முள்ளும் மலரும் 20

11.4K 307 148
                                    

" ஒன்னுமில்ல.. ரிலாக்ஷ் நாங்க வந்துட்டோம்ல.. பயப்படாத " என கிருஷ் ஆறுதல் சொல்லியும் மீரா அவனை விடுவதாக இல்லை..

காவலாளிகள் ஆரவைக் கைது செய்ததும் கிருஷின் குடும்பத்தார் அங்கே வந்ததும் என எதையும் உணரும் நிலையில் மீரா இல்லை..

" கிருஷ் என்னால தான் என்னோட அப்பா அம்மாவ அவன் கொன்னான்.. என்னால எல்லாருக்குமே ஆபத்து தான்.. ஹையோ ராமும் நிலாவும் என்னை விட்டுப் போயிருவாங்களோ " எனத் தன்பாட்டிற்கு புலம்பிக் கொண்டே மயக்கம் அடைந்தாள்.

மன அழுத்தத்தால் வந்த மயக்கம் தான் என்பதால் அவளுக்கு  நிம்மதியான உறக்கம் வேண்டும் என எண்ணி அவளை உறங்க வைத்தனர்.

மீரா கண்முழித்துப் பார்க்கும்போது கிருஷுன் வீட்டில் இருந்தாள். அருகே நிலா தனது உடைகளை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் அசைவு தெரிந்ததுமே அவளிடம் வந்த நிலா " மீரா எழுந்துட்டியா.. இந்தா இந்த ஜூஸக் குடி " என்று பழபானத்தை எடுத்துக் கொடுத்தாள்..

" நிலா நாம ஏன் இங்க இருக்கோம் " என்ற கேள்விக்கு " அம்மா தாயே எழுந்தவுடனே ஆரம்பிக்காத.. கீதா ஆன்ட்டி தான் அந்த வீட்ல தனியா இருக்க வேணாம்னு இங்க வரச் சொல்லி்ட்டாங்க.. அது மட்டுமில்ல உனக்கும் கிருஷ் மாமாக்கும் கூட இன்னும் வொன் மன்த்ல மேரேஜ்.. டேட் கூட பிக்ஷ் பண்ணியாச்சு.. ஸோ கல்யாணப் பொண்ணு பிரஷா இருந்தாத்தான் பார்க்க நல்லாருக்கும்.. அதுக்கு இதைக் குடி மீரா "என்று அவள் டம்ளரைக் கையில் திணித்தாள்.

" யாரைக் கேட்டு முடிவு பண்ணாங்க " என்றவளுக்கு தற்போது தான் ஆரவின் துரோகம் நினைவிற்கு வந்தது..எப்படி  சரியாக கிருஷுடன் ராமும் உதயும் வந்தார்கள்.. அப்படியென்றால் ராமிற்கு அனைத்து உண்மையும் தெரிந்து விட்டதா என சந்தேகம் எழுந்தது..

" நிலா ராம் எங்க.. அவன் என்மேலக் கோபமா இருக்கானா " என்று பாவமாகக் கேட்ட மீராவினைப் பார்த்து சிரித்தவள் " மீரா நீ அநியாயத்துக்கு உன் தம்பிய நம்புற.. நான் அன்னைக்கே சொன்னேன்.அவன் சரியான பிராடு பையன்னு நீ கேட்டியா.. " என்றாள் 

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Unde poveștirile trăiesc. Descoperă acum