ரசம்

372 18 5
                                    

தேங்காய் பால் ரசம்

நான் முதலில் ரசத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்...

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1/2 மூடி

புளி - எலுமிச்சை அளவு

தக்காளி - 2

பச்சை மிளகாய்- 1

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

கறிவேப்பிலை - தேவையான அளவு

மல்லி தழை - சிறிதளவு

கடுகு உளுந்து- 1/2 தேக்கரண்டி

வரமிளகாய் -2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை

இப்போ எப்டி செய்றதுன்னு பார்க்கலாம்...

தேங்காய 3 தடவை அரைத்து பால் எடுத்துக்கனும்.. அதில் புளிய ஊற வச்சுட்டு தக்காளி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பூண்டு,மிளகு சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சுக்கணும்.. அப்புறம் தேங்காய் பாலில் புளிய கரைத்து வடிகட்டி அந்த கரைசலை அந்த மசாலாவோட சேர்த்து ஊற்றி உப்பும் சேர்த்து கலந்து வச்சுக்கணும்..

அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு பாத்திரம் வைத்து சூடானதும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து அதில் அந்த கரைசலை ஊற்றி கொஞ்ச சூடானதும் மல்லி தழை தூவி இறக்கவும்...

அவ்ளோ தான் ரசம் தயார்..

தேங்காய் பால் வேணாம்னு நினைக்கிறவங்க வெறும் தண்ணீரில் புளியை ஊற வச்சுக்கணும்.. மசாலா அரைக்கிறதுல 2 சின்ன வெங்காயமும் பச்சை மிளகாய்க்கு பதிலா சிவப்பு மிளகாயை சுட்டு அதுல சேர்த்து அரைச்சு வைக்கலாம்...

குழந்தைகளுக்கு காரமா இருக்கும்னு நினைச்சா மிளகை கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம்..

இப்போ ரசம் சொல்லிருக்கேன்.. அடுத்தடுத்து எனக்கு தெரிஞ்ச சமையலை இங்க சொல்லலாமேன்னு இருக்கேன்...

பிடிச்சுருந்தா வோட் கமெண்ட் பண்ணுங்க..



எங்க வீட்டு சமையல்Where stories live. Discover now