பதினொன்று

49 6 0
                                    

"ஹலோ அம்மா!", என்று அழைப்பை ஏற்று, அவள் பேசத் தொடங்கினாள்.

"எங்க இருக்க?", என்று கேட்டார் அவளின் அம்மா. அவர்களின் குரலில் நடுக்கமும், பின்னேயிருந்து யாரோ காதில் காற்று ஊதுவது போல் "ஹூ" என்ற இரைச்சலும் கேட்டது. அவள் சற்று திடுக்கிட்டு, தட்டுத்தடுமாறி "வீ...வீட்ல தான் மா...இருக்கேன்", என்று பதிலளித்தாள்.

சற்று முன் இருந்த உல்லாச மோகனம், இப்போது உயிர் கொல்லும் அமைதியாக மாறி, அந்த அறையை நிரப்பியது. எப்படியோ தையிரியத்தை வரவழைத்துக் கொண்டு, "நீ எங்க இருக்க?", என்று கேட்டாள்.

அதற்குள் அவள் அம்மா அழைப்பை துண்டித்துவிட்டார். அழைப்பை துண்டித்து 5 நிமிடங்கள் தான் தாமதம், உடனே "தட் தட்... தட் தட்", என்று வாசற் கதவுகளை வேகமாய் தட்டும் சத்தம் கேட்டது.

அந்த 5 நிமிடத்திற்குள், எங்களுக்குள் எண்ணற்ற மாற்றம். இருவருள்ளும், பயம் தலைக்கேறியது. பேச நாக்கு ஒத்துழைக்கவில்லை. மூச்சுக் காற்று, இப்போது முன்பைப் போல் பொங்கி விழுந்தது, காதல் ஆசையால் அல்ல; கையும் மெய்யுமாய் மாட்டிக் கொள்வோமோ என்பதனால். இவ்வாறு, எங்களின் எண்ணங்கள், அவள் அம்மாவின் அழைப்பிற்குக் காரணம் தேடிக் கொண்டிருந்த நேரத்தில், அரை தாழிட்டு இருந்த கதவுகள் தட்டப்படுவது இடி முழக்கம் போல் இதயத்தில் கேட்டது.

இருவரின் உடலும் இரண்டொரு நொடியில், வியர்வையில் குளித்தது. "அம்மாவாக இருக்குமோ...", என்று சந்தேகிக்கும் பொழுதே, கதவை முன் தள்ளி, அரை தாழினை அகற்றி, அந்த, பெரிய கட்டுமஸ்தான உருவம் எங்களின் எதிரே வந்து நின்றது.

சொல்ல முடியாத திகல்! எங்கள் முகத்தில் படர்ந்தது. உள்ளுக்குள் தோன்றிய கிலி, உடலை அசைத்து, வியர்வை உதிர்த்து, கண்கள் சிவந்து, கைகளை பிசையச் செய்தது. வந்தவர் யாரென்று நான் அறியவில்லை. ஆனால், அவரின் வருகை என்னவளை திக்குமுக்காடச் செய்து விட்டது என்பதை, அவள் கூரிய நகங்கள், அவளின் உள்ளங்கை சதையைக் கிள்ளி, காயம் ஏற்படுத்துவதைக் கண்டபோது, நான் உணர்ந்து கொண்டேன்.

"என்னுயிர் காதலிக்கு,"Where stories live. Discover now