ஆரம்பம்-8

Start from the beginning
                                    

இவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும் அதனை முற்றிலும் பொருட்படுத்தாமல் தன் வேலையை பார்க்க சென்றாள் சவி

சென்னையில் நந்தனம் பகுதியில் உள்ள ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு அதிலிருந்து பத்து நிமிட நடையில் ஒரு சின்ன கடையை வாடகைக்கு எடுத்து அதில் சணல் பை தைத்தல் விதவிதமான ஹேண்ட் பேக் மற்றும் பர்ஸ் க்ரோச்சட் பேக் போன்றவைகளை வாணி தையலகம் என்ற பெயரில் கணவனால் கைவிடப்பட்டவர்கள் விதவை பெண்கள் முதிர்கன்னிகள் என்று வாழ்க்கையில் பெரிதும் அடிப்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து அவைகளை தயாரித்து வாகீசனின் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் வைத்து விடுவாள்.... அதிலிருந்து கிடைக்க பெறும் வருமானத்தை பகிர்ந்து கொடுத்துவிடுவாள்..... தனகென்று எதுவும் வேண்டாம் என்று இடத்தின் வாடகைக்கு மட்டுமே தனது பங்கை பயன்படுத்துவாள்..... இன்று தன்னால் ஒரு பத்து குடும்பம் பயன்பெறுவதை எண்ணி சந்தோசப்படுவாள் இதற்கெல்லாம் காரணமாக இருந்தது வாணியின் அப்பா வாகீசன்.....

🌷🌷🌷🍀🍀🍀🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🍁
நான்கு வருடங்களுக்கு முன் காப்பற்றிய சவியை எங்களோடு வீட்டிற்கு வந்து விடம்மா என்று கெஞ்சியவர்களிடம் பிடிவாதமாக வரமாட்டேன் என்று அடம்பிடித்தவளை சரிம்மா ஹாஸ்டல்லயாவது தங்கு என்று தன் வீட்டிற்கு அழைத்து வந்தவர்களிடம்

அப்பா ஹாஸ்டல்னு சொல்லிட்டு வீட்டுக்கு  அழைத்து கொண்டு வந்து இருக்கிங்க என்றவளை வாணி கோபத்தில் திட்ட போக

வாணியை பேசவிடாமல் தடுத்த வாகீசன்.... அம்மா சங்கவை நான் சொல்றதை நிதானமா யோசி.... உனக்கு பாதுகாப்பான ஹாஸ்டல நான் தேடி கண்டுபிடிக்கிற வரை நீ நம்ம வீட்டில் தான் இருக்கனும் அதுக்குள்ள உன் உடம்பும் சரியாகிவிடும் என்றவர்..... மீண்டும் விட்ட படிப்பை தொடர்கிறாயா என்று கேட்க....

ம்ம் முடியாது என்று சொன்னவளை தையல், எம்ப்ராய்டரி, க்ரோச்சட் வகுப்புக்கு போகிறாயா என்று கேட்க....

முடியாது நான் வீட்டை விட்டு எங்கேயும் போகமாட்டேன் அவனுங்க என்னை தேடி வந்து கொன்று விடுவார்கள் வாணி அப்பாட்ட சொல்லுடி ப்ளீஸ் என்று கெஞ்ச

ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)Where stories live. Discover now