஒரு பட்டிமன்றமே நடத்தியவன் பின் இதற்கு மேல் தாங்காதென்று அவளிற்கு அழைத்துவிட்டான் .

தோழனா என் காதலனாWhere stories live. Discover now