ஆரம்பம்-8

1.9K 108 11
                                    

அதிகாலை வேலையில் பறவை இனங்களின் இன்னிசை குரலில் விழித்தாள் சவி கண்ணை திறக்க முடியாமல் எரிச்சலாக இருந்தது அதனோடு சேர்ந்தே வலது கண் துடிக்கவும் பயம் வெளியே எட்டி பார்த்தது சவிக்கு

இதே போல ஒரு முறை இடைவிடாது வலது கண் துடித்த பின் தன் வாழ்க்கையையே புரட்டி போட்ட நிகழ்வுகள் ஞாபகத்தில் வரவும் கண்ணை துடிக்கவிடாமல் அழுத்தி மூடி கொண்டாள் (வலது கண் துடிப்பதால் சில கெட்டது நடக்கும் என்று கதைக்காக எழுதியது இதை உண்மை என்று நம்ப வேண்டாம் மக்களே😜😜😜 )

காலை வேலைகளை சீக்கிரம் முடித்தவள் வழக்கம் போல நிறம் மங்கிய புடவையை கட்டிக் கொண்டு தலையை பின்னலிட்டு முடித்தவள் அதனை கொண்டையாக மாற்றி பெரிய மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு கூடவே டுயுப்ளிகேட் தெத்து பல் செட்டையும் மறக்காமல் தன் ஒரிஜினல் பற்களில் சொருகியவள் தனது அடையாளத்தையே முற்றிலும் மாற்றியபடி கண்ணாடியை பார்க்க மனதில் ஒரு திருப்தியுடன் வெளியே வந்தவளை பார்த்த பக்கத்து ரூமில் இருப்பவள்

அய்யோ அக்கா ஏன் இந்த காலத்திலும் இப்படி கிளம்புறீங்க உங்க கிட்ட எத்தனை முறை சொல்லிருக்கேன் என்னோட பார்லருக்கு வாங்க பேசியல் பன்னி கலராய்டலாம் ஐ டாக்டர்கிட்ட போனா கண்ணுக்கு லென்ஸ் வச்சுக்கலாம் அப்புறம் ம்ம் பல் டாக்டர்கிட்ட போனா கிளிப் போட்டு சரி செஞ்சு உங்களை அப்படியே ஒரு பத்து பதினைந்து வயது குறைத்திடலாம் என்று ரூபினி சொல்ல

வழக்கம் போல புன்னகையை உதிர்த்தபடி அவளை தாண்டி சென்றாள் சவி

ஏய் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று அவளுடன் அறையை பகிர்ந்து கொள்பவள் கேட்க

ச்ச்ச அந்த அக்கா பாவம் டி வயது முப்பதை தாண்டி விட்டது இன்னும் கல்யாணமே ஆகலை எனக்கும் ஒரு அக்கா இருக்குடி அதனால தான் அவங்க பேசலனாலும் வலுக்கட்டாயமாக நானே நிறுத்தி பேசறேன் என்றவளிடம்

என்னமோ பன்னி தொலைடி என்று தலையில் அடித்தவாறு நகர்ந்தாள் அவளின் அறையை பகிர்ந்து கொள்பவள்....

ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)Där berättelser lever. Upptäck nu