மூங்கில் நிலா -15

3K 80 11
                                    

கேளிக்கை கிண்டலோடு வனியின் தாலிப் பெருக்கும் வைபவமும் நடந்தேறியது.

அதற்கு முன்பே வசி வனி பெற்றோர்களிடம் பேசிவிட்டிருந்தான்.

"அத்தை மாமா என்னாலதானே உங்க மகள் கல்யாணத்தை பார்க்கற கொடுப்பினை உங்களுக்கு இல்லாம போய்டுச்சு.

நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னிச்சிடுங்க.
திரும்ப கல்யாணம் பண்ண முடியாது, பட் இந்த தாலி பெருக்கும் விழாவில் உங்க முன்னுக்கு வனிக்கு தாலி கட்ட ஆசைப்படறேன். எனக்கு அனுமதி கொடுப்பீங்களா?" வசி இப்படி கேட்கவும் இருவரும் நெகிழ்ந்து விட்டனர்.சம்மதம் தெரிவிக்கும் விதமாய் தலையசைத்தனர்.

மறுபடியும் வசி வனி கழுத்தில் மிக ஆனந்தமாய் தாலி கட்டினான். தன் பெற்றோர்களுக்காகத்தான் திரும்பவும் தனக்கு வசி தாலி கட்டுகிறான் என தெரிந்ததும் வனியும் இலகுவாய் இருந்து விட்டாள். அதற்கு பிறகு விருந்து கேளிக்கை என்று வீடே அமர்களப்பட்டது.

உணவிற்கு பின், கணவன்மார்களின் வேண்டுகோளுக்கிணங்க அக்காள் தங்கைகள் 10 பேரும் அவர்களின் சிறுவயது நாடகமான ராதா கிருஷ்ணா லீலைகளை அபிநயம் பிடித்து காட்டினர்.

முறையாக பரதம் பயின்றதால், அவர்களுக்கு ராதா கிருஷ்ணா பாவங்கள் மறக்கவே இல்ல. அதுவும் கண்ணனாக வனி இருந்தால் சொல்லவா வேண்டும்.

மோகமாய் வனி கண்கள் பாவங்களை வடிக்க கிறங்கியது அவளுடைய கோபிகைகள் மட்டும் இல்லை, அவளுடைய அன்பு கணவனும்தான்.

நடன அசைவுகளுக் கேட்ப வில்லென வளையும் தங்கள் மனைவிகளைப் பார்த்து வசியும் அவன் சகலைகளும் சொக்கித்தான் போயினர்.

ஆடி முடித்ததும் சகலைகளில் ஒருவன் "அடிப்பாவிகளா எங்க கூட என்னிக்காச்சும் இப்படி இளிச்சிட்டே இருந்திருக்கிங்களா? வீட்ல காளியாட்டம், இங்க வந்தா மோகினியாட்டமா? நல்லாவே எங்களை வெச்சு செய்யரீங்களே "ஆதங்கமாய் முடிக்க,

வனியின் அத்தை மகள் ரோகிணி, "மாமா வனி கண்ணன் மாதிரி மயக்க பார்வைப் பார்ப்பாள், நீங்க பார்த்தா கம்சன் பார்க்கற மாதிரி இருக்கும், அதுக்கு காளியாட்டம் தான் சரி வரும் " நன்றாகவே காலை வாரி விட்டாள்.கூடியிருந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now