ஆரம்பம் -2

Começar do início
                                    

டேய் அந்த பக்கம்....... சத்தம் கேட்குது ஒரு நிமிசம்...... அமைதியாக இருங்க என்றதும் அந்த இடமே அமைதியாக மாறியது .....

செடிகளின் உள்ளே தன் உடலை குறுக்கி கொண்டு வெளியே தெரியாதவாறு புகுந்து கொண்டாள்..... லப்.. டப்.....என்று  இதயத்தின் சத்தம் தனக்கு கேட்பது எங்கே வேளியே அந்த கொடியவர்களுக்கு கேட்டு விடுமோ என்று அஞ்சினாள்.....

டேய் வாங்கடா அந்த பக்கம் சத்தம் கேட்கிறது அவளை உயிரோட விடக்கூடாது என்று கட்டளையிட அவன் பின்னாலேயே இவள் ஒழிந்து கொண்டு இருக்கும் இடத்திற்கு எதிர்புறமாக ஓடினர்....

ஏய் நீ மட்டும் இந்த வாய்ப்பை விட்ட அவனுங்ககிட்ட சிக்கி சின்னாபின்னமாக ஆக்கிடுவாங்க..... என்று தனக்கு தானே தைரியத்தை கூட்டி கொண்டு சத்தம் கேட்காதவாறு வேறு பக்கமாக செல்ல ஆரம்பித்தவளின் கண்களில் பாழுங்கிணறு நிலா வெளிச்சத்தின் உதவியால் தென்படவும் நின்றாள்...

அய்யோ அந்த ரவுடி கும்பல் இந்த பக்கம் வர மாதிரி கேட்கிறதே என்ன செய்யலாம்.... ஹேய் நீ இப்ப பொறுமையாக சிந்தித்து செயல்பட உனக்கு நேரமிருக்கா என்று மனசாட்சி எக்காளமிடவும்..........

ஏய் சும்மா இரு என்று மனசாட்சியை அடக்க......

மனசாட்சி: உன்னால உயிரை விட்டாங்களே அவங்க எப்படி துடிச்சிருப்பாங்க.........

இல்ல இல்ல நான் எதுவும் பன்னல... பன்னல.... பன்னல என்று தன்னுடைய நிலை  இருக்குமிடம் மறந்து மையிருட்டான வேலையில் கத்தவும் இவளுடைய குரல் நாலாக்கமும் எதிரொலிக்க ரவுடிகள் ஒடி வரும் சத்தமும்.....

டேய் வேகமாக வாங்கடா அவ இங்கே தான்டா இருக்கா  என்று அந்த இடத்திற்கு நெருங்கும் வேளை படார் என்று தண்ணீரில்.....யாரோ விழும் சத்தம் கேட்டு அந்த இடத்தை நெருங்கிய வேளையில் கூட வந்தவன் தவறி விழ போக பாழும் கிணற்றில் விழும் முன் தாங்கி பிடித்தனர்.....

தலைவா அவ இந்த கிணத்துல  கண்டிப்பாக விழுந்துருப்பா என்றதும்...

இல்லடா எனக்கு சந்தேகமா இருக்கு... தலைவன் சொல்லவும்......

நம்ம கிட்ட மாட்டி சாவுறதுக்கு இந்த கிணத்துல குதிக்கிறது சரினு விழுந்து இருப்பா என்று மற்றொருவன் சொல்லவும்.....

அவ பொனத்த பாக்கிற வரைக்கும் நான் நம்ப மாட்டேன்... கோபமாக கத்தினான். பிறகு  கூட்டத்தாரிடம் திரும்பி உங்கள்ள ஒருத்தன் இந்த இடத்தில இருங்க விடிஞ்சதும் உள்ள இறங்கி அவ உடம்பு கிடைச்சா தான் எனக்கு நிம்மதி இல்லனா என்ன நடக்கும் என்று நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று எச்சரித்து விட்டு ஒருவனுக்கு இருவராய் அங்கே நிறுத்திவிட்டு சென்றனர்.......

அவர்கள் பேசிய அனைத்தையும் மரத்தின் மேலே இருந்தவாறு கேட்டவள் இருவர் அங்கே இருக்கபோவதை எண்ணி கலங்கினாள்.....

தண்ணீரில் விழுந்து இறந்திருப்பாள் என்று நினைத்து சென்றுவிடுவார்கள் என்று நான் போட்ட கணக்கு தப்பாகி விட்டதே இனி நம்ம கதி அவ்வளவு தான் என்று நினைத்தவள் தப்பிக்க வேண்டும் என்ற என்னத்தை கைவிட்டு  எப்படியும் விடிந்ததும் நாம சாக போகிறோம் என்று எண்ணியவள் தன்னை தன் நிலையை மறந்து பேய் சிரிப்பு சிரித்தாள்... ஹ...ஹ..... ஹா......ஹா...,ஹா......😁😁😁😁

நிசப்தமாக இருந்த இருளில் திடிரென கேட்ட சிரிப்பு சத்தம் காட்டில் எங்கும் எதிரொலிக்க காவலுக்கு இருந்த இருவரும் ஆ.... ஆ...... ஆ..... என்று அலறியடித்து கொண்டு ஆங்காங்கே கீழே விழுந்து ஓடினர்......😂😂😂

கதை போற ட்ராக் பிடிச்சிருக்கா ஏதேனும் பிழைகள் இருந்தால் மறக்காமல் சொல்லுங்க ❕❕❕

ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)Onde histórias criam vida. Descubra agora