Egg Gravy

198 4 5
                                    

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகுத்தூள் அல்லது மிளகாய் தூள்.          - 2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

கொத்தமல்லி தழை - தேவையான அளவு

இப்போஎப்டிசெய்றதுபார்க்கலாம்..

முதலில் 4 முட்டையும் அவித்து தோல் உரித்து இரண்டாக வெட்டி எடுத்து வச்சுக்கணும்.. அப்புறம் ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீய குறைச்சு வச்சுக்கிட்டு 1/2 ஸ்பூன் மிளகு தூள் (அ) மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து விடணும்.. தீ கம்மியாதான் இருக்கணும் இல்லைனா கருகிரும்.. அப்புறம் வெட்டி வச்ச முட்டையை ஒன்னு ஒண்ணா நிதானமா சேர்க்கணும்..

பிறகு அடுப்பில் வேற பாத்திரத்தை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம்,மிளகு,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் இதெல்லாம் சேர்த்து நல்லா வதக்கணும்.. அப்புறம் கொஞ்சம் வெங்காயம் பொன்னிறமாக மாறி வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போற வரைக்கும் வதக்கவும்..

நல்லா வதங்குனதும் அரைச்சு வச்சுறுகிற தக்காளி சேர்த்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து நல்லா வதக்கணும்.. எண்ணெய் பிரிஞ்சு வரும் போது மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.. அந்த மசாலா வாசனை போனதும் கொஞ்சம் தண்ணீரம் உப்பும் சேர்த்து  கலந்து விட்டுட்டு மூடி வைத்து விடணும்..

ஒரு மூணு நிமிஷம் கழிச்சு திறந்து பார்த்தா நல்லா எல்லாம் ஒரு gravya வந்துருக்கும்.. தீய கம்மி பண்ணிட்டு அதுல பொறிச்சு வச்சுறுகிற முட்டையை ஒன்னு ஒண்ணா சேர்க்கணும்..2 நிமிடம் கழித்து மறுபடியும் முட்டையை மெதுவா திருப்பி போடணும்.. கடைசியா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.. 


             


  Egg Gravy ready






எங்க வீட்டு சமையல்حيث تعيش القصص. اكتشف الآن