ஒன்பது

64 6 0
                                    

நீண்ட உறக்கத்திற்கு பின் அன்று தான் விழித்தேன்.

"மெல்ல மெல்ல, பொறுமையா கண்ண திறங்க....", என்று அறியாத குரல் ஒன்று, தூரத்தில் யாரிடமோ கூறுவது என் செவியில் விழுந்தது. யாருக்கோ என்றெண்ணும் போதே குரலின் ஒலி மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்கியது. ஆம், அக்குரல் என்னையே மெல்லக் கண் திறக்கப் பணித்தது. ஒருவாராக, என் கண்களைத் திறந்தேன்

"சுளீர்" என்று கண்கள் கூசும் அளவிற்கு இருந்தது, அவ்வறையின் வெளிச்சம். எங்கும் பளிச்சென்று எரியும் வெள்ளை நிற மின் விளக்குகள், உடலில் உஷ்ணம் இல்லாத அளவிற்கு அறை முழுதும் ஏசி, சுற்றும் முற்றும் ஏதேதோ எலக்டிரானிக் பெட்டிகள், "கலர் கலர்" கண்ணாடி குடுவைகள், குறுக்கும் நெடுக்கும் என் மேனியெங்கும் செல்லும் பிளாஸ்டிக் டியூப்கள், என அவ்வறை நான் அறியாத புது அறையாகக் காட்சியளித்தது. அறையின் ஒரு மூலையில் எங்கோ பார்த்த முகங்கள் மங்கலாகத் தெரிந்தன. ஒருவழியாக நான் என்னை நிலைப்படுத்திக் கொண்டு மெல்லக் கண்களை முழுவதுமாய்த் திறந்தேன். அம்முகங்கள் என் அருகில் வந்தன. அவர்களைக் கண்டு அடையாளம் காண்பதற்குள் மீண்டும் மூர்ச்சையானேன்.

"பல்ஸ் நார்மல், ஹார் பீட் நார்மல், பி.பீ. 140க்கு 82 நார்மல்", என்று என்னைக் கண் திறக்கச் சொன்ன நான் அறியாதக் குரல் யாரோ ஒருவரிடம் சொல்வதும், அதற்கு, "நோட்டட் டாக்.", என்று ஒரு பெண்மனி பதிலளித்ததும் என் காதில் தெளிவாய்க் கேட்டது. மேலும், "Glucose trips இதோட போதும். Stop பன்னிருங்க. Again Epilepsy வந்தா mild sedative குடுங்க. Monitor him", என்று அக்குரல் சொல்வது கொஞ்சம் மெல்லிய குரலில் கேட்டது. "He will be alright. இன்னும் ஒன் வீக்-ல டிஸ்சார்ஜ் பன்னி...", என்று அக்குரல் சொல்வது கேட்டுக் கொண்டிருக்கும் போதே தீடீரென்று நின்றது.

அன்றிலிருந்து மூன்றாம் நாள்.... என் நெற்றியை யாரோ ஸ்பரிசிப்பதை நான் உணர்ந்தேன். எனக்கு நன்குப் பரிச்சயமான ஒருவரின் வருடல் அது, என்பதை நான் புரிந்துக் கொண்டேன். "நீ கவலப்படாத. அதான் டாக்டர் இன்னும் நாலு நாள்-ல பூர்ணமா குணமாயிடுவான் சொல்லிருக்கார்-ல. அந்தக் கடவுள் மேல பாரத்தப் போடு. அவன் பாத்துப்பான்", என்று யாருக்கோ ஆறுதல் கூறிய குரலும் எனக்கு நன்குப் பரிச்சயமான ஒன்றே. அப்போது, திடீரென்று "கீய்ங்....", என்று என் காதுள் யாரோக் கத்துவது போல் ஒரு ஒலி கேட்டது. கேட்டவுடன் பட படவென என் உடல் தூக்கித் தூக்கி பதறி குதித்தது. அவ்வாறு குதிக்கும் போது, என் கண்கள் திறந்தன. என் நெற்றியை வருடியது என் தாய் என்றும், அவருக்கு ஆறுதல் கூறியது என் தந்தை என்பதும், என் காதுள் கீச்சிட்ட ஒலி அறைக் கதவை டாக்டர் திறக்கும் போது உண்டான சத்தம் என்பதையும் உணர்ந்தேன்.

"என்னுயிர் காதலிக்கு,"Donde viven las historias. Descúbrelo ahora