மூங்கில் நிலா -18

3K 96 8
                                    

பூவேலி  சென்று  வந்ததிலிருந்து வசிக்குள்  பெரும்  மாற்றங்கள்  உண்டாக்கின.

அவன்  அம்மா  அவனோடு  இருப்பதை  போன்ற  உணர்வே அவனது  மாற்றங்களுக்கு காரணி ஆனது.

வார  இறுதியில்  இருவரும்  சென்னைச்  சென்று  வசியின்  அப்பாவையும்  அண்ணன் அண்ணியையும் கண்டு  வந்தனர்.

வசி  இறுக்கம்  தளர்ந்து  முன்பு  போல  அவன்  அப்பாவுடன்  பேச ஆரம்பித்தான்.
தன்  இரு  மகன்களும் இரு  குணவதிகளை  மருமகள்களாய்  கொண்டு  வந்ததில்  பரமனுக்கு  சந்தோசமே.

இதை ஆசை  தீர காண  கண்ணம்மா  இல்லாது  போனது  அவருக்கு  வருத்தமே.

கண்ணம்மா  உயிரோடு  இருந்திருந்தாலும்  அவரின்  தேர்வு  வனமோகினியாய்  இருந்திருக்கும்  என்பதில்  அவருக்கு  சந்தேகமில்லை.

வனியின்  மர வீட்டைப்  பற்றி  வசி  சிலாகித்து கூற  பரமனுக்குமே  அந்த  வீட்டை சென்று  காண ஆவல்  வந்தது.  வனியும் மகிழினியோடு  ஒட்டிக்  கொண்டு  விட்டாள்.

ஒத்த  வயது  என்பதால்  இருவரும்  சகஜமாக  பேசிக்  கொண்டனர். சமையலறையில்  கை  வேலையாக  வனி  உதவி கொண்டிருக்க  மகிழினிதான்  பேச்சை  ஆரம்பித்தாள்.

"சினிமால வர்ற  மாதிரி  ஆயிடுச்சுல   உங்க  கல்யாணம். இவளதான்  காதலிக்கிறேன், கட்டி  வைங்கனு  சொன்னா  மாமா  மறுத்திடவா  போறாரு? 

வீம்புக்கு  அந்த  ஷைலு தாலி  கட்டின  பிறகு  இதை  சொல்லியிருந்தா  வசி நிலை  என்ன  ஆயிருக்கும்? நெனைச்சாலே  பயமாயிருக்கு வனி "

"பெருசா  என்ன  ஆயிருக்கும்  அக்கா, அந்த அலட்டல் இராணியை  இந்த  மங்கி  கட்டியிருக்கும்,

அவ  ஆடுறா  ராமா  ஆடுறானு  சாட்டையை  சொடுக்கியிருப்பா, இதுவும்  ஜங்  ஜங்குனு  ஆடியிருக்கும்" வனி குதித்து கொண்டே  சீரியஸாக  சொல்ல  மகிழினி  விழுந்து  விழுந்து  சிரித்தாள்.

அவ்வேளை  அந்த  பக்கம்  வந்த  வசி  காதில்  இது  விழுந்து  தொலைக்குமா, வகையாய்  மாட்டிக்  கொண்டாள்  வனி.

மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now