ஆரம்பம் -3

2.6K 136 54
                                    

பாஸ் ப்ளீஸ் இது ஓவர் ஸ்பீடு.....  கொஞ்சம் ஸ்லோ.....  வா....  போங்க பாஸ் என்று வழக்கம்போல தன் மனதினில் சொல்லிக் கொண்டவன் திரும்பி காரை ஓட்டி கொண்டு இருக்கும் தன் முதலாளியை பார்த்தவன் நினைவில் நின்ற சில நிகழ்வுகள் கண் முன்னால் வந்து போனது....

பா..... ஸ் என்று மெதுவாக சொன்னவனின் வாயில் இருந்து வெறும் காற்று மட்டுமே வர தன் குரலை சரிசெய்தபடியே அழைக்க போனவன் அடுத்து நிகழ்ந்தவற்றை கண்டதும் தன் வாயை இறுக மூடி கொண்டான்

தன் கண் முன்னே படார் என்ற சத்ததுடன் கீழே விழுந்து கிடக்கும் கேட்டை கண்டவன் காரின் பின்னால் ஓடி வரும் வாட்ச்மேனை கண்டு இன்னும் கவலை கொண்டான்....

ஐயா முதலாளி மன்னிச்சிடுங்க அந்த தண்ணீர் பைப்ப நிறுத்திட்டு வர ஒரு நிமிஷம் தாமதமாயிட்டு என்று விளக்கம் சொன்னவரிடம் எந்த பதிலும் கூறாமல் காரில் இருந்து படு ஸ்டைலாக இறங்கியவனின் முகம் இறுக்கத்தை மட்டுமே கொண்டிருக்க கடுகளவுக்கு  கூட புன்னகைகக்கு  பஞ்சமாக இருக்கும் சின்னவரை என்னி மனம் வெதும்பி தன் இடம் நோக்கி சென்றார் ராமையா அந்த வீட்டில் இந்த தள்ளாத வயதிலும் வேலை பார்க்கும் இந்த குடும்பத்தின் விசுவாசி

காரில் இருந்து இறங்கியவன் தன் பிஏ வை பார்க்க அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் எஸ் பாஸ் என்று விரைப்பாக சொல்லிவிட்டு தன் மொபைலை எடுத்து புதிய கேட்டிற்கு ஆர்டர் கொடுத்தான்

வீட்டின் உள்ளே வேகமாக நுழைந்தவன் எதிரே வந்தவரை கண்டதும் சட்டென அமைதியாக நின்று விட

சிவா இவ்வளவு கோபம் கூடாதுப்பா... என்றவரை நிமிர்ந்து பார்த்தவன்

எபொழுதும் மஞ்சள் பூசி குங்குமம் இட்ட முகம் வெறுமையாய் இருக்க..... கைகளில் பொன்வளையல் அணிந்து இருந்த இடம் இன்று காலியாய் இருக்க.... பட்டுபுடவையில் மங்களகரமாக இருக்கும் தன் அன்னை சாதாரண நூல் புடவையில் இருக்க....  தன் அம்மாவின் முகத்தில் துக்கம் கவலையையே பிரதிபலிக்க தன் கையாலாகத நிலையை எண்ணி கோபமுற்று  அருகில் இருந்த டீப்பாயில் ஓங்கி குத்தியவனின் கரங்களில் இருந்து குருதி பீறிட்டு வர சிவா என்ற கத்தலில் நிகழ்வுக்கு வந்தவன் மயங்கி சரியும் தன் அம்மாவை நொடியில் தாங்கி பிடித்தான்.......

ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang