Untitled Part

6 3 3
                                    

உலக யானைகள் தினம் 2012 ஆம் ஆண்டு, ஆக.,12 அன்றே முதன்முதலாக கொண்டாடப்பட்டது. வில்லியம் சாட்னர் என்பவர் இயக்கிய RETURN TO THE FOREST என்ற ஆங்கிலப்படம், 2012 ஆக.,12ல் வெளியானது. இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

யானைகளை ஏறக்குறைய 4000 ஆண்டுகளாக மனிதன் தன் உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றான். ஆசியாவில் 13 முதல் 16 ஆயிரம் யானைகள் வரை தொழிலில் பயன்படுத்துகின்றார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

1900 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் போது 10 மில்லியன் வரை இருந்த யானையின் எண்ணிக்கை 1979ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 1.3 மில்லியன் எண்ணிக்கை மட்டுமே இருந்ததாக கணக்கிட்டு உள்ளார்கள். மிக மிக வேகமாக குறைந்து வரும் இந்த சதவிகிதத்தினால் விரைவில் இந்த இனம் முற்றிலும் அழிந்து விடுமோ என்றும் அஞ்சப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் 27,312 யானைகள் இருப்பதாக மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தமிழகத்தில் 2761 யானைகளும்

கார்நாடகவில் அதிகபட்சமாக 6049 யானைகளும்

அஸ்ஸாம் மாநிலத்தில் 5719 யானைகளும்

மஹாராஷ்ட்ராவில் 6 யானைகள் மட்டுமே இருப்பாதாகவும் தெரவிக்கப்பட்டது.

ஆராய்சியின் விளைவாக கண்டெடுக்கப் பட்ட எலும்புக் கூடுகளிலிருந்து, 600க்கும் மேற்பட்ட யானை வகைகள் ஆஸ்திரேலியா மற்றும் அன்டார்டிகாவைத் தவிர்த்து பூமியின் மற்ற எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து வந்ததாக புதைப் பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அக்காலத்தில், குதிரைப் படையைப் போன்றே யானைப்படையும் ஒரு அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய இடத்தில் இருந்துள்ளதை வரலாறுகளில் காணமுடிகின்றது.

பல நாடுகளிலும் புகுந்து, வெறத்தனமாய் வேட்டையாடி, பல லட்சக்கணக்கானத் தலைகளை கொய்து,1398 ஆம் ஆண்டு, இந்தியாவை நோக்கி வந்த தைமூரின் படை, இந்தியர்களுக்கே உரித்தான யானைப் படையைக் கண்டு அரண்டு கலங்கிப்போனது, வரலாற்றில் சுவை மிகுந்தச் செய்தி.

You've reached the end of published parts.

⏰ Last updated: Nov 03, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

யானைWhere stories live. Discover now