ஆரம்பம் -1

Start from the beginning
                                    

என்னடி ஒன்றுமே சொல்லாமல் இருக்க -சவி

என்ன சொல்ல சொல்ற காட்டமாக கேட்டாள் வாணி

நொடியில் தன்னை சரி செய்தவள் முகத்தில் புன்னகையுடன் போதும் வாணி நீ சோகமாக இருக்கிறது மாதிரி நல்லா தான் ஆக்டிங் பண்ற சோ சீனை மாத்துப்பா ....

அடிங் சும்மா சந்தோசமாக வந்தவளை ஃபீல் பண்ண வச்சுட்டு ஓவறா பேசுற என்று துரத்த ஆரம்பித்தாள் வாணி....

எங்கிருந்தோ சங்கமித்ரா.... சங்கமித்ரா
என்று அழைக்கும் குரல் கேட்டதும் அப்படியே திக்பிரமை பிடித்து நின்றாள்.

சங்கமித்ரா அம்மா எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தண்ணில காலை வைக்காதே சளி பிடிக்கும் ஃபீவர் வரும் என்று சொல்லி அழைத்து போகவும் பின்னே செல்ல போன சவியை தடுத்தாள் வாணி.

எங்க போறா.....

அந்த அக்காட்ட போகனும் விடு வாணி என்று கெஞ்சினாள் சவி...

சவி ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப்.

நோடி வாணி அவங்க கிட்ட முக்கியமான விசயம் மட்டும் சொல்லி விட்டு வந்து விடுகிறேன்...

வேண்டாம்... வேண்டாம் சவி இதுக்கு முன்னாடி நடந்தத நான் இன்னும் மறக்கல இங்கே இருந்து வரை போதும் வா போகலாம் என்று கையை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக போனாள் அன்று நடந்தது தானாகவே நினைவு வந்தது.

ஒருமுறை கடற்கரைக்கு வந்த சவியும் வாணியும் சந்தோசமாக விடுமுறையை கொண்டாடினர் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில்.....

சங்கமித்ரா ....சங்கமித்ரா ...என்று ஒரு பெண்ணின் அம்மா அழைக்கவும் அருகில் சென்றவள் ..

ஆன்ட்டி என்று அழைக்கும் குரல் கேட்டு திரும்பியவர் சவியை பார்த்து என்னம்மா....

ஆன்ட்டி இப்ப சங்கமித்ரானு கூப்பிட்டது....

ஆமாம் மா என் மக தான் சங்கமித்ரா என்றதும்...

ஆன்ட்டி இந்த பெயர் வேண்டாம் மாத்திடுங்க வேண்டாம் ஆன்ட்டி அப்புறம் நீங்க உங்க பெண்ணை விட்டு பிரிஞ்சிடுவீங்க ப்ளீஸ் ஆன்ட்டி இந்த பெயர் வேண்டாம் என்று மறுபடியும் அவர் தோலில் கையை வைத்து உலுக்கவும் வலியில் கத்தினார்.

சத்தத்தை கேட்டு அருகே வந்தவர்கள் சவியை அவரிடம் இருந்து பிரிக்க முயலவும் இன்னும் அழுத்தமாக பற்றிக் கொண்டு சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்க அந்த பெண்மனியின் கணவர் இவளை அடிக்கவும் ஆரம்பித்து விட்டார் ....

அவர்களிடம் இருந்து சவியை காப்பாற்ற வாணிக்கு போராட்டமாக இருந்தது.

சவியின் சிவந்த மேனியில் ஆங்காங்கே இரத்தகட்டுகளும் வீக்கம் என இருக்கவும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை கூட தடுக்காமல்

சவி....சவி... என்று அழைக்கவும் திரு திருவென முழித்தாள்

ஏன்டி இப்படி பண்ண பாருடி எப்படி அடிச்சிருக்காங்க என்றதும்...

அந்த பெயர் வேண்டாம் ...அந்த பெயர் வேண்டாம் ஒன்றை மட்டுமே சொல்லி கொண்டு இருந்தாள்.

ஹேய் இப்படி பண்ணாத உன்னை காப்பாற்ற தான் பைத்தியம் என்று சொல்ல வேண்டியதா போய்ட்டு.... இதுவே என்ன கொல்லுதுடி இப்படி புலம்புறத நிறுத்துமா....

இல்லடி அந்த அம்மாட்ட சொல்லி பெயரை......வாணியின் முறைப்பில் கடற்கரை மணலில் அமர்ந்தவள் முழங்காலை கட்டி கொண்டு அழுதாள்.

சவி ப்ளீஸ் அழாதடி....

எப்படி அழாம இருக்க முடியும் என்ன மாதிரியான தலைமறைவு வாழ்க்கை அந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாதுடி ....இந்த நான்காண்டுகளில் அம்மா அப்பா உயிரோட இருக்காங்களா என்று கூட தெரியாமல் வாழுற இந்த வாழ்க்கையை நினைச்சா தாங்க முடியல வாணி என்று அழுதாள்.

வேண்டாம் சவி எல்லாம் சரியாகிவிடும் நீ கவலைப்படாதே

எப்படி சரியாகும் என் ஒருத்திய காப்பாற்ற இரண்டு உயிர் போயிடுச்சே அந்த நினைப்பே என்ன கொல்லுதே
அவங்க உயிர் போக காரணமே நான் தானேடி இப்படி எல்லாரையும் பலி கொடுத்து தான் நான் உயிர் வாழனுமா .....பதில் சொல்லு ஏன் இப்படி முழிக்கிற என்று இதுவரைக்கும் அழுதவள் கோபத்துடன் வீற்றிருக்கும் காளியை போல காட்சியளித்தாள் சவி.....

ப்ளீஸ் என்னோட இந்த கதை பிடித்து இருந்தால் படிங்க குறைகள் இருந்தால் மறக்காமல் சொல்லுங்க.....

ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)Where stories live. Discover now