எனக்காக 2

Start from the beginning
                                    

இரண்டு நாள் உட்கார்ந்து யோசிச்சவன் மூணாது நாள் நான் சென்னைக்கு போறேன்னு வந்து நின்னான்...எங்களுக்கு  என்ன சொல்றதனே தெரியல, ஆனா அவன் அதுல உறுதிய இருந்தவன் சென்னை கிளம்பிட்டான்...

சென்னை போனவன் அங்கையே எதோ வேலை பார்த்துட்டு படிக்க ஆரம்பிச்சான்...அப்போ அப்போ letter போடுவான்...இங்கிருந்து நாங்களும் letter போடுவோம்...

இப்படியே மூணு வருஷம் முடிய சிவராமனுக்கு பக்கத்துல இருந்த ஒரு துணிமில்லுல  சூப்பர்வைசர் வேலை கிடைச்சுது... மாதவனுக்கு அவன் வேலை செஞ்சுட்டு இருந்த கம்பெனி முதலாளி இவனோட திறமையாலையும் படிப்புனாலயும் அவன மும்பைல ஒரு கம்பெனில மேனேஜர் வேலைல சேர்த்துவிட்டாரு...

இங்க உங்க அத்தைகளுக்கு கல்யாணம் பணறதுக்கு சிவராமன் கலேஜ்ல படிக்கறப்போவே வயல வித்துட்டோம்...அப்பறம் கடன் வேற ஆகிப்போச்சு...நானும் உங்க தாத்தாவும் காட்டு வேலைக்குப் போய் அவன படிக்கவைச்சு கடனுக்கு வட்டி கட்டினோம்...

சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படற நிலைமை...எப்படியோ சிவராமனுக்கு வேலை கிடைக்க சாப்பாட்டுப் பாடு தீர்ந்துச்ச... வட்டி கட்டிட்டு இரண்டு வேளையாவது சாப்பட முடுஞ்சுது...

இதெல்லாம் மாதவனுக்கு தெரியப்படுத்தல, பாவம் இத நினைச்சு அவன் கஷ்டப் படக்கூடாதுன்னு...

அப்போ மாதவன் வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் இருக்கும், அங்க கூட வேலை பார்த்த ரஞ்சனின்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான்...

அவளுக்குன்னு தாத்தா மட்டும்தானும், அவர் நடத்திட்டு வந்த இரும்பு கம்பெனிய இவனட்ட ஒப்படச்சுட்டாருன்னும், அதனால வேலை அதிகமா இருக்கறனால வரமுடியலைன்னும் letter போட்டிருந்தான்...

அடுத்த ஒரு வர்ஷத்துல அவனுக்கு கௌஷிக் பிறந்தான், அந்த வருஷம் தான் உங்கப்பாக்கும் உன்  அம்மா ராதாக்கும் கல்யாணம் ஆச்சு...

உங்க தாத்தாவோட சொந்த தங்கச்சி மக தான் ராதா, நாலு பொட்டப் புள்ளைக, புருஷனும் குடுச்சுட்டு ஊர் சுத்தரவன்...

மூத்த பிள்ளையே உன் அம்மா தான், அவளுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியாம தங்கச்சி கஷ்டப்படுறதப் பார்த்து உங்க தாத்தா சிவராமனுக்கே ராதாவ கல்யாணம் பண்ணி வைச்சாரு...

அப்புறம் மூணு வருஷம் கழிச்சு உங்க அண்ணன் அகிலன் பிறந்தான், அவனுக்கு அடுத்து மூணு வருஷத்துல எங்க வீட்டு மகாராணி நீங்க பிறந்திங்க என்ற பாட்டி தான்வியின் தாடையை பிடித்துப் பாசமாக ஆட்டினார்...

புன்னகையோடு தனது செல்லப் பாட்டியின் தோளில் பாசமாக சாய்ந்து கொண்ட தான்வி, அப்புறம் என்னாச்சுன்னு சொல்லுங்க பாட்டி என்று தனது பாட்டியை மறுபடியும் flashback க்கிற்குள் நுழைத்தாள்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now