முள்ளும் மலரும் 19

7.1K 246 83
                                    

இரவு உணவை சமைத்து முடித்துவிட்டு நிலாவினை சாப்பிட அழைத்தவள் அப்போதுதான் ராம் வீட்டில் இல்லை என்பதைக் கவனித்தாள்.

" நிலா ராம் எங்கே " என்ற கேள்விக்கு " அவன் ஈவ்னிங்கே பார்க் போரேனு சொல்லிட்டுப் போனான்.. வந்துடுவான் மீரா.. வா நாம சாப்பிடலாம் " என நிலா அலட்சியமாகக் கூற, அப்போதுதான் ராமின் கவலையான முகம் நினைவு வந்து அவளை இம்சித்தது.

நிலாவினை கதவினை உள்புறமாகத் தாளிட சொல்லிவிட்டு ராமைத் தேடிப் போனாள் மீரா.. அவளுக்கு அதிகம் தொல்லை தராமல் அருகிலிருந்த பூங்காவிற்கு வெளியே சோகமாக அமர்ந்திருந்தான். அவனை இவ்வாறு பார்த்தவுடனே உயிரேப் போனது மீராவிற்கு..

அவனிடம் வேகமாக சென்று " ராம் என்னாச்சுடா.. ஏன்டா இப்படி உக்கார்ந்திருக்க.. " அவன் தோள்தொட்டு உலுக்க,

" நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுக்கா.. அப்போதான் நான் வீட்டுக்கு வருவேன்.. " என்றான் அவளைப் பார்க்காமல்

ராம் திடீரென்று இப்படிக் கூறுவான் என எதிர்பாராத மீரா ஒரு நொடி தடுமாறினாலும் " ராம் என்னடா சின்னப் பையன் மாறி பேசிட்டு இருக்க.. எதுனாலும் வீட்டுக்குப் போய் பேசலாம்டா.. வாடா நிலா அங்க தனியா இருக்கா.. " என அவள் கெஞ்ச,

அதில் மனமிறங்காதவன் " நீ சரின்னு சொல்லு.. இல்லைனா இங்க இருந்து கிளம்பு.. " என்று உறுதியாக சொல்லவும்

ராமின் பிடிவாதத்தையும் கோபத்தையும் இதுவரை காணாதவள் அதிர்ந்து போனாள்..
" இப்போ அதுக்கென்னடா அவசியம்.. நீயும் நிலாவும் படிப்ப முடி" என அவள் முடிப்பதற்குள் " அப்போ என்ன நேரா அறுபதாங் கல்யாணம் பண்ணப் போறியாக்கா.. இப்போ உனக்கு வயசென்ன ஆகுது.. இந்நேரம் நம்ப அப்பா அம்மா இருந்தா உன்னை சும்மா விட்ருவாங்களா.. ப்ளீஷ்கா " என பதிலுக்கு அவனும் கெஞ்ச,

" அந்த வீட்ல யாராச்சும் எதாவது என்னைப் பத்தி சொன்னாங்களாடா.. ஏன்டா திடீர்னு இப்படி அடம்பிடிக்கற.. அதென்ன உடனேவா பண்ண முடியும். நாம இருக்குற நிலைல யார்க்கும் பாரமா நாம இருக்கனுமாடா.. " என்று கீதா ஆன்ட்டி பேசியதை மனதில் வைத்துக் கொண்டு சொல்ல,

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Where stories live. Discover now