அத்தியாயம் 56

557 18 12
                                    

நிலவு மகள் இல்லாத அந்த வானம் பார்த்து அமர்ந்திருந்த மீராவின் மனமும் வெறுமையாய் இருந்தது. 

ஆனால்  மனதின் வலியால்,கண்களை மூடி அமர்ந்திருந்தவள்  கண்களில்  கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அதை துடைக்க கூட தோன்றாதவளாய் அமர்ந்திருந்தாள்.

கண்ணை மூடி கொண்டாலும்...
உன்னை கண்டேன்...
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்...
வெள்ளை மேக துண்டுக்குள்...
எழும் மின்னல் போல்...
எந்தன் வாழ்வெங்கும் மின்னல்...

என் இதழ் மேல் இன்று...
வாழும் மௌனங்கள்...
என் மனம் பேசுதே...
நூறு எண்ணங்கள்...
சொன்ன சொல்லின் அர்த்தங்கள்...
என்னுள் வாழுதே...
தூரம் தள்ளி சென்றாலும்...
உயிர் தேடுதே...

ஆசை வார்த்தை எல்லாமே...
இன்று கீறலாய்...
எந்தன் நெஞ்சின் ஓரத்தில்...
பாய செய்கிறாய்...
என்னுள் நீ வந்தாய்...
இன்னும் வாழ்கின்றாய்...
உந்தன் சொல்லாலே...
தூரம் உண்டாக்கினாய்...

என்னை தீண்டாதே...
என்னை பார்க்காதே...
ஒன்றும் பேசாதே...
போதும் துன்பங்கள்...

(Ennai kollathae song...
Link above )

ஏனோ இந்த பாடல் வரிகள் இவளுக்காகவே எழுதியது போன்று அவளுக்கு தோன்றியது.

அவ்வாறு எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ ... சிவா வின் குரல் கேட்டே நினைவுக்கு வந்தாள்.

அக்கா...

ம்ம்ம்... என்று வேகமாய் கண்களை துடைத்து எழுந்தாள்.

டைம் ஆகிடுச்சா ... facebook போனாலே டைம் போறது தெரியறது இல்லை... வா போலாம் என்று மடியில் இருந்த மொபைலை எடுத்துக்கொண்டு முன்னால் சென்றாள் மீரா...

சிவா வும் புன்னகைத்தவள் , தன்னை  தாண்டி செல்லும் தமக்கையை பார்த்தாள்.

தன்னிடம் இவள் வருத்தப்படுவதை  காமித்துக்கொள்ள கூடாது என்று மறைகிறாராம்... அதை தெரிந்தும் ஒரு பெருமூச்சோடு ஏதும்  கேட்காமல் தன் அக்காவை பின்தொடர்ந்தாள்.

எனக்காகவே பிறந்தவள்Wo Geschichten leben. Entdecke jetzt