முள்ளும் மலரும் 9

6.7K 230 40
                                    

மாலை பள்ளி முடிந்ததும் ராம் நிலாவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.. அவள் வந்தததும் கைப் பிடித்து இழுத்துச் சென்றவனை "டேய் விடுடா.. இன்னைக்கு உனக்கு வேலையில்ல.. ஏன்டா எங்கூட வர  " எனக் கத்திக் கொண்டே வந்தவளை முறைத்தவன் " உனக்கு புது வீட்டுக்கு போகத் தெரியாதுனு கூடவந்தா சீன் போடற,. பேசாம வந்திரு.. இல்லை சாக்கடைல தள்ளிவிட்ருவேன்" என்றான்..

அவனிடம் எப்படி பொய் சொல்வது என யோசித்தவள் " அது ரெண்டு தெரு தள்ளிதான இருக்கு.. நான் போயிக்குவேன்.. நீ கராத்தே கிளாஷ்க்கு விசாரிச்சிட்டு வா.." என்றாள் பதற்றமாக,

அவள் பதற்றத்தில் எதையோ புரிந்து கொண்டவன் " சரி போ " என்றான்.. அவள் சென்ற பிறகு தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அவளைப் பின் தொடர்ந்தான்.

அவள் செய்த செயலைப் பின்னிருந்து பார்த்தவனது கண்கள் சிவப்பைத் தத்தெடுத்தது.

புது பிளாட்டில் பொருட்களை ஓரமெடு்த்து வைத்தவள் சமைக்கத் துவங்கியிருந்தாள். நிலாவின் கைகளை தரதரவென்று இழுத்துவந்தவன் " அக்கா இங்க வா" எனக் கத்தினான்..

" டேய் ப்ளீஷ்டா மீராட்ட சொல்லாத " அவள் கெஞ்சியும் மனமிறங்காதவன் "ஓங்கி கன்னத்தில் அறைந்தான்.

" ராம் எதுக்குடா அவள அடிக்குற " என்று அதட்டிய மீராவின் இடுப்பை ஓடிச் சென்று  கட்டிக் கொண்டவள் " அழுகாதடி நான் கேட்கிறேன்.. எனக்குத் தெரியும் என் நிலா தப்பு பண்ண மாட்டா " என்றதும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

"அப்போ நான் பொய் சொல்றனா அக்கா " என்றதும் அவனையும் தன் தோளின்மேல் சாய்த்துக் கொண்டு
" உன் மேலயும் எனக்கு நம்பிக்கை இருக்குடா. இருந்தாலும் நான் தலை குனியற மாறி நிலா எப்போதும் நடந்துக்க மாட்டா.. அப்படி தான நிலா " என்றாள் மீரா

ராம் அவர்களது பாசப்பிணைப்பைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த பேக்கைத் தூக்கிப் போட்டவன் சன்னலோரம் சென்று நின்றுகொண்டான்.

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Where stories live. Discover now